மஹாராஷ்டிரவில் 1608-ம் ஆண்டு … சூர்யாஜி பந்த், ராணு பாய் தம்பதிக்கு இரண்டாவது மகனாக பிறந்தார் சமர்த்த ராமதாஸர் ( அவர் பிறக்கும் போது சிறிய தாக ஒரு வால் கூட இருந்தது. நாள் ஆகஆக அதுதானே மறைந்துவிட்டதாம்). அவருக்க் நாராயணன் என பெற்றோர்கள் பெயரிட்டனர் .
நாராயணன் வளர துவங்கினான் இந்த தெய்வ குழந்தை வளரத்
துவங்கினான் இருப்பினும் யாரோடும் அதிகம் பேசாமல் ஏதோ சிந்தித்தபடியே இருந்தான். அவனுடைய பார்வையில் ஒரு பிரகாஷம் இருந்தது.
காலம் கடந்தது பன்னிரண்டாவது வயதை அடைந்தார், அந்த காலத்தில் பன்னிரண்டாவது வயதிலேயே திருமணத்தை நடத்தி வைத்து விடுவர், நாராயணணுக்கும் பெண் பார்க்கும் படலம் ஆரம்பம் ஆனது , கல்யாணத்துக்கு பெண் பார்த்தனர். உலகத்துக்கு வெளிச்சம் தரும் சூரியனை மறைக்கமுடியுமா, திருமண நாள் நெருங்கி வந்தது. தான் கல்யாண பந்தத்தில் கட்டுப்படபோகிறோம் என்பது நாராயணனுக்கு புரிந்தது. உலக வாழ்க்கை அவனுக்குக் கசந்தது. உடனே வீட்டிலிருந்து காட்டுக்குப் போய்விட்டான்.
நாராயணனுக்கு சிறு வயதிலிருந்தே ராமனின் மீது அளவு கடந்த காதல். அதனால் எப்போதும் ஸ்ரீராம் ஜய ராம் ஜய ஜய ராம் என ஜபம் செய்து_கொண்டிருப்பார் ராமனின் திருப்பெயரை கோடிக் கணக்கில் ஜபிப்பதென்று தீர்மானித்தான். காட்டில் கிடைக்கும் கனி-கிழங்குகளை உண்டு பல வருடங்கள் காட்டில் தவம் புரிந்தார் ,
நாராயணணின் பக்த்தியில் மனம் குளிர்ந்த சக்ரவர்த்தி திருமகனாகிய ராமபிரான் தானே வந்து காட்சியளித்தார்.
"அன்பனே! நீ அனுமனின் அம்சம். இனி நீ "சமர்த்த ராமதாஸர்' என நீ அழைக்கப்படுவாய். உன்னால் இந்த உலகத்தில் ஆகவேண்டிய காரியங்கள் ஏராளம் இருக்கின்றன. ஸனாதன தர்மத்திற்கு அந்நியர்களால் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. அதைத் தக்க நபர்கள் மூலம் தடுத்து தர்மத்தை மீண்டும் நிலைநாட்டு'' என்று உத்தரவிட்டார் ராமபிரான்.
ராமதாஸருக்கோ ராமனின் நாமத்தைச் சொல்லிக் கொண்டிருப்பது ஒன்றே இன்ப மயமானதாக இருந்தது. வேறு எந்தச் செயலில் ஈடுபடுவதையும் அவர் விரும்பவில்லை. அதனால் அவர் ராமனிடம், ""ஐயனே! இன்னும் சில கோடி முறை உனது நாமத்தைச் சொல்ல ஆசைப்படுகிறேன். அது நிறைவேறியதும் உள் அருளாணைப்படி செய்கிறேன்'' என்றார்.
ராமனும் சம்மதித்தான். உடனே மறுபடியும் கண்களை மூடி ராம நாமத்தில் மூழ்கிப் போனார் ராமதாஸர். சில வருடங்கள் கழிந்தன; கடவுள் அவர் கண் முன்னர் மீண்டும் தோன்றி தர்மத்தை நிலைநாட்டும்படி அறிவுறுத்தினார். அவரும் தனது கடமையை ஒருவழியாக உணர்ந்தார்.
பிறகு காட்டில் கிடைக்கும் பெரிய பெரிய இலைகளை சேகரித்தார் ராமதாஸர். அதில் பல உயர்ந்த உபதேசங்களை எழுதி அருகிலிருந்த நதியில் ஒவொன்ற்க போட்டார். அதே நதியில் சில மைல்களுக்கு அப்பால் நீராடி கொண்டிருந்த சத்ரபதி சிவாஜியின் . கைகளில் ஒவ்வொரு இலையாக போய் சேர்ந்தது. அதில் எழுதப்பட்டிருந்த உபதேச மொழிகளை படிக்கக் கேட்ட சிவாஜி சிலிர்த்துப் போனார்.
"இந்த இலைகளை யார் நதியில் போடுகிறார்கள்?' என்று கண்டுபிடிக்க, அவற்றை சேகரித்தபடியே எதிர் நீச்சல் போட்டார். சற்று தொலைவு நீந்தியதும் கரையோரம் நிற்கின்ற ராமதாஸரை பார்த்த சிவாஜிக்கு பெரும் ஆச்சரியம் என்றுதான் சொல்ல வேண்டும்.
ஏனெனில் ஒருவனுக்கு குரு இல்லாமல் நல்ல கதி கிடைக்காது' என்று சொல்லியிருந்தார் பௌராணிகர். அதை கேட்டதிலிருந்து சிவாஜிக்கு, "தக்க குருவை தேட வேண்டும்' என்ற என்னம் இருந்து கொண்டிருந்தது.
அப்போது ஒரு நாள் சிவாஜியின் கனவில் ஒரு மகான் தோன்றினார். "ஜெய் ரகுவீர ஸமர்த்த' என்ற சொன்னபடி சிவாஜியின் கையில் ஒரு தேங்காயை வழங்கி மறைந்தார்.
தான் கனவில் கண்ட அதே மகானை நதிக்கரையில் நேரே பார்த்த சிவாஜிக்கு பெரும் ஆச்சரியம்!
ராமதாஸரின் திருவடிகளில் விழுந்தார் சிவாஜி. அவரிடம் ராமதாஸர், அப்பனே! உன் கையில் கிடைத்துள்ள இலைகளில் நான் எழுதியுள்ள விஷயங்கள், "தாஸ போதம்' என்றழைக்கப்படும். அதை நீ படித்துப் பயன்பெறு; அதன்படி நடந்துகொள். இந்தத் தேசத்தில் பக்தி குறைந்து வருகிறது. பாஷண்டிகள் அதிகரித்துவிட்டார்கள். நீ உன் தோள் வலிமையாலும், வாள் வன்மையாலும் தர்மத்தை மீண்டும் நிலை நிறுத்து. மற்றதை ராமன் பார்த்துக் கொள்வான்'' என்று ஆசீர்வதித்தார்.
அன்று முதல் தாஸரின் முக்கிய சீடரானார், அதற்குப் பிறகு சத்ரபதி சிவாஜி.பல மாபெரும் வெற்றிகளை பெற்றார், தான் பெற்ற மாபெரும் வெற்றிகளுக்கு தனது குருவருளே காரணம் என்பதை மனதார உணர்ந்தார்.
உலகையே துறந்துவிட்ட ராமதாஸருக்கு ஒருநாள் தன் அன்னையின் நினைப்பு வந்தது… வீட்டை விட்டு ஓடி வந்ததை நினைத்துப் பார்த்தார். மறுபடியும் தன் அன்னையை காண வேண்டுமென்கிற நல்லாசை அவருக்குள் கிளை பரத்தியது. உடனே தாயைக் காண ஓடிச் சென்றார் அந்தத் தவத் தனயன்.
தனது பழைய வீட்டைக் கண்டுபிடித்தார். வாசலில் நின்று, ""ஜய ஜய ரகுவீர ஸமர்த்த'' என்று உரத்த குரலில் சொன்னார். திண்ணையில் உட்கார்ந்திருந்த அவருடைய வயதான தாயார், ""யாரோ பிச்சை கேட்டு வந்திருக்கான். எதாவது போடுங்க'' என்று வீட்டுக்குள் இருந்தவர்களிடம் சொன்னாள்.
உடனே ராமதாஸர், ""அம்மா! நான் உன்னோட "நாரோபா' வந்திருக்கேன்மா. (ராமதாஸரை அவருடைய அம்மா இப்படித்தான் செல்லமாக அழைப்பார்.) உன்னைப் பார்க்கணும்னுதான் வந்தேன்'' என்று அன்புப் பெருக்கோடு கூறினார்.
எத்தனையோ வருடங்களுக்கு முன் வீட்டை விட்டு ஓடிய பிள்ளை மறுபடியும் வந்து நிற்பதை உணர்ந்த ராணுபாய் கண்ணீர்க் காடாக மாறினாள்; தட்டுத் தடுமாறி வந்து பிள்ளையைக் கட்டியணைத்தாள்; தோளையும், மார்பையும், முகத்தையும் தடவித் தடவிப் பார்த்துப் பரவசப்பட்டாள். ஆம், காலம் அவளுடைய கண் பார்வையைப் பறித்திருந்தது.
""என் செல்லமே! என் பட்டே! என் கண்ணே நாரோபா! இத்தனை வருஷங்கள் கழித்து வந்திருக்கும் உன்னைக் கண்ணாரப் பார்க்க எனக்குக் கொடுத்து வைக்கவில்லையே? நான் பார்வையில்லாத கிழமாகிவிட்டேனே'' என்று கதறினாள்.
ராமதாஸரின் துறவு நெஞ்சுகூட ஒரு நிமிடம் துடிதுடித்துப் போனது. தனது இஷ்ட தெய்வமான ரகுவீரரை நினைத்து தாயின் கண்களைத் தொட்டார். அடுத்த நிமிடம், ராமதாஸரைப் பெற்றெடுத்த அந்தப் புண்ணியவதிக்கு பார்வை வந்துவிட்டது. கண்ணாரத் தன் மகனைக் கண்டாள்; கட்டித் தழுவினாள்.
அதற்குப் பின் சில நாட்கள் தன் தாயுடனேயே கழித்த ராமதாஸர், மறுபடியும் உலகில் தர்மத்தைப் பரப்ப புறப்பட்டுவிட்டார். மகனைப் பிரிய மறுத்த தாயிடம், ""உன் இறுதிக் காலத்தில் இங்கே வருவேன்'' என்று வாக்களித்தார்; அப்படியே செய்தார்.
தன் வாழ்நாட்களில் பல அற்புதங்களைச் செய்து காட்டினார் ராமதாஸர். தன் அன்னைக்கு மட்டுமல்ல, மன்னார்குடியைச் சேர்ந்த ஒரு சிற்பிக்கும் இழந்த பார்வையை மீண்டும் அளித்து சிற்பங்களைச் செதுக்க வைத்தார். கிணற்றில் விழுந்துவிட்ட ஒரு இளைஞனை தன் தவ வலிமையால் உயிரோடு மீட்டுத் தந்தார். படிப்பறிவற்ற ஒரு பாமரனுக்கு ஞானம் அளித்து, தன்னோடு வாதம் செய்ய வந்த பண்டிதரோடு அவனை சொற்போர் நிகழ்த்த வைத்து, பண்டிதரின் கர்வத்தை அடக்கினார். பீஜப்பூர் சுல்தானால் கைது செய்யப்பட்ட ஒரு அப்பாவி கணக்கரை தன்னுடைய மகிமையால் விடுவித்தார். அவற்றையெல்லாம் பட்டியலிடப் பக்கங்கள் போதாது!
தனது இறுதி காலத்தில் ராமதாஸர் பாரதம் முழுவதும் தீர்த்த யாத்திரை மேற் கொண்டு பல இடங்களுக்கு_சென்றார். தஞ்சையில் ஒரு மடத்தை நிறுவினார். கடைசியாக 1642 ம் ஆண்டு சதராவுக்கு அருகில் இருக்கும் சஜ்ஜ்வட் எனும் ஊரில் ஜீவ சமாதி ஆனார். அவர் இந்த உலக வாழ்வை துறந்த போது ஒரு பிரகாச ஒளி அவரின் உடம்பிலிருந்து கிளம்பி மேலே சென்றது
ஸ்ரீராம் ஜய ராம் ஜய ஜய ராம்
TAGS சமர்த்த ராமதாஸர், ராமதாஸர், சிவாஜி, சிவாஜிக்கு
நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ... |
ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.