பூட்டானுக்குப் பயணம்செய்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்கிலுக்கும் ராயல் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர், “பூட்டானில் இருக்கும் புத்திசாலிகள் நாட்டை பெரும் உயரத்துக்கு இட்டுச்செல்ல வேண்டும். இளமையாக இருக்க இப்போதுதான் சிறப்பானநேரம்” என்று பேசினார்.
பூட்டானுக்கு இரண்டாவது முறையாக பயணம்செய்துள்ளார் மோடி. இரண்டாவது முறையாக நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று பிரதமராக பதவியேற்ற பின்னர் பூட்டானுக்கு மோடி மேற்கொள்ளும் முதல்பயணம் இது.
அவர் மாணவர்கள் மத்தியில் பேசுகையில், “பூட்டான், நாளுக்கு நாள் உயரத்தில் பறக்கும் நிலையில், இந்தியாவில் இருக்கும் உங்களது 130 கோடி நண்பர்கள் வெறுமனே, கைதட்டி உற்சாகமூட்டுவதை மட்டும் செய்யமாட்டார்கள். அவர்கள் உங்களோடு இணைந்து செயல்படுவார்கள், உங்களிடமிருந்து அவங்கள் கற்றுக் கொள்வார்கள். உலகில் தற்போது பல்வேறு வாய்ப்புகள் இருக்கின்றன. நீங்கள் இன்றுசெய்யும் காரியம் அடுத்துவரும் தலைமுறைகள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும். உங்களது திறமையைக் கண்டுபிடித்து அதில் ஆர்வமுடன் செயல்படுங்கள்.” என்றார்.
கடந்த சனிக்கிழமை பூட்டானின் பிரதமரான லோடே ஷெரிங்கை சந்தித்து இருநாட்டு உறவு குறித்து பேசினார் பிரதமர் மோடி. அப்போது அவர் 10 பல்வேறு திட்டங்களிலும் கையெழுத்திட்டார். விண்வெளி ஆராய்ச்சி, ஏவியேஷன், தொலைதொடர்புத்துறை, ஆற்றல் துறை, கல்வித் துறை உள்ளிட்டத் துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. இன்று மாலை இந்தியா திரும்புகிறார் பிரதமர் மோடி.
நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ... |
நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ... |
அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது. |