மதத்தின் பேரால் தனி நாடு கண்டவர்களுக்கு எதிரானது

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து மத பிரச்சனை காரணமாக, இந்தியாவிற்குல்  அகதிகளாக ஊடுருவிய இஸ்லாமியர் அல்லாத அங்கு சிபான்மையினராக உள்ள கிறிஸ்துவ, இந்து சீக்கிய, சமண,  பார்சி மற்றும் புத்த மதத்தினருக்கு இந்திய குடியுரிமை வழங்கும்,  குடியுரிமை சட்ட திருத்த மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்க பட்டுள்ளது.

இதன் மூலம் இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் பொது விடுபட்ட சில பிழைகள் கலையப்பட்டுள்ளன . அங்கு சிறுபான்மையினராக அகப்பட்டு துன்புற்று, அடைக்கலம் தேடி இந்தியா வந்தவர்களுக்கு ஆறுதல் கிட்டியுள்ளது.

ஆனால் இதற்கு பாகிஸ்தானுக்கு நிகரான கொதிப்பை, இங்குள்ள  காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக போன்ற எதிர்க்கட்சிகள் காட்டியுள்ளது வெட்க கேடானது. காரணம் பாகிஸ்தான் சட்டவிரோத இஸ்லாமிய ஊடுருவலை இந்திய மண்ணில் ஊக்குவிப்பதையே ஒரு ஜிகாத்தாகத்தான்  நடத்துகிறது. இதன் மூலம் சமூக சீரழிவு, நிதிச்சுமை பெருக்கம், சட்ட ஒழுங்கு சீர்குலைவு, திடீர் இஸ்லாமிய மக்கள் பெருக்கம், மீண்டும் தனிநாடு கோரிக்கை என்று இந்தியாவுக்குள் எழக்கூடிய பிரச்சனைகள்  நீண்ட நெடியது. எனவேதான் பாகிஸ்தான் கொதிக்கிறது.

இந்துவும் முஸ்லிமும் ஒன்றாக இனைந்து வாழவே முடியாது, இஸ்லாமியருக்கு தனிநாடு வேண்டும் என்று பல வருடம் போராடி பாகிஸ்தானை பெற்ற முகமது அலி ஜின்னாக்களால்.  மகாத்மா காந்தி உள்ளிட்டோர் மன்றாடி கேட்டும், 1946ம் ஆண்டு அரசியல் அமைப்பு சட்டத்தில் இஸ்லாமியருக்கு  பல சலுகைகளைதந்தும் ஏற்றுக்கொள்ளாத ஜின்னாக்களால். 1947 ஆம் ஆண்டு பிரிவினை நடந்தது.

இதனால் 1.5 கோடிக்கும் அதிகமானோர் இடம் பெயர்ந்தனர், பல லட்சம் பேர் கலவரத்தால் மாண்டனர். இதில் அங்கங்கே  தங்கிவிட்ட  இந்துக்களும் முஸ்லிம்களும் ஆங்காங்கே சிறுபான்மையினர் ஆனர்.

இந்தியா  மதச்சார்பற்ற நாடானது,  இந்தியாவின் மதசார்பின்மை சிறுபான்மையினரின் வழிபாட்டு உரிமைகளையும், சொத்துக்களையம்  அவர்களிடமே தந்தது, சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு நிதியை தரும் அரசாங்கத்தால் அதை கட்டுப்படுத்த முடியாது. அத்தகைய  சுதந்திரம் அது.

எனவே தான் 1947இல் 9 கோடியாக இருந்த இஸ்லாமிய மக்கள் தொகை இன்று 20 கோடி என்பதும், எந்த ஒரு இஸ்லாமியரும் இங்கிருந்து பாகிஸ்தானுக்கோ, பங்காளதேஸ்க்கோ ஊடுருவ முயற்சிக்க வில்லை என்பதும் இதற்கு சான்று.

ஆனால் பாகிஸ்தான், பங்களாதேசோ மதச்சார்பு இஸ்லாமிய தேசமாகவே மாறியது. அங்கு மத வழிபட்டு தளங்களும், சொத்துக்களும் அரசின் வசம். இதனால் சிதைக்கப்பட்ட கோவில்கள் ஏராளம், களவாடப்பட்ட சொத்துக்கள் ஏராளம்! ஏராளம்!!. சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு அங்கு வேலையே இல்லை. மத மாற்றமும், அச்சுறுத்தலுமே அவர்கள் சிறுபான்மையினருக்கு தந்த சலுகைகள்.

எனவேதான் பாகிஸ்தானில் 1947இல் 15%  இருந்த இந்துக்கள் இன்று வெறும் 1.6%. பாகில் இருந்து பிரிந்த பங்களாதேஷில் 22% இருந்த இந்துக்கள் இன்று  வெறும் 9.5%. எல்லாம் மதம் மாற்றப்பட்டு இருப்பார்கள், அல்லது  இந்தியாவுக்குள் அகதிகளாக துரத்தப்பட்டு இருப்பார்கள்.

இப்படியாக இந்தியாவுக்குள் அகதிகளாகான பங்களாதேஸ் இந்துக்கள் மட்டும் 1.5 கோடி பேர். இன்றும் இந்தியாவை நேசிக்கும், பாரத மாதாவை பூஜிக்கும், பத்திர காளியையே தங்கள் கடவுளாக போற்றும் இவர்களுக்கு இந்த மண்ணை விட்டால் வேறு கதி ஏது.

ஆனால் இந்த மண்ணையும், மதத்தின் பேரால் நாட்டையும் பிரித்து சென்றவர்களுக்கு இந்த மண்ணில் மீண்டும் இடம் தரவேண்டும் என்கிறார்கள். இப்படியாக இந்தியாவுக்குள் ஊடுருவிய 2 கோடிக்கும் அதிகமான பங்களாதேஸ் இஸ்லாமியருக்கு வாக்குக்காக காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், மம்தாபேனர்ஜிகள், ரேஷன் அட்டை, வாக்காளர் அட்டைகளை  பெற்று தந்துள்ளனர்.

இவைகளை எல்லாம் கலையத்தான். இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. இது இந்திய இஸ்லாமியருக்கு எதிரானது அல்ல, குறிப்பிட்ட 3 நாடுகளை தவிர்த்து மற்ற நாடுகளில் வசிக்கும் இஸ்லாமியருக்கும் எதிரானது அல்ல, மதத்தின் பேரால் இந்த மண்ணில் தனி நாடு கண்டவர்களுக்கு எதிரானது.

எனவே தான் இந்த மசோதா  இங்கு இது வரை திருட்டு தனமாக சான்றிதழ் பெற்று குடிமக்களாகவே மாறிவிட்ட பங்களாதேஸ், பாக்கிஸ்தான் முஸ்லிம்களை  அகதியாக்க போகிறது. அணைத்து தகுதிகளும் இருந்தும்  அகதிகளுக்கபட்ட 1.5 கோடி பங்களாதேஸ் இந்துக்களை  குடிமக்களாக்க போகிறது. .

இதன் மூலம் இந்த தேசம் மதத்தின் அடிப்படையில் மீண்டும் பிரிவதை தடுத்துள்ளது. மதத்தின் அடிப்படையில் மண்ணை அபகரிக்க நினைப்பவர்களுக்கு தகுந்த பதிலடியை தந்துள்ளது.

நன்றி தமிழ்தாமரை வி.எம் வெங்கடேஷ் 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

வெண் தாமரைப் பூ

இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ...

கருந்துளசியின் மருத்துவ குணம்

நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.

வாய் துர்நாற்றம் குணமாக

எலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று 5 ...