வாஜ்பாய் வசித்த அரசு பங்களா குடியேறுகிறாரா அமித்ஷா?

முன்னாள் பிரதமர் அடல்பிஹாரி வாஜ்பாய், மத்திய டெல்லியில் உள்ள கிருஷ்ண மேனன் மார்க்பகுதியில் உள்ள அரசு இல்லத்தில் வாழ்ந்துவந்தார். 2004-ம் ஆண்டு வாஜ்பாய் பிரதமாக இருந்தபோது அந்த வீட்டுக்குக் குடியேறினார். சுமார் 14 ஆண்டுகளாக வாஜ்பாய் முன்னாள் பிரதமர் என்ற முறையில் அங்கு வாழ்ந்துவந்தார்.

வாஜ்பாய் இறந்த பிறகு, அவரது குடும்பத்தினர் அந்தவீட்டை சென்ற ஆண்டு ஆகஸ்டு மாதத்திலேயே கண்ணியமான முறையில் காலிசெய்து கொண்டு வேறு இடத்துக்குச் சென்றுவிட்டனர்.

தற்போது அந்த வீட்டுக்கு மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக-வின் தேசியத் தலைவருமான அமித்ஷா குடியேற உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் வாஜ்பாயின் வீட்டை பார்வையிட்ட அமித்ஷா, அங்குதான் வசிக்கவேண்டும் என விருப்பப்பட்டு, வீட்டில் சில மாற்றங்களைச் செய்யக் கூறியுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகின. வாஜ்பாய் வசித்த அந்த இல்லத்தை பற்றி அவர் கேள்விப்பட்டதைவிட நேரில் பார்த்த சுவாரசியங்கள்தான் அவருக்கு இந்த வீட்டை பிடித்துப் போனதற்கு காரணமாம்.

அங்கு குடியிருந்த வாஜ்பாய் தான்வாழ்ந்து வந்த 14 ஆண்டுகளில் சிறப்பாக பராமரித்ததுடன், தன ரசனைக்கேற்ப அதிக செலவில்லாமல் சில மாற்றங்களை செய்துகொண்டார் என கூறப்படுகிறது. குறிப்பாக ஒரு தலைவராக மட்டுமன்றி, ஒரு சிறந்த கவிஞராகவும் விளங்கியவர் வாஜ்பாய், அதுவும் இயற்கை கவிஞர் அவர். அவருடைய பாடல்களில் பெரும்பாலும் அழகிய மரங்களும், நீல வானமும், பச்சைப் பசேலென்ற செடி கொடிகளும், காலை கதிரவனின் அழகும், அந்திவானத்து ரம்மியங்களும் ரசனை மிக்க வருணனைகளாக இருக்கும். அந்த வகையில் தன்மரணம் வரையில் அவருக்கு உகந்ததாக அமைந்த மிகப்பெரிய தோட்டவீடு இது.

கிட்டத்தட்ட 3 ஏக்கர் பரப்பளவு கொண்ட வீடு . (அதாவது 60 கிரவுண்டு நிலம்.) நிலத்தின் பரப்பளவுடன் ஒப்பிடும்போது வீடு என்னமோ சிறியதுதான். 7 படுக்கை அறைகள் கொண்டவீடாக இருந்தாலும் வீட்டை சுற்றி இருந்த இடத்தை ஓர் அழகுமிக்க பிருந்தாவனம் போல பராமரித்து வைத்திருந்தார் வாஜ்பாய். அதாவது காடுபெரிது அதில் வீடு சிறிது என்ற தோரணையாக இருந்தது பங்களா. டெல்லியில் உள்ள விஐபி க்களில் நிறைய பேருக்கு பலவிதமான நவீன வசதிகளுடன் கூடிய பங்களாக்கள் அமைந்திருந்தாலும், வாஜ்பாயி போல இயற்கை அழகுடன் அந்த அரசு பங்களாவை கவனமாக பராமரித்தவர்கள் யாரும் இருக்க முடியாது என கூறுகிறார்கள்.

தன்னை சந்திக்கவரும் மிகநெருங்கிய அரசியல் நண்பர்கள், மற்ற தனிப்பட்ட நண்பர்கள் இவர்களுடன் பெரும்பாலும் பங்களாவை விட்டு வெளியில் உள்ள தோட்டத்தில் பசுமையான புற்பரப்பின் மேல் பிரம்பு நாற்காலிகள் போட்டுக் கொண்டு அமர்ந்து வாய்விட்டு ரசனையுடன் பேசுவாராம் வாஜ்பாய். அந்தநிசப்தமான ஆரவாரமற்ற தோட்டத்தில் குரங்குகளும், பறவைகளும் வைத்ததுதான் சட்டம். அவைகள் பருகுவதற்கு தண்ணீர் வசதிகள்கூட உண்டாம்.

அதுமட்டுமா ! அங்குள்ள ஒவ்வொரு பொருளும் மிகவும் சிறப்பு வாய்ந்தவையாம். அங்குள்ள அறைகள், மரச் சாமான்கள், கழிவறைகூட சிக்கனமான செலவில் சிறப்பாக இந்து பாரம்பரியம் மிக்க வடிவில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ளதாம். சுருக்கமாக சொல்லப்போனால் முதியோர்கள் அதிக சிரமமில்லாமல் வசிக்கும்வகையில் உள்ளதாம்.

அதுமட்டுமா ! மிகவும் பாதுகாப்பான இடம். மிக அருகிலேயே உள்துறை அமைச்சக அலுவலகம். 14 ஆண்டுகள் வாஜ்பாயி தனது வாழ்வை மிக அமைதியாக கழித்த இடம் இது. மிகவும் சோதனையான நிலையில் ஸ்ரீ ராமர் 14 ஆண்டுகள் வனவாஸம் செய்தார். ஆனால் ராமர்போல புகழ்கொண்ட வாஜ்பாயிடம் இந்தவனம் 14 ஆண்டுகள் வாஸம் கொண்டது என்று சொன்னால் மிகை ஆகாது.

இந்த பங்களாவின் பெயர் கிருஷ்ணன் மார்க். வாஜ்பாய் குடியிருந்த காலங்களில் இந்த இடம் கிருஷ்ணர் வசித்த பிருந்தாவனமாகவே மாறிவிட்டது. இந்தபங்களா காலியானதும் இதில் குடியேற திட்டம் இட்டவர்கள் ஏராளமான விஐபி க்கள். ஆனால் மோடி அரசுக்கு நிச்சயம் சரியான நபரிடம் இது ஒப்படைக்கப்பட வேண்டும் என்ற விருப்பம் இருந்ததால்தான் பல மாதங்களாக இதுகாலியாகவே இருந்தது. ஆட்சிமாறினால் நாம் உள்ளே புகுந்துவிடலாம் என கனவுகண்ட எதிர்க்கட்சி தலைவர்கள் பல பேர்.

இந்த நிலையில் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட அமீத்ஷா சமீபத்தில் வாஜ்பாயின் வீட்டைப் பார்வையிட்டபிறகு, அவருக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டதாம். தற்போது அமீத்ஷா இன்னும் ஓரிரு மாதங்களில் அங்கு குடி போவார் என தெரிகிறது. மேலும் சிலசெப்பனிடும் பணிகளும் தற்போது அங்கு நடந்து வருகின்றன.

வாஜ்பாய் மரணம் அடைந்ததும் அவர் குடும்பத்தினர் நினைத்திருந்தால் மேலும் சிலகாலம் வசிக்க மோடி அரசிடம் அனுமதி பெற்றிருக்கலாம். ஆனால் பெரும்தன்மை, கண்ணியம் கொண்ட அவரது குடும்பத்தினர் அவர் இறந்த அடுத்த சிலமாதத்திலேயே வீட்டை காலி செய்துகொண்டு சொந்த ஏற்பாட்டில் வேறு வீட்டுக்கு சென்று விட்டனர்.

நன்றி :ரமேஷ் 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

புதினாவின் மருத்துவக் குணம்

இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ...

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம்

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ...

முருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்

முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ...