இந்த நிலையில் சிவசேனா மற்றும் பாஜகவின் பிளவை ஆர்எஸ்எஸ் விரும்பவில்லை.இதனால் அமைச்சர் நிதின்கட்கரி போன்ற முன்னணி தலைவர்கள் சிவசேனாவுடன் சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால் இந்த முயற்சிகள் எல்லாம் தோல்வியில் முடிந்தது. கடைசிவரை சிவசேனா மற்றும் பாஜக இடையே சமாதானம் ஏற்படவில்லை.
இது குறித்து ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தற்போது கருத்து தெரிவித்துள்ளார். அதில், சுயநலம் மிகமோசமான விஷயம். அரசியலில் சுயநலம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் அரசியல்வாதிகள் மக்கள் இதை புரிந்து கொள்ள மாட்டார்கள்.
சுயநலம் தவறு என்று தெரிந்தும் சிலர் அதைவிடாமல் பிடித்து வைத்து இருப்பார்கள். அவர்கள் இப்படி சண்டை போட்டுகொண்டு இருக்ககூடாது. பாஜக மற்றும் சிவசேனா இப்படியே ஒருவிஷயத்திற்காக சண்டை போட்டால் அது இரண்டு பேருக்கும் பெரிய பிரச்சனையாக முடியும், என்று கூறியுள்ளார்.