கரோனா வைரஸ் பாதிப்புக்கான நடவடிக்கைகளில் அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், தென்கொரியா மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியா சிறந்ததாக விளங்குகிறது என்று ஆக்ஸ் போர்டு பல்கலைக்கழக கரோனா கண்காணிப்பு குழு நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 வகைகளில் இந்த புள்ளிவிவரங்கள் சேகரிக்கப் படுகிறது, இதில் பள்ளிகள் மற்றும் பணியிடங்களை மூடுவதற்கு அரசாங் கங்கள் எவ்வாறு நடவடிக்கை எடுத்தன, பொதுநிகழ்வுகளை ரத்துசெய்தல், பொது போக்குவரத்தை மூடுவது, பொதுதகவல் பிரச்சாரத்தைத் தொடங்குவது, உள்இயக்கம் மீதான கட்டுப்பாடுகள்; சர்வதேச பயணக் கட்டுப்பாடுகள், நிதி நடவடிக்கைகள், பண நடவடிக்கைகள், சுகாதார சேவையில் அவசரமுதலீடு; தடுப்பூசிகளில் முதலீடு; சோதனை கொள்கை, மற்றும் நோயாளியின் தொடர்பு தடமறிதல் ஆகியவற்றில் இருந்து தகவல்கள் திரட்டபடுகின்றன.
வைரஸ் தொற்று நாட்டிற்கு வந்ததிலிருந்து இந்தியா விரைவாக செயல் பட்டு வெடிப்பைக் கட்டுப்படுத்த தொடர்ச்சியான நடவடிக்கைகள் எடுத்தது. 21 நாட்கள் ஊரடங்கு, விரைவான சோதனை, பொதுபோக்குவரத்து மற்றும் சர்வதேச பயணங்களை நிறுத்தியது, சர்வதேச விமானங்களுக்கு தடைவிதித்தது.
ஏழைகளுக்கு ஆதரவளிப்ப தற்கான நடவடிக்கைகளை அறிவித்துள்ளது மற்றும் இந்திய ரிசர்வ்வங்கி வட்டி வீதக்குறைப்பு மற்றும் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளை கட்டவிழ்த்து விட்டது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
ஆக்ஸ்போர்டு கண்காணிப்பு புள்ளி விவரங்கள் படி இந்தியா தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது, மற்றநாடுகள் விரைவான நடவடிக்கைகளை வெளியிடுவதில் பின்தங்கியுள்ள நிலையில், பதில் இந்தியா விரைவாக இருந்தது என்று கூறுகிறது.
பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ... |
ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ... |
தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ... |