வாரணாசி தொகுதி மக்களை சந்தித்து நன்றி

பாராளுமன்ற தேர்தலில் பாஜக அமோகவெற்றி பெற்றதைத் தொடர்ந்து மோடி வருகிற 30-ந்தேதி மீண்டும் பிரதமராக பொறுப்பு ஏற்க உள்ளார்.

இதையொட்டி அவர் நேற்று குஜராத் சென்று தனதுதாயை சந்தித்து ஆசிபெற்றார்.

பிரதமராக பதவி ஏற்பதற்கு முன்பு வாரணாசி தொகுதி மக்களை சந்தித்து நன்றிதெரிவிக்கவும் மோடி முடிவுசெய்தார். வாரணாசி தொகுதியில் இருந்து 2014-ல் எம்.பி.யான மோடி மீண்டும் இந்த தடவையும் அங்கு போட்டியிட்டு 2-வது முறையாக எம்பி.யாகி உள்ளார்.

முதல் தடவை வாரணாசி தொகுதியில் மோடிக்கு சுமார் 6 லட்சத்து 60 ஆயிரம்வாக்குகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. வாரணாசி தொகுதியில் உள்ள அனைத்து தரப்பினரும் மோடிக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். எனவே அவர்களுக்கு நன்றிதெரிவிக்க மோடி வாரணாசி சென்றார்.

மோடி வருகையை முன்னிட்டு உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் நேற்று மாலை வாரணாசி சென்று தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து இருந்தார். மோடி இன்று காலை வாரணாசி வந்ததும் அவரை வரவேற்று காசிவிசுவநாதர் ஆலயத்துக்கு அழைத்து சென்றார்.

காசி விசுவநாதர் ஆலயத்தில் மோடி சிறப்புவழிபாடுகள் செய்தார். விசுவநாதருக்கு தன்கைப்பட அபிஷேகம் செய்தவர் தீபாராதனையும் காட்டி வழிபட்டார்.

இதைத் தொடர்ந்து வாரணாசியின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள தீன்தயாள் உபாத்யாயா மையத்துக்கு செல்லும் மோடி அங்கு பாரதிய ஜனதா நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் பேசிய மோடி, சில மாநிலங்களில் தங்களது அரசியல் காரணங்களுக்காக நூற்றுக் கணக்காண பாஜக தொண்டர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இப்படி பாஜகவினர் மீதான அரசியல் தீண்டாமை நாளுக்கு நாள் அதிகரித்தது. ஒருசில இடங்களில் பாஜக என்ற பெயரே தீண்டாமை சூழலை உருவாக்கும் வகையில் இருந்தது.

மேற்குவங்கம், கேரளா மற்றும் காஷ்மீரில் எதற்காக பாஜக பிரமுகர்கள் கொல்லப்படுகின்றனர்? இது ஜனநாயகத்திற்கு எதிரானது மற்றும் வெட்கக் கேடானது. ஆனால் இன்று, ஒரு கட்சி நிம்மதியாக, ஜனநாயக முறையில் மூச்சு விடுகிறது என்றால் அது பாஜக தான் என்று அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

பட்டினிச் சிகிச்சை

இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ...

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...

மனதை ஒருமைப்படுத்துதல்

தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ...