செயற்கைக்கோளை சுட்டுவீழ்த்தும் ‘மிஷன்சக்தி’

விண்ணில் செயற்கைக்கோளை சுட்டுவீழ்த்தும் ‘மிஷன்சக்தி’ என்ற சோதனை முயற்சியை வெற்றிகரமாக இந்தியா இன்று செய்து முடித்துள்ளது. இது குறித்து பிரதமர் நாட்டு மக்களுக்கு அறிவித்துள்ளார். அவர், “இந்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் இன்று மிகப்பெரிய சாதனையை செய்துள்ளது. பூமியின் வட்டப்பாதையிலிருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் விண்ணில் இயங்கி கொண்டிருக்கும் செயற்கைக் கோளை தாக்கி இந்தியா சாதனை படைத்துள்ளது. இதற்காக பயன்படுத்தப்பட்ட தொழில் நுட்பங்கள் அனைத்தும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது” எனக் கூறினார்.

இந்நிலையில் இந்தியாவிற்கு முன்பு இத்தகைய சோதனைகள் எந்தந்த நாடுகளில் நடத்தப்பட்டன என்பது குறித்து அறிந்துகொள்வது அவசியம். பிரதமர் மோடியே கூறியதைபோல மூன்று நாடுகள் இதனை சாதித்து காட்டியுள்ளன. அந்த மூன்றுநாடுகள் அமெரிக்கா, சீனா, ரஷ்யா. அந்த வரிசையில் இந்தியா இடம் பிடித்துள்ளது.

 

முதலில் அமெரிக்கா

1959ஆம் ஆண்டு அமெரிக்கா ‘போல்ட் ஓரியான் (Bold Orion)’ என்ற அணுசக்தி தொழில் நுட்பத்தின் மூலம் விண்ணிலுள்ள செயற்கைக்கோளை நெருங்கி சென்றது. அதன் பின்னர் 1985ஆம் ஆண்டு ஏஜிஎம்-135 உதவியுடன் அந்நாட்டின் ‘சோல்விண்டு பி78-1(Solewind)’ செயற்கைக்கோளை சுட்டு வீழ்த்தியது. மேலும் 2008ஆம் ஆண்டு ‘ஆபரேஷன் பர்ண்ட் ஃப்ரோஸ்ட் (Operation Burnt Frost)’ மூலம் எஸ்.எம்-3 ஏவுகணையை பயன்படுத்தி செயலிழந்த வேவுபார்க்கும் செயற்கைக்கோளை சுட்டுவீழ்த்தியது.

 

இரண்டாவது  ரஷ்யா

1970 ஆம் ஆண்டு ரஷ்யா விண்ணில் பிற நாடுகளின் செயற்கைக்கோளை சுட்டு வீழ்த்துவது தொடர்பான சோதனையை வெற்றிகரமாக நடத்திஇருந்தது. அதன்பின்னர் இந்த ஆண்டு பிஎல்-19 நியுடோல் (PL-19 Nudol) என்ற செயற்கைக்கோள் ஏவுகணை சோதனை செய்யப்பட்டது.

 

மூன்றாவது சீனா

2007ஆம் ஆண்டு சீனா‘ஃபெங்யூன்1சி’ (Fengyun 1C) என்ற வானிலை ஆராய்ச்சி செயற்கைக் கோளை சுட்டு வீழ்த்தியது. அதனால் விண்வெளியில் அதிகளவில் செயற்கைக்கோள் குப்பைகள் ஏற்பட்டதாக உலகநாடுகள் குற்றஞ் சாட்டியிருந்தனர்.

இந்த நாடுகளின் வரிசையில் இந்தியா தற்போது நான்காவது நாடாக விண்வெளிலுள்ள செயற்கைக் கோள்களை சுட்டு வீழ்த்தும் திறன் பெற்று சாதனை படைத்துள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சை

மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ...

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...

இயற்கையான வாழ்வு சில நியதிகள்

பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ...