புதுடில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த்தை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமைகோரினார் மோடி. இதனை தொடர்ந்து ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த். வரும் மே-30 ம்தேதி பிரதமராக மோடி பதவி ஏற்பார் என தெரிகிறது.
முன்னதாக தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி எம்.பி.க்களின் ஆதரவுகடிதத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் அளித்தார் மோடி. அவருடன் பா.ஜ.க., தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் தமிழக முதல்வர் பழனிசாமி உள்ளிட்ட கூட்டணிகட்சி தலைவர்களும் ஜனாதிபதியை சந்தித்தனர்.
மோடி பதவி ஏற்புவிழாவில் உலக தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதியை சந்தித்த பின்னர் மோடி பேசியதாவது : ஆட்சி அமைக்க அழைத்த ஜனாதிபதிக்கு நன்றி . அனைவரும் ஒன்றாக இணைந்து புதிய உச்சங்களை தொடுவோம். விரைவில் புதிய அமைச்சர்களின் பட்டியல் ஜனாதிபதியிடம் அளிக்கப்படும். புதிய அரசு பல்வேறு நல்லதிட்டங்களை விரைவில் செயல்படுத்தும் .என கூறினார்.
மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ... |
நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ... |