இந்திய பிரதமர் நரேந்திர மோடியை ஒப்பனை கலைஞர்கள் அழகுப் படுத்துவது போன்ற வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பரவிவருகிறது.
இந்தவீடியோ குறித்த விவரத்தில் , “தகவல் அறியும் உரிமை சட்டம் வழியாக பெற்ற தகவல்களில், பிரதமர் நரேந்திரமோடியின் ஒப்பனை செலவுகளுக்காக மாதந்தோறும் சராசரியாக 80 லட்ச ரூபாய் வழங்கப்பட்டதாக பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டன.
இந்த வீடியோ பேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் பல லட்சக்கணக்கான முறை பகிரப்பட்டுள்ளது. இதேசெய்தியோடு குருகிராம் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் இந்தகாணொலி பகிரப்பட்டுள்ளது.
ஆனால் இந்தவீடியோ குறித்த கருத்துகள் தவறானவை. இந்த வீடியோ உண்மையானதாக இருந்தாலும், தவறான சூழலில் இது பகிரப்பட்டுள்ளது. இந்தவீடியோவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவரது தனிப்பட்ட ஒப்பனை கலைஞரால் அழகுப்படுத்தப்பட வில்லை.
இந்தவீடியோ 2016ம் ஆண்டு மார்ச் மாதத்தில் எடுக்கப்பட்டது. மேடம் தசவுட்ஸ் வேக்ஸ் அருங்காட்சியகத்தை சேர்ந்த குழுவினர் தங்களின் அருங்காட்சியகத்தில் அமைத்துவருகின்ற மோடியின் மெழுகு சிலையின் மாதிரிக்கு, அளவுகள் மற்றும் பிற விவரங்களை எடுப்பதற்கு மோடியின் இல்லத்திற்கு வந்திருந்தபோது இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.
மேடம் தசவுட்ஸ் வடிவத்தையும் இந்தகாணொலியில் காணலாம். உண்மையான வீடியோ மேடம் துசாத்தின் யுடியூப் பக்கத்தில் உள்ளது என பிபிசி தெரிவித்துள்ளது.
2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ம் தேதி லண்டன் மேடம் தசவுட்ஸ் அருங்காட்சியகத்தில் மோடியின் வேக்ஸ்சிலை நிறுவப்பட்டது.
இந்திய பிரதமரின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மோடியின் ஒப்பனை அல்லது ஆடைகள் செலவுபற்றிய எந்தவொரு கேள்வியும் தகவல் அறியும் சட்டத்தில் கேட்கப்படவில்லை.
கல்விதகுதி, விடுமுறைகள், வைபை வேகம் மற்றும் மோடியின் தினசரி திட்டங்கள் போன்றவை கேட்கப்படும் பொதுவான கேள்விகளாகும்.
2018ம் ஆண்டு ஊடக தகவல்களின்படி, 1988ம் ஆண்டு தொடங்கி இந்திய பிரதமர்கள் அணிந்த ஆடைகளுக்கான செலவுகள்பற்றி தகவல் அறியும் உரிமை சட்ட செயற்பாட்டாளர் ரோகித் சப்கார்வால் கேள்வி கேட்டுள்ளார்.
இதில் அடல்பிஹாரி வாஜ்பேயி, மன்மோகன் சிங் ஆகியோரின் ஆடைகளுக்கான செலவுகளும் உள்ளடங்குகின்றன.
இவ்வாறு கேட்கப்பட்டுள்ள தகவல் தனிப்பட்டது என்றும், அலுவலக பதிவேடுகளில் இதற்கான தகவல்கள் இடம் பெறும் பகுதி இல்லை என்றும் பிரதமர் அலுவலகம் வழங்கியதகவலில் தெரிவித்துள்ளது.
பிரதமர் தனிப்பட்ட முறையில் செய்கிறசெலவுகள் அரசு நிதியில் இருந்து செலவிடப் படுவதில்லை என்றும் பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது என பிபிசி தமிழ் கூறி உள்ளது.
மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ... |
ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ... |
இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.