நதிநீர்ப் பிரச்னைகளுக்கு ஒரே தீர்ப்பாயம்; மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

நதிநீர் பிரச்னைகளுக்காக ஒரேதீர்ப்பாயம் அமைக்கும் மசோதா மக்களவையில் நிறைவேறியது.

காவிரி நதி நீர் பங்கீட்டு பிரச்னைக்கு தீர்ப்பாயம் தனியாக அமைக்கப்பட்டது போலவே பல்வேறு நதிநீர் பங்கீட்டுபிரச்னைகளுக்கு, மாநிலங்களுக்கு இடையிலான பிரச்னைகளை தீர்த்து வைப்பதற்கு தீர்ப்பாயங்கள் அமைக்கப் பட்டுள்ளன. இந்நிலையில் நதி நீர் பிரச்னைகள் அனைத்தையும் சரி செய்து தீர்வுகாண ஒரேதீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என முடிவு செய்தது. அதற்காக புதிய மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல்செய்தது. அதன் மீதான விவாதம் தற்போது மக்களவையில் நடைபெற்றது.

இதனால் தமிழக அரசு போராடிபெற்ற காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் நிலை என்னவாகும் என மத்திய சென்னை எம்.பி தயாநிதி மாறன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், நதிநீர் பிரச்னைகளுக்காக ஒரே தீர்பாயம் அமைக்கப்பட்டாலும் காவிரி ஆணையத்தின் பணி தொடரும் எனத்தெரிவித்தார். ஒரே தீர்ப்பாய மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகும் தற்போதைய நிலையேதொடரும் என விளக்கமளித்தார்.

நீண்ட விவாதத்திற்கு பிறகு நாடுமுழுவதும் உள்ள நதிநீர்ப் பிரச்னைகளுக்கு தீர்வுகாணும் ஒரே தீர்ப்பாயம் அமைக்கும் மசோதா மக்களவையில் நிறைவேறியது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

கொஞ்சம் வெய்யிலில காயுங்க பாஸ்!

ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ...

அரச இலையின் மருத்துவக் குணம்

அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ...

நீரிழிவு நோய் குறைந்த அளவு கலோரி தரும் உணவை சாப்பிட்டுவந்தால் குணமாகிவிடும்

உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ...