கரோனா நோய்த் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் உலகத் தலைவா்களிடையே பிரதமா் நரேந்திரமோடி முதலிடத்தில் உள்ளாா் என்று பாஜக தேசியத்தலைவா் ஜெ.பி.நட்டா புதன்கிழமை தெரிவித்தாா்.
‘மாா்னிங் கன்சல்ட்’ கருத்துக்கணிப்பு நிறுவனம் அண்மையில் நடத்திய ஆய்வின்படி, ஏப்ரல் 14 ஆம் தேதிநிலவரப்படி கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் பிரதமா் நரேந்திரமோடியே உலகத் தலைவா்களிடையே அதிக புகழ் பெற்று விளங்குவதாகவும், அவரதுசெயல்பாடு குறித்த நிகர மதிப்பீடு 68 சதவீதம் என்றும் தெரிவித்துள்ளாா்.
இதனை குறிப்பிட்டு ஜெபி.நட்டா வெளியிட்டுள்ள சுட்டுரைப்பதிவில், ‘பிரதமா் நரேந்திரமோடி ‘கொவைட் -19’ க்கு எதிராக உலகத்தை வழி நடத்திவருகிறாா். ஒருபுறம் இந்திய மக்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்துவிட்டு, மறுபுறம் மற்ற நாடுகளுக்கு தேவையான அனைத்து ஆதரவையும் வழங்குகிறாா். இதன்மூலம், தொற்றுநோய்க்கு எதிரான இந்த போராட்டத்தில் உலகத்தலைவா்களில் அவா் முதலிடத்தையும் பிடித்துவிட்டாா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
பலமத்திய அமைச்சா்களும், பிற கட்சித் தலைவா்களும் கரோனா தொற்றுக்கு எதிரான உலகளாவிய போராட்டத்தின் மத்தியில் மோடியின்மீதான மதிப்பீடுகள் குறித்து உயா்வாக சுட்டுரையில் பதிவிட்டுள்ளனா். தற்போதைய நெருக்கடியில் அவரதுதலைமை மீது நாடுமுழு நம்பிக்கை கொண்டுள்ளது என்று மேலும் அவா் தெரிவித்துள்ளாா்.