தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் இதுவரை 6 லட்சத்து 37 ஆயிரத்து 868 பேருக்கு உணவு பொருட்களும், 32 லட்சம் உணவு பொட்டலங்களும் வழங்கப்பட்டுள்ளதாக கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் 24-ம் தேதி ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாள்முதல் அரிசி, பருப்பு, எண்ணெய், மளிகைப் பொருட்கள் அடங்கிய ‘மோடி கிட்’ வழங்குதல், ‘மோடி கிச்சன்’ என்ற பெயரில் உணவுப் பொட்டலங்கள் வழங்குதல், முகக்கவசம், கிருமி நாசினி வழங்குதல் போன்ற பணிகளில் பாஜகவினர் ஈடுபட்டுள்ளனர்.
ஏப்ரல் 19 வரை தமிழகம் முழுவதும் 32 லட்சத்து 10 ஆயிரத்து 490 உணவு பொட்டலங்கள், 6 லட்சத்து 37 ஆயிரத்து 868 பேருக்கு உணவுப்பொருட்கள், 8 லட்சத்து 69 ஆயிரத்து 433 முகக் கவசங்கள் மற்றும் கிருமி நாசினி பாட்டில்கள் வழங்கப் பட்டுள்ளன. ‘பிஎம் கேர்ஸ்’நிதிக்கு 38,187 பாஜகவினர் நன்கொடை வழங்கியுள்ளனர். 4 லட்சத்து 25 ஆயிரத்து 648 பேர் சேவைப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ... |
ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ... |