பண்டிகைகள் நம்மை ஒன்றிணைத்து வடிவமைக்கின்றன

ராம் லீலா மைதானத்தில் நடைபெற்ற தசரா விழாவில் பிரதமர் நரேந்திர மோடிநேற்றுபங்கேற்றார். நவராத்திரி விழா நாட்டின்  ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு பெயர்களில் ஆண்டுதோறும் கொண்டாடப் படுகிறது.  கர்நாடகாவில் மைசூரு மாகாணத்தை ஆட்சிசெய்த மன்னர்கள் கடந்த 400 ஆண்டுகளுக்கு முன் நவராத்திரி விழாவை தசரா என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் பத்துநாட்கள் சிறப்பாக கொண்டாடி வந்தனர். அந்த பழமையான கலாசாரம்  அழியாமல் காக்கும் வகையில், மாநில அரசின் சார்பில் தசராவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கிடையே, தலைநகர் டெல்லி துவாரகாவில் உள்ள DDA மைதானத்தில் துவாரகா ஸ்ரீராம் லீலா சொசைட்டி என்ற அமைப்பு சார்பில்  நடைபெற்றுவரும் தசரா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார் .

இதன்படி,  நரேந்திர மோடி பங்கேற்று ராவண உருவபொம்மையை வில் விட்டு எரித்தார். தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் மோடி, நம் நாட்டில், திரு விழாக்கள் நமது மதிப்புகள், கல்வி  மற்றும் சமூக வாழ்க்கையின் ஒருபகுதியாகும். பண்டிகைகள் நம்மை ஒன்றிணைத்து வடிவமைக்கின்றன. அவை ஆற்றல், உற்சாகம் மற்றும் புதியகனவுகளை உருவாக்குகின்றன என்றார். இந்த விஜய தசமி அன்று, மகாத்மா காந்தியின் 150  வது பிறந்த நாளைக்குறிக்கும் நேரத்தில், எனது சக குடிமக்களுக்காக ஒருவேண்டுகோள் உள்ளது.

இந்த ஆண்டு ஒரு பணியை மேற்கொண்டு அதை அடைவதற்கு உழைப்போம். இந்தநோக்கம், உணவை வீணாக்குவது, ஆற்றலை பாதுகாப்பது, தண்ணீரைச் சேமிப்பதல்ல என்றார். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மகளையும் மதிக்கவேண்டியது எங்கள் பொறுப்பு. மான்கி பாதின் போது எங்கள் மகள்கள் எங்களுக்கு ‘லக்ஷ்மி’ என்று குறிப்பிட்டேன். இந்த வரவிருக்கும் தீபாவளி அவர்களின் சாதனைகளை கொண்டாடுவோம் என்றார்.

இந்தவிழாவில் பிரதமருடன் மத்திய அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் பலர் பங்கேற்கின்றனர். கடந்த 2016-ம் ஆண்டு முதல், பிரதமர் நரேந்திரமோடி உத்தரப்பிரதேச மாநிலம் தலைநகர் லக்னோவில் நடைபெறும் தசரா விழாவில் கலந்துகொண்டு வந்தார். இந்த வருடம்  டெல்லி ராம் லீலா மைதானத்தில் நடைபெற்ற தசரா விழாவில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

விளையாட்டு வீரர்களுக்கான உணவு முறைகள்

விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ...

ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்

ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ...

உடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்

சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ...