எங்கள் ஆட்சியில் உள்நாட்டிலும் சரி வெளிநாட்டிலும் சரி, நாங்கள் உண்மையை மட்டுமேபேசுகிறோம். நாடாளுமன்றத்திலும் சரி, நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் சரி வாய்மையுடன் செயல்படுகிறோம். ஆனால், உங்களிடம் (எதிர்க்கட்சிகள்) உண்மையை உணர்ந்து புரிந்துகொள்ளும் திறன் குறைந்துவிட்டது.
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் நமது ராணுவத்தை பலவீனமான நிலையில் விட்டுச்சென்றனர். துல்லியத்தாக்குதல்’ போன்ற அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபடும் வலிமை இல்லாமல் இருந்தது. வீரர்களுக்கு குண்டுதுளைக்காத ஆடைகளைக் கூட அவர்கள் சரியாக வழங்கவில்லை.
ஆனால், நாங்கள் ராணுவத்தை வலிமைப்படுத்தியுள்ளோம். நமது விமானப் படை வலிமையுடன் திகழ்வதை காங்கிரஸ் விரும்பவில்லை. இதனை மிகவும் கடுமையான குற்றச்சாட்டாகவே நான் முன்வைக்கிறேன். ரஃபேல் விமான ஒப்பந்தம் ரத்தாகவேண்டும் என்பதே அவர்களது எண்ணமாக உள்ளது. இதனை யாருக்காக? எந்த நிறுவனத்துக்காக அவர்கள் செய்கிறார்கள்?.
ஊழல்கட்சிகள் இணைந்து ஏற்படுத்தும் கலப்படக்கூட்டணி மக்களுக்குத் தேவையில்லை. அதனை அவர்கள் ஏற்கவும் மாட்டார்கள். முழுப் பெரும்பான்மையுடன் அமையும் ஆட்சி எவ்வளவு சிறப்பாக பணியாற்றும் என்பதை இப்போதைய பாஜக கூட்டணி ஆட்சி மூலம் நாட்டுமக்கள் தெரிந்துகொண்டனர். கொல்கத்தாவில் ஒருங்கிணைந்த கலப்படக்கூட்டணி (எதிர்க்கட்சிகள் பொதுக்கூட்டம்), மக்களுக்குத் தேவையில்லை’.
வங்கிக் கடன்மூலம் மக்கள் பணத்தை சிலர் கொள்ளையடிக்க காங்கிரஸ் ஆட்சியில் அனுமதித்தார்கள். ரூ.9,000 கோடி (மல்லையா), ரூ.13,000 கோடி (நீரவ் மோடி, மெஹுல் சோக்ஸி) கொள்ளை யடித்தவர்கள் நாட்டைவிட்டு தப்பியோடினர். இப்போதைய, அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளால் அவர்கள் பதுங்குமிடத்தில் இருந்து வெளியேறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அரசியலமைப்பு சட்டத்தின் 356-ஆவது பிரிவை காங்கிரஸ்கட்சி பலமுறை தவறாகப் பயன்படுத்தியது. ஆனால், இப்போது அரசியலமைப்பு சட்ட அமைப்புகளை மோடி சிதைக்கிறார் என்று குற்றம்சாட்டுகிறார்கள். தேர்தல் ஆணையம் குறித்தும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்தும் பல்வேறு கேள்விகளையும், சந்தேகங்களையும் காங்கிரஸ் எழுப்பியது. ஆனால், மோடிதான் அரசியலமைப்பு சட்டஅமைப்புகளை சீர்குலைப்பதாக பிரசாரம் செய்கிறார்கள். நாட்டில் நெருக்கடி நிலையை அமல்படுத்தியதும், நீதித்துறையை கேள்விக்குள்ளாக்குவதும், திட்டக்குழுவை நகைச்சுவையாளர்கள் குழு என்று கூறியதும் காங்கிரஸ் கட்சிதான். ஆனால், மோடிதான் அதனைச் செய்கிறார்’ என்று விமர்சிக்கின்றனர்.
எனது தவறு என்ன?: ராணுவத்தளபதியை குண்டர்’ என்றதும், மத்தியில் ஆட்சியில் இருந்தபோது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி பலமாநில அரசுகளை கலைத்ததும் காங்கிரஸ் கட்சிதான். இதில் என்னுடைய குற்றம் என்ன? ஏழைக் குடும்பத்தில் பிறந்து, இவர்களுடைய (காங்கிரஸ்) வாரிசு அரசியலை எதிர்ப்பதுதான் எனது தவறா?
நமது தேசத்துக்கு சுதந்திரம் கிடைத்தவுடன் காங்கிரஸ் கட்சியை கலைத்துவிட வேண்டும் என்று மகாத்மாகாந்தி கூறினார். ஆனால், அப்போது அவரது வார்த்தைப்படி யாரும் நடக்கவில்லை. எனினும், இப்போது காங்கிரஸ் இல்லாத பாரதத்தை உருவாக்கும்வகையில் பாஜக செயல்பட்டு வருகிறது. மகாத்மாவின் கனவை பாஜக நிறைவேற்றும்.
அரசின் சாதனைகள்: நாட்டின் பொருளாதாரத்தை சர்வதேசளவில் 6-ஆவது பெரிய பொருளாதாரமாக உயர்த்தியது முதல், உள்நாட்டில் அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரவசதி அளித்தது வரை, பலசாதனைகளை மத்திய அரசு படைத்துள்ளது; வெளியுறவுக் கொள்கையை பொருத்தவரையில், ஒன்றுக்கு மற்றொன்று எதிரி நாடுகளாகக் கருதப்படும் இஸ்ரேல்-பாலஸ்தீனம், சவூதி அரேபியா-ஈரான் என அனைத்து நாடுகளுடன் சிறப்பான நட்புறவை நாம் பேணிவருகிறோம்.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மக்களவையில் வியாழக்கிழமை கொண்டுவரப்பட்டது. அப்போது பிரதமர் மோடி பேசியது.
எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ... |
கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ... |
முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ... |
Leave a Reply
You must be logged in to post a comment.