வரவிருக்கும் தேர்தலில் மோடியை எந்த கூட்டணியாலும் வெல்லமுடியாது என்று டில்லியில் நடந்த பாரதிய ஜனதா தேசிய செயற்குழு கூட்டத்தில் பா.ஜ., தலைவர் அமித்ஷா பேசுகையில் குறிப்பிட்டார்.
டில்லி ராம்லீலா மைதானத்தில் நடந்துவரும் 2 நாள் பா.ஜ., செயற்குழு கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது:
பிரதமர் மோடி ஆட்சியில் அமர்ந்த நாள் முதல் பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்ற பட்டுள்ளது. ஒருவருடத்தில் 60 கோடி பேருக்கு வங்கிகணக்கு துவக்கப்பட்டுள்ளது. ஆயுஷ்மான் திட்டத்தில் 50 கோடி பயன்பெற்றுள்ளனர். பா.ஜ.க, அரசு வருவதற்கு முன்னர் பாதுகாப்பற்ற நிலை இருந்தது.
பாகிஸ்தானில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தி வெற்றிகரமாக முடித்தார். இஸ்ரேல், அமெரிக்காதான் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியிருக்கிறது. தேசியபாதுகாப்பு எங்களின் முக்கிய இலக்கு. மோடி அரசாட்சியின் கீழ் பயங்கரவாதம் கட்டுப்படுத்தப்பட்டது. குடிமக்கள் சட்டம் இயற்ற ராகுல் எதிர்ப்பு தெரிவித்தார். அவரின் உண்மை நிலை என்ன என்பதை அவர் தெரிவிக்கவேண்டும். கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பல்வேறு ஊழல்கள் நடந்துள்ளது. தாயும், மகனும் ஜாமினில் உள்ளனர்.
ஆதாரம் இல்லாமல் மோடி மீது எதிர்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். பார்லி.,யில் பாதுகாப்புதுறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தக்க பதிலடி கொடுத்தார். அயோத்தியில் ராமர் கோயில்கட்ட பா.ஜ., விரும்புகிறது.
மோடியை யார் ஒருவராலும் வீழ்த்திடமுடியாது, இதனால் பலரும் கூட்டணி சேர்ந்துள்ளனர். இது எங்களுக்கு பெருமைதான். இந்த மெகாகூட்டணி சுயநலமுடையது. எதிரிகள் அனைவரும் ஒன்று சேர்ந்துள்ள அணி கொள்கை இல்லாதது. எந்த மெகாகூட்டணி அமைத்தாலும் மோடியை வெல்லமுடியாது. வளர்ச்சி பாதையில் மோடி இந்தியாவை அழைத்து செல்கிறார். வரும் 2019ல் மோடியே ஆட்சியை பிடிப்பார்.
இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ... |
இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ... |
1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.