“வெளிநாட்டிலிருந்து பணம் பெறும் என்.ஜி.ஓக்களை ஒழுங்குபடுத்தும் FCRA (Foreign Contribution (Regulation) Act, 2010 – FCRA) சட்டத்தில் மாற்றங்களை கொண்டு வந்து அதை கெசட்டிலும் அறிவித்திருக்கிறது அரசு.
அந்த அறிவிப்பு, “என்.ஜி.ஓ-வின் ஒவ்வொரு உறுப்பினரும் தன் கழுத்தில் தானே கயிறை மாட்டிக் கொள்வதற்கு சமம்” என்ற ரீதியில் ட்வீட் செய்திருக்கிறது என்.ஜி.ஓ சம்பந்தப்பட்ட accountaid நிறுவனம்…
அந்த அறிவிப்பில் தெரிவித்திருக்கும் பல விஷயங்களில் முக்கியமானது, அந்த “என்.ஜி.ஓ-வின் எந்த உறுப்பினரும் மதமாற்றத்தில் ஈடுபட்டு வழக்கை சந்திக்கவில்லை அல்லது தண்டிக்கப்படவில்லை” என்பதை பிரகடனம் செய்து கையொப்பமிடவேண்டும். (ஹிந்து விரோதி எஸ்ரா சர்குனம் மீது வழக்கு இருப்பதால், அம்மாதிரி ஆட்களின் என்.ஜி.ஓ, “ஆண்டவரே… எம்மை கைவிட்டீரே” என்று மண்டியிட்டு அழ வேண்டியதுதான்).
இது வரை என்.ஜி.ஓவின் தலைமை நிர்வாகி மட்டுமே இம்மாதிரி பிரகடனம் செய்ய வேண்டியிருந்தது. இப்போது அது மாற்றப்பட்டு கடைநிலை ஊழியர் வரை ‘உறுப்பினர்’ என்று வரையறுக்கப்படுகிறார்….
எனவே, வெளிநாட்டில் பணம் வாங்கும் எந்த என்.ஜி.ஓவை சேர்ந்த எவரேனும் எங்கேனும் மதமாற்றத்தில் ஈடுபட்டு அவர்கள் மீது வழக்கு பதியப்பட்டால், FCRA சட்டப்படி வழக்கை சந்திக்க வேண்டியிருக்கும் (prosecuted or convicted).
“மதமாற்றத்தால் இனவாத பதற்றம் மற்றும் விரோதம் பரவுகிறது” என்று காரணம் சொல்லியிருக்கிறது அரசு.
அது மட்டுமல்லாமல், தேசதுரோக நடவடிக்கைகள் (sedition), வன்முறையை தூண்டுவது ஆகியனவும் புதிய அறிவிப்பில் அடக்கம்.
இவை தவிர சில சலுகைகளும் அளித்திருக்கிறது இந்த அறிக்கை…
குறிப்பு: இந்த அறிவிப்பால், அமைதிமார்க்க அன்புமார்க்க என்.ஜி.ஓ அத்தனைக்கும் சிக்கல்… அது தவிர, வெளிநாட்டிலிருந்து பணம் வாங்கி கலவரம் தூண்டும் டேனியல் காந்தி, பூவுலகின் நண்பன் முதல் கவிதா கிருஷ்ணன், மேதா பாத்கர் வரை என்.ஜி.ஓ நடத்துவது முடியாத காரியமாகும்.
இதை அறிவித்த உள்துறை அமைச்சர் அமித் ஜிக்கு கோடானு கோடி நன்றிகள் !!
எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ... |
கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ... |
அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ... |