ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் “சங்கத்தை எந்தவொரு சித்தாந்தத்திலும் அடைக்க முடியாது, எந்தவொரு ‘இசத்’தையும்(கோட்பாடு) நம்பவில்லை, அதன் இரண்டாவது தலைவரான எம் எஸ் கோல்வால்கர் எழுதிய புத்தகம் உட்பட எந்த புத்தகமும் சங்கத்தை பிரதிநிதித்துவப் படுத்தவில்லை” என்று கடந்த வாரம் செவ்வாய் கிழமை ஒரு பொது நிகழ்ச்சியில் கருத்து தெரிவித்தார்.
சங்கத்தின் அசைக்க முடியாத நம்பிக்கை என்னவென்றால், பாரதம் ஒரு இந்து ராஷ்டிரமாகும். இந்த விஷயத்தில் சமரசம் என்பதற்கு இடமில்லை என்றார்.
“சங்கத்தின் சித்தாந்தம் என்று எதையும் அழைப்பது அல்லது விவரிப்பது சரிப்பட்டு வராது. சங்கத்தின் நிறுவனர் டாக்டர் ஹெட்கேவரே கூட தான் சங்கத்தை முழுமையாக புரிந்து கொண்டு விட்டதாக ஒருபோதும் சொல்லவில்லை. இருபது ஆண்டுகளுக்குமேல் சர்சங்காச்சலக்காக இருந்த பின்னரும், குருஜி கோல்வல்கர் ஒருவேளை இப்பொழுது நான் சங்கத்தை புரிந்துகொள்ள ஆரம்பித்து இருக்கிறேனோ என்று தோன்றுகிறது என்றார்.”
அப்படி இருக்கையில் சங்கத்தை வெளியில் இருந்து பார்ப்பவர்கள் புரிந்துகொள்வது அவ்வளவு எளிது அல்ல. சங்கத்தின் மாணவர் பிரிவான ஏபிவிபியின் உயர்மட்ட செயல்பாட்டாளரான சுனில் அம்பேகர் எழுதிய “ஆர்.எஸ்.எஸ்., 21 ஆம் நூற்றாண்டிற்கான ஒரு வரைபடம்” என்ற புத்தகத்தை வெளியிடும் விழாவில் ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) தலைவர் மேற்கொண்டவாறு பேசினார்.
‘ஆர் எஸ் எஸ் சித்தாந்தவாதிகள்’ என்ற அடைமொழியுடன் சிலர் வெவ்வேறு ஊடக மேடையில் தோன்றக்கூடும் என்றாலும் அப்படி அழைப்பது ஒரு சம்பிரதாயமான சொல்தானே தவிர ஆர்.எஸ்.எஸ்-யை பொறுத்தவரை அந்த அடைமொழி முழுமையாக சங்கத்திற்கு பொருந்தாது. ஏனென்றால் முன்னரே சொன்னபடி சங்கத்தை ஒரு சித்தாந்தம் என்ற சிமிழிக்குள் அடைத்து விட முடியாது. எங்களை பொறுத்தவரை அனுமன், வீரசிவாஜி மற்றும் எங்கள் ஸ்தாபகர் ஹெட்கேவர் ஆகியோரே “லட்சிய புருஷர்கள்(role model)” என்றார்.
“கோல்வால்கரின் ‘எண்ணங்களின் கொத்து'(Bunch of Thoughts) உள்ளிட்ட எந்த புத்தகத்தாலும் சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்த முடியாது” என்றும் கூறினார்.
“இந்தியா ஒரு இந்து ராஷ்டிரா, அது பேச்சுவார்த்தைக்குட்பட்டது அல்ல” என்று அவர் கூறினார்.
எவ்வாறாயினும், தங்களை இந்துக்கள் என்று சொல்லிக் கொள்ளாமல் தங்களை இந்தியர்கள் என்று கருதுபவர்களைக் கூட சங்கம் தனது சொந்தமாகக் கருதுகிறது என்று அவர் கூறினார். ஓரினச்சேர்க்கை மற்றும் திருநங்கைகள் பெயரிடாமல் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அவர் கூறினார், “இந்த மக்களுக்கு சமூகத்தில் ஒரு இடம் உண்டு. மகாபாரதத்தில், ஜராசந்தா (மகத மன்னன்) மற்றவர்களுடன் போரில் போராடிய இரண்டு தளபதிகள் இருந்தனர். நாங்கள் முன்னரே இவற்றையெல்லாம் விவாதித்து இருக்கிறோம். இது ஒரு பெரிய பிரச்சினை அல்ல, எந்த விஷயத்தையும் திறந்த மனதுடன் பேசினால் தீர்வுகளை காண முடியும்.”
சமுதாயத்தில் சங்கத்தின் பங்கு பற்றி பேசிய பகவத், ஒவ்வொரு மனிதரையும் பண்படுத்துவதே சங்கத்தின் அடிப்படை பணி என்றார். இந்த ஒரு பணியை தவிர வேறொன்றிலும் கவனம் செலுத்துவது இல்லை. என்றாவது ஒருநாள் சங்கம் தான் எல்லாவற்றையும் சாதித்தது என்று பேச்சு எழுமானால் அது சங்கத்தின் தோல்வி என்று நாங்கள் கருதுவோம். ஏன் இப்படி சொல்கிறோம் என்றால் ஒரு சாதனையை நிகழ்த்துவதற்கு முழு ஹிந்து சமுதாயமும் அந்த செயலில் ஈடுபட்டு இருக்க வேண்டும் என்பதே எங்களது விருப்பம் என கூறினார்.
சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ... |
முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ... |
மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ... |