இதனிடையே பிரதமர் மோடி அரசின் முதல் ஐந்துஆண்டு பதவி காலம் முடிந்து விட்டதால் மசோதா காலாவதியானது. இதையடுத்து புதிதாக குடியுரிமை சட்டதிருத்த மசோதாவை மோடி அரசு கொண்டுவந்துள்ளது இதற்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது.
இந்த மசோதாவுக்கு லோக்சபாவில் அதிமுக ஆதரவு அளித்துள்ளது.தேசிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதா சிறுபான்மையினருக்கு எதிரானதல்ல. மசோதாவில் பாகுபாடுகள் காட்டப்பட வில்லை என லோக்சபாவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளித்தார்.
குடியுரிமை திருத்த மசோதாவின் படி, கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதிக்கு முன்பு, பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாதவர்கள், சட்டவிரோதமாக குடியேறியவர்களாக கருதப்பட மாட்டார்கள். அவர்கள் இந்தியாவில் குடியேறி 5 ஆண்டுகள் நிறைவடைந்தவுடன் இந்திய குடியுரிமை வழங்கப்பட உள்ளது.