குருநானக் தேவ் சீக்கியர்களுக்கு மட்டுமான சொத்து அல்ல

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள நரோவால் மாவட்டத்தில் ராவி நதிக் கரையோரத்தில் ஸ்ரீ நான்கானா சாஹிப் என்ற இடத்தில் 550 ஆண்டுகளுக்கு முன்னர் சீக்கிய மதத்தை தோற்றுவித்த குரு நானக் தேவ் பிறந்ததாக நம்பப்படுகிறது.

அவர் உயிர்நீத்த இடம் அதே மாகாணத்துக் குட்பட்ட கர்தார்ப்பூரில் சமாதியாக பாதுகாக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. குருநானக் தேவின் 550-வது பிறந்தநாள் நவம்பர் 12-ம் தேதி கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி,  குருநானக்தேவின் 550-வது பிறந்தநாளையொட்டி, பாகிஸ்தானில் உள்ள சீக்கிய குருத்வாராவுக்கு செல்லும் இந்தியபக்தர்களின் வசதிக்காக இந்தியா-பாகிஸ்தான் அரசுகளால் கர்தார்பூர் பாதை அமைக்கப்பட்டது.

இந்த கர்தார்பூர் பாதைவழியாக அன்றாடம் 5 ஆயிரம் இந்திய பக்தர்களுக்கு அனுமதி அளிக்க பாகிஸ்தான் அரசு  தீர்மானித்துள்ளது. இதற்காக பாகிஸ்தான் செல்லும் சீக்கியர்கள் பாஸ்போர்ட் கொண்டுசெல்ல தேவையில்லை. இந்தியாவில் வாழ்வதற்கான ஏதாவது ஒரு அரசு ஆவணத்தை காண்பித்தால்போதும்.

இந்நிலையில், இந்தியாவின் தரப்பில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள டேரா பாபா நானக் குருத்வாரா அருகேயுள்ள ஷிக்ஹார் மைஷான் முகாம்பகுதியில் கர்தார்பூர் பாதையையும் புதிதாக அமைக்கப்பட்ட சோதனைச்சாவடியையும் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்துவைத்தார்.

இதேபோல் பாகிஸ்தானில் அந்நாட்டின் பிரதமர் இம்ரான்கான் கர்தார்பூர் பாதையை திறந்து வைத்தார்.இன்று திறக்கப்பட்ட கர்தார்பூர் பாதை வழியாக பாகிஸ்தானுக்குசெல்லும் முதல் சீக்கிய யாத்ரீகர்கள் குழுவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அவரது மனைவி குர்ஷரன் கவுர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அவர்களை சந்தித்த பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தார்.

முன்னதாக, சுல்தான்பூர் லோதி பகுதியில் உள்ள சீக்கிய குருத்வாராவில் வழிபாடுசெய்த பிரதமர் மோடி, அங்கு நடைபெற்ற சமபந்திவிருந்திலும் பங்கேற்றார்.

பஞ்சாப்பில் நடைபெற்ற திறப்புவிழாவில் பேசிய பிரதமர் மோடி பாகிஸ்தானுக்கு உட்பட்ட பகுதியில் குறித்தநேரத்துக்குள் கர்தார்பூர் பாதை அமைப்பதற்காக உழைத்த தொழிலாளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

‘இந்தபாதையை திறந்துவைத்து, நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்பதை எனக்கு கிடைத்த பாக்கியமாக கருதுகிறேன். ஆன்மிக   சேவைசெய்யும் சீக்கிய மக்களுக்கு ஏற்படும் அதே உணர்வினை இந்த புனித மண்ணில் நிற்கும் வேளையில் உணர்கிறேன்.

குருநானக் தேவ் சீக்கியர்களுக்கு மட்டுமான சொத்து அல்ல. ஒட்டு மொத்த மனித குலத்துக்குமான ஊக்கசக்தியாக அவர் விளங்கினார். குருநானக் தேவ் ஒருகுருவாக மட்டுமல்லாமல் நமது சிந்தனையாகவும் வாழ்க்கையின் அடித்தள மாகவும் திகழ்ந்தார்.

இந்த பாதையை அமைப்பதற்கு உழைத்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கர்தார்பூர் பாதை விவகாரத்தில் இந்தியாவின் உணர்வுகளை அவர் புரிந்து கொண்டார். அதற்கு மதிப்பளித்து, உரியவகையில் செயலாற்றினார்’ என பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள:

நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ...

பசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்

எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ...

நித்தியகல்யாணியின் மருத்துவ குணம்

நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ...