விவசாயிகளின் கடன்களை தள்ளுபடிசெய்வது அவர்கள் கண்களில் தூசியைவீசுவது போன்றது.என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திரமோடி நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி மேற்கு வங்கத்தில் தனது பிரசாரத்தை தொடங்கினார். அங்குள்ள தாகூர்நகர், துர்காபூர் ஆகிய 2 இடங்களில் ‘ஜனநாயகம் காப்போம்’ என்ற தலைப்பில் நடந்த தேர்தல்பிரசார கூட்டங்களில் அவர் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
எங்களது அரசியல் எதிரிகள் இடர்களை சந்தித்து வரும் விவசாய சமுதாயத்தை கடன் தள்ளுபடி என்ற பெயரில் தவறானவழியில் கொண்டு செல்கிறார்கள். விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வது உண்மையில் அவர்கள் கண்களில் தூசியைவீசுவது போன்றது.
மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ள திட்டத்தின்படி விவசாயிகள் அரசுக்கு செலுத்தவேண்டிய வரிகள் எதுவும் நிலுவையில் இல்லையென்றால் பணம் அவர்களது வங்கிகணக்கில் நேரடியாக செலுத்தப்படும். கர்நாடகாவில் கடனை திருப்பி செலுத்தாத விவசாயிகள் போலீசாரின் கோபத்துக்கு ஆளாகநேரிட்டது.இங்கு மைதானத்துக்கு உள்ளே வரமுடியாத அளவுக்கு நீங்கள் திரண்டு வந்திருப்பதை பார்க்கிறேன். இந்தகூட்டத்தை பார்த்த பின்னர் வங்காளம் ஒருமாற்றத்தை விரும்புகிறது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். உங்களை பார்த்த பின்னர்தான் மம்தா பானர்ஜியும் அவரது கட்சியும் ஏன் வன்முறையில் ஈடுபடுகிறது என்பது எனக்கு புரிகிறது.
மத்திய அரசின் பட்ஜெட் ஒருவரலாற்று முயற்சி. விவசாயிகள், தொழிலாளர்கள், நடுத்தர வர்க்கத்தினர் ஆகியோரின் நலனுக்கான பட்ஜெட். இந்தபிரிவினர் பல ஆண்டுகளாக உதாசீனப்படுத்தப்பட்டு வந்தனர். மத்திய அரசு குடியுரிமை சட்டத்திருத்தம் கொண்டுவந்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் இதற்கு ஆதரவு தெரிவிக்கவேண்டும்.சுதந்திரத்துக்கு பின்னர் பல ஆண்டுகளாக அரசுகள் கிராமங்களை புறக்கணித்து வந்தன. ஆனால் புதிய இந்தியாவுக்கான விழாக்கள் இங்குநடைபெற நீண்டகாலம் இல்லை. இந்தியாவின் முன்னேற்றமே கிராமங்களின் அடிப்படையில்தான் அமைந்துள்ளது. ஜனநாயகத்தை காலில் போட்டு மிதித்த முந்தைய கம்யூனிஸ்டு அரசு சென்ற பாதையிலேயே மம்தாபானர்ஜி அரசும் செல்கிறது.இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
294 கிலோ மீட்டர் ரெயில்வே பாதை மின் மயமாக்கல் உள்ளிட்ட சில திட்டங்களையும் அவர் அங்கு தொடங்கி வைத்தார். தலித்மாதுவா சமுதாயத்தினரின் கோவிலுக்கும் சென்று வழிபட்டார்.
வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ... |
கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ... |
இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.