ரபேல் விமானங்கள் இந்திய விமானப் படையில் விரைவில் இணைப்பு

பிரான்ஸ் நாட்டில்இருந்து வாங்கப்படும் ரபேல் விமானங்கள் இந்திய விமானப் படையில் விரைவில் இணைக்கப்பட உள்ளன.

இதற்காக ஹரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள 17 ஸ்குவாட்ரம் விமானப்படைத்தளம் ரபேல் விமானங்களை இயக்குவதற்கு ஏற்றவகையில் புத்துயிர்ப்பு செய்யப்படுகிறது.

இன்று புத்துயிர்ப்பு பணிகளை தொடங்கிவைக்க உள்ள விமானப்படைத் தலைவர் பிஎஸ்.தனோவா ரபேல் விமானங்களுக்கான முன்னேற்பாடுகளை பார்வை  யிடுவார்.

முன்பு இங்குதான் மிக் 21 விமானங்கள் இயக்கப்பட்டன. அங்கு இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கைக் கேற்ப எண்ணுடன் கூடிய பெயர் வழங்கப் பட்டு வந்தது.

விரைவில் இந்த விமானப் படைத்தளத்தில் தான் இந்தியாவின் முதல் ரபேல்விமானம் தரையிறங்க உள்ளது. முன்பு பஞ்சாப் மாநிலம் பட்டின்டாவில் ரபேல்விமானத்தை பெறுவது என்று முடிவெடுக்கப்பட்டது.

ஆனால் பின்னர் அது ஹரியானாவின் அம்பாலா விமானப்படை தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதேபோன்று சீனாவுக்கு எதிரான தற்காப்புக்காக மேற்கு வங்கத்தில் உள்ள ஹாஷிமாரா விமானப்படைத் தளமும் அடுத்த ரபேல் விமானத்திற்கான முன்னேற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

இதற்க்கிடையே: பிரான்சின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து ரபேல் போர்விமானங்களை, அக்., 8 அன்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் பெற்றுக் கொள்கிறார். இதற்காக அவர் பிரான்ஸ் செல்ல உள்ளார்.

மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், அக்.,8 முக்கியமான நாள். அன்று தசராபண்டிகையும், விமானப்படை நாளும் வருகிறது. பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்துடன், பாதுகாப்புத் துறை செயலர் அஜய் குமார் மற்றும் உயர் அதிகாரிகள் உடன் சென்று, ரபேல் விமானங்களை பெற்று கொள்கின்றனர். டசால்ட் நிறுவனத்தின் உயர்அதிகாரிகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர் இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

வெண் தாமரைப் பூ

இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ...

உப்பு

'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. அளவுக்கு அதிகமான ...

முடி உதிர்தல் குறைய

வேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து . வேகவைத்த ...