இது மோடியின் தேர்தல்!

2014 பாராளுமன்ற தேர்தல்முடிவுகளை இரண்டு அம்சங்கள் தீர்மானித்தன!

1- காங்கிரஸ் கட்சியின் மீதான ஊழல் புகார்களால் பரவி இருந்த
நாடு தழுவிய வெறுப்பு அலை!, காங்கிரஸ் கூட்டணியின் தோல்வி
நிச்சயிக்கப்பட்ட ஒன்றாக இருந்தது.

2. குஜராத் மாநிலத்தில்சிறப்பான ஆட்சியை நடத்தியவர் என்ற பின்புலத்தோடு — பாஜ கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கபட்ட நரேந்திர மோடி!

குஜராத் வளர்ச்சிபற்றிய கதைகளை ஏற்கெனவே கேள்விப்பட்டு இருந்த மக்களுக்கு மோடியின் தேசிய அரசியல் வருகை புதிய எதிர்ப் பார்ப்புகளையும் புதிய நம்பிக்கைகளையும் தோற்றுவித்தது.
காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு எதிராக திரண்டு இருந்த எதிர்ப்பு அலை
மோடி ஆதரவு அலையாக வடிவம் எடுத்தது!

அந்த பேரவையில் காங்கிரஸ் கட்சி மட்டுமின்றி முலயாம் சிங் யாதவின் கட்சி மாயா வதியின் கட்சி லாலு பிரசாத் யாதவின் கட்சி
சொளதாலாவின் கட்சி சரத் பவாரின் கட்சி என்று பல கட்சிகள் காணாமல் போய் விட்டன!

மோடியின் பெயரால் பாரதிய ஜனதாகட்சி பெற்ற வரலாற்று வெற்றியில் 50 சதவீத பங்கு காங்கிரஸ் ஆட்சியின் மீதான
அளப்பரிய வெறுப்புணர்வுக்கு இருந்தது!

2014 ம் ஆண்டின் வெற்றியை 50 சதவீதம் எளிதாக்கிய காங்கிரஸ் ஆட்சிக்கு எதிரான எதிர்ப்புஅலை என்கிறவசதி இந்த 2019 தேர்தலில் மோடிக்கு இல்லை!

2014 தேர்தலின் போது வாக்காளர்கள் வைத்த எதிர் பார்ப்பு மற்றும் நம்பிக்கை என்ற அம்சம் மட்டுமே இப்போது சோதிக்கத்தக்க நிலையில்
மிச்சம் இருக்கிறது!

* கடந்த ஐந்து ஆண்டுகளில் அரசு நிர்வாக அடிப்படையில் மோடி மேற்கொண்ட நடவடிக்கைகளில் பெரும் பாலானவை —
பாழடைந்த வீட்டைஇடித்து மாளிகை எழுப்புவது போன்ற
தலைகீழ் மாற்றங்கள்!

இந்த மாற்றங்களின் தன்மையை புரிந்துகொள்வதே கடினமான விஷயம்! இதன் பலன்கள் உடனடியாக கிடைப்பவை அல்ல!

பலன்கள் கிடைக்கத் துவங்கிய பிறகு நிரந்தரமான – தொடர்ச்சியானவளர்ச்சியை தரக்கூடியவை!இந்தியாவின் ஒட்டுமொத்த தோற்றத்தையும் மாற்றி அமைக்கக் கூடியவை! ஆனால் ,எதிர்காலத்திற்கான நிறைவை நோக்கி பயணிக்கும் ஆட்சி என்ற இலக்கணம் இந்திய வாக்காளர்களுக்கு அறிமுகம் இல்லாத ஒன்று!

அதனால் , புரிந்து கொள்ளப்படாமல் தோற்க்கப்படக் கூடிய ஆபத்து நிறைந்த ஆட்டத்தைத்தான் கடந்த ஐந்து ஆண்டுகள் மோடி விளையாடி இருக்கிறார்! அப்படியும்கூட மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் நேர்மறை செல்வாக்கோடு திகழ்கிறார் என்பதுதான் மற்ற அரசியல்வாதிகளில் இருந்து அவரை வித்தியாசப் படுத்துகிறது!

எதனால் மீண்டும் வெல்லும் நிலையில் இருக்கிறார் மோடி?

1- 2014 ல் வைத்த எதிர்பார்ப்பு இன்னும்நிறைவேறவில்லை என்றாலும்அவற்றை நிறைவேற்ற –உண்மையான அக்கறை கொண்டு இருக்கிறார்.அதற்காக கடுமையாக உழைத்துக் கொண்டு இருக்கிறார் என்று அவரது வாக்காளர்கள்நம்புகிறார்கள்!அதற்காக அவருக்கு மேலும் அவகாசம்தேவைப்படுகிறது என்று கருதுகிறார்கள். தரவேண்டும் என்று விரும்புகிறார்கள்.

2. அடித்தட்டு மக்கள் தங்களதுஅடிப்படைத் தேவைகளான எரிவாயு இணைப்பு கழிப்பறை சொந்த வீடு வங்கிக் கணக்கு போன்றவற்றை அரசியல் வாதிகளுக்கு கும்பிடு போடாமல், அதிகாரிகளுக்கு லஞ்சம் தராமல்பெறமுடியும் என்ற மாற்றத்தைமுதல் முறையாக வியப்பாக உணர்கிறார்கள்!

3. மதச்சார்பின்மையின் பெயரால் தங்களது அடையாளம் இழிவுபடுத்தும் படுகிறது என்ற ஆற்றாமையில் பெரும்பான்மை மக்களான ஹிந்துக்கள் தேசிய அளவில் தங்களுக்கு ஒரு தலைவன் கிடைத்து விட்டான் — அவனது தோல்வி நமது தோல்வி என்று கருதுகிறார்கள்!

இந்த ஹிந்து அடையாள வாக்காளர்களின்எண்ணிக்கை கடந்த ஐந்து ஆண்டுகளில்அதிகரித்து இருக்கிறது!

4. நீதித்துறைஅதிகார வர்க்கம் அறிவுஜீவிகள் என்று சொல்லப்படு கிறவர்கள் பத்திரிக்கைகள் டெலிவிஷன் சேனல்கள் இணையதள இதழ்கள் சிறுபான்மை அமைப்புக்கள் என்று பல திசைகளில் இருந்தும் மோடிக்கு எதிராக திட்டமிட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டுவதாகவும் -நம்புகிறார்கள்! அதற்கு பதிலடி தரும்வகையில் அவரை ஆதரிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்!

தன் மீதான இந்த நம்பத்தன்மையே தக்கவைத்து  கொள்வதற்காகவும் – வளர்த்துக் கொள்வதற்காகவும் கடந்த ஐந்து ஆண்டுகளாக மோடி கடுமையாக உழைத்து இருக்கிறார்! தன் மீது நம்பிக்கை கொண்டு வாக்களிக்க விரும்பும் வாக்காளர்களை வாக்குச் சாவடிக்கு அழைத்து வந்து ஓட்டளிக்க வைக்கும் வகையில் கட்சியின் கட்டமைப்பை வலிமையாக கட்டமைத்து — 24 மணிநேரம் × 365 நாள் இயங்கும் தேர்தல் தொழிற்சாலை போல கட்சியின் செயல்பாடுகளை மாற்றி அமைத்து இருக்கிறார்!

கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்திய ஆட்சி முறையின் தன்மையையும் இந்திய அரசியலின் போக்கையும் மோடி முற்றிலுமாக மாற்றி இருக்கிறார். அடுத்த ஐந்தாண் டுகளில் இந்த மாற்றம் வியப்பூட்டும் எல்லைகளை  தாண்டிசெல்லும்!அதற்கான அவசியம் ஆட்சியில் தொடர்வது! அது 2014 ம் ஆண்டைப் போல பாரதிய ஜனதா கட்சிக்கே அறுதி  பெரும் பான்மையோடு கிடைக்கிறதா அல்லது தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் துணையோடு கிடைக்கிறதா என்பது முக்கியமே அல்ல!

அப்படியே 2014 ல் கிடைத்த 282 தொகுதிகளில் பத்து அல்லது பதினைந்து தொகுதிகள் குறைவாக கிடைத்து ஆட்சி அமைந்தாலும்
இந்த ஆண்டின் இறுதிக்குள் பெரும்பான்மை இலக்கை பாரதிய ஜனதா கட்சி அடைந்து விடும்!

நன்றி வசந்தன் பெருமாள்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

தொட்டாற்சிணுங்கியின் மருத்துவக் குணம்

இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ...

அகத்திப் பூவின் மருத்துவக் குணம்

அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது.

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.