கர்நாடக அரசியலில் பெரும்புயல் வீசிக் கொண்டுள்ளது. இப்போது எல்லாமே நம்பர் கேம்தான். காங்கிரசை சேர்ந்த 10 எம்எல்ஏக்கள், மஜதவைசேர்ந்த மூன்று பேர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டனர். ஆட்சிக்கு ஆதரவளித்த சுயேச்சை ஒருவர் ஆட்சிக்கு ஆதரவு இல்லை என அறிவித்துள்ளார்.
ஆக மொத்தம் 14 எம்எல்ஏக்களை இழந்துள்ளது, கர்நாடக காங்கிரஸ்-மஜத கூட்டணி அரசு. கர்நாடக சட்டசபை பலம் 224. அதில் 13 பேர் ராஜினாமா செய்து விட்டனர். சபாநாயகர் இந்த ராஜினாமாக்களை ஏற்றால், சட்டசபை பலம், 211ஆக குறையும். அதில் பாதிக்கும் மேல் என்றால் ஆட்சியை தக்க வைக்க குறைந்தது 106 எம்எல்ஏக்களாவது தேவை.
இப்போது காங்கிரஸ் பலம் 69 எனவும், மஜத பலம் 34 எனவும் உள்ளது. ஆதரவு அளித்த சுயேச் சைகளில் ஒருவர் கைவிட்டாலும் இன்னொருவர் ஆதரவு உள்ளது. எனவே, இந்தகூட்டணியின் பலம் 104 எம்எல்ஏக்களாகும். ஆனால் பாஜக எம்.எல்.ஏ.,க்கள் பலம் 105. இதுபோக, நாகேஷ் என்ற சுயேச்சை எம்எல்ஏ இன்று, கூட்டணி ஆட்சிக்கு அளித்த ஆதரவை பாபஸ் பெற்று விட்டு, பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதாக கூறியுள்ளார். எனவே, உட்கார்ந்த இடத்திலேயே, பாஜகவுக்கு தேவையான மேஜிக் நம்பரான 106 கிடைத்து விட்டது. இப்போது சட்ட சபையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்குமாறு, சபாநாயகரோ அல்லது ஆளுநரோ அழைப்புவிடுத்தால், பாஜக எளிதாக வென்றுவிடும்.
ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ... |
பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ... |
முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ... |