காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், அதன் தலைவர்கள் தேசநலனுக்குப் பதிலாக சுய நலத்துக்கே முன்னுரிமை அளித்தனர்.
நமது நாட்டிற்கு செயற்கைக்கோள் அழிப்பு ஏவுகணையை உருவாக்கும் திறன் முன்பே இருந்த போதிலும், முந்தைய அரசுக்கு, அரசியல்திறன் இல்லாத காரணத்தால் அவர்களால் அத்தகைய ஏவுகணைச் சோதனையை நடத்த இயல வில்லை.
தற்போதைய எதிர்க்கட்சிகளுக்கு மக்கள் ஒருகாலத்தில் ஆட்சி அதிகாரத்தை வழங்கியிருந்தனர். ஆனால், தங்களுக்கு அளிக்கப்பட்ட பொறுப்புகளை சரியாகக் கையாள அவர்கள் தவறி விட்டனர்.
தற்போது அவர்கள் தேசத்தின் பாதுகாப்பு தொடர்பாக தவறான கருத்துகளை முன்வைக்கின்றனர். பாலாகோட் தாக்குதல் தொடர்பாக ஆதாரங்களை கேட்கின்றனர். அவர்கள் ஏன் ஆதாரங்கள் கேட்கவேண்டும்? ஏன் பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பேசவேண்டும்? எனது அரசுக்கு எந்தவொரு நெருக்கடியையும் தாங்கும் அரசியல்திறன் இருக்கிறது. தேசநலன் தொடர்பான விவகாரங்களில் எனது அரசு உடனடியாக முடிவெடுக்கிறது.
அந்த விவகாரங்களில் தாமதமாக முடிவுகள் எடுப்பதும் ஒருவிதத்தில் கிரிமினல் அலட்சியமாகும். எனது அரசு எதையும் உறுதிபடச் செய்வதில் நம்பிக்கை கொண்டுள்ளதே தவிர, எதற்காகவும் குழப்பம் அடைவதில்லை.
முன்பு இந்த நாட்டை நிர்வகித்தவர்கள் தங்ள் ஊழல்களால் தேசத்தின் வளர்ச்சிப் பாதையில் தடைகளை ஏற்படுத்தியுள்ளனர். அவர்களுக்கு சுயநலமே முக்கியமாக இருந்தது.
முந்தைய அரசின் ஆட்சியில் கருப்புப்பண விசாரணை தொடர்பாக சிறப்பு விசாரணைக்குழு அமைக்கும் முடிவு தாமதமாக மேற்கொள்ளப்பட்டது. ஆனால், எங்களது ஆட்சியில் முதல் அமைச்சரவை கூட்டத்தின்போதே, அதுதொடர்பான சிறப்பு விசாரணைக்குழு அமைக்கும் முடிவை மேற்கொண்டோம்.
வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் கருப்புப் பணத்தை மீட்டு வரும் நடவடிக்கையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சிறு முயற்சிகளையே மேற்கொண்டது. அது தொடர்பாக இதர நாட்டு அரசுகளுடன் பல வீனமான ஒப்பந்தங்களையே மேற்கொண்டது.
ஆனால், நாங்கள் ஆட்சிக்கு வந்தபிறகு மோரிஷஸ் உடன் மேற்கொள்ளப் பட்டிருந்த ஒப்பந்தத்தை சீரமைத்து வலுப்படுத்தினோம். ஸ்விட்சர்லாந்து இந்த ஆண்டுமுதல் இந்தியர்களின் கருப்புப்பணம் தொடர்பாக நிகழ்நேரத்தில் தகவல் அளித்து வருகிறது.
முந்தைய ஆட்சியில் 2ஜி, காமன்வெல்த், போஃபர்ஸ், அகஸ்டாவெஸ்ட்லேண்ட் போன்ற பல்வேறு ஊழல்கள் நடைபெற்றன. ஆனால் எங்கள் ஆட்சியில் அனைத்து ஒப்பந்தங்களும் வெளிப்படையான முறையில் மேற்கொள்ளப் படுகின்றன. பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான ஒப்பந்தங்களை (ரஃபேல்) ஆய்வுசெய்த உச்ச நீதிமன்றம், அதில் தவறேதும் இல்லை என்று கூறிவிட்டது.
காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் (ப.சிதம்பரம்) “ஏசாட்’ ஏவுகணைச் சோதனை நடத்தியதை ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்று கூறுகிறார். அவர் (சிதம்பரம்) ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் நீதிமன்ற விசாரணைக்கு செல்வதை வேண்டுமானால் ரகசியமாக வைக்கலாம்.
திவால் சட்டம் தொடர்பான விதிகளை அரசு உருவாக்கியபோது, அதனால் யாருக்கெல்லாம்பாதகம் ஏற்படுமோ அவர்களெல்லாம் என்னைத் தொடர்புகொண்டு கடும்நெருக்கடி அளித்தனர். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அக்கட்சித் தலைவர்களின் பரிந்துரையின் பேரில் வங்கிகளில் கடன்கள் வழங்கப்பட்டன. ஒருதொலைபேசி அழைப்பின் பேரில் கடன் அளிக்கப்பட்டது.
கடன்களை அடைப்பதற்காகவே கூடுதலாக கடன் வழங்கப்பட்டன. அந்த நடைமுறையை நாங்கள் மாற்றியுள்ளோம். தொழிலதிபர் ஒருவர் (நீரவ் மோடி) வங்கிக்கடன் மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள தொகையைக் காட்டிலும் அதிக மதிப்பிலான அவரது சொத்துகளை விசாரணை அமைப்புகள் முடக்கியுள்ளன.
சர்வதேச தளத்தில் முன்பு பாகிஸ்தானின் பிரசாரம் எதிரொலித்துவந்த நிலையில், தற்போது இந்தியாவின் கருத்துகளை கூறுவதற்கு சர்வதேச அரங்கில் இடம் கிடைத்துள்ளது .
தில்லியில், டிவி9 நிறுவனத்தின் புதியசெய்தி சேனலான “பாரத்வர்ஷ்’-ஐ தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியது
ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ... |
சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ... |
காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.