மகாராஷ்டிராவில் தனது வாகனத்தில் குஜராத்துக்கு சென்று கொண்டிருந்த சாதுக்கள் தடுத்து நிறுத்தப்பட்டு வெட்ட வெளியில் அடித்தே கொல்லப்பட்டுள்ளனர். அவர்கள் சாதுக்கள் என்பதால் ஊடகங்கள் கண்டுகொள்ள வில்லை. கம்யூனிஸ்ட்கள், காங்கிரஸ்கள் அலட்டிக்கொள்ள வில்லை. இதைக்கண்டு வெகுண்ட அலட்டிக் கொண்ட, ரிபப்லிக் தொலைக்காட்சி அருணாப்போ தாக்கப்பட்டுள்ளார். விசாரணை போர்வையில் அவதிக்குள்ளாகி உள்ளார்.
இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள, சுஷில் கிரி மகாராஜ், மகாராஜ் கல்பவ்ரிக்ஷா கிரி மற்றும் அவரது ஓட்டுநர் நிலேஷ் தெல்கேட் ஆகியோர் பால்கர் பகுதியில் இரவு நேரத்தில் ஒரு கும்பலால் தடுத்து நிறுத்த படுகின்ற்றனர். அவர்களது வாகனம் பஞ்சர் செய்யப்படுகிறது. தாக்கப் படுகிறது. அவர்கள் கிட்னி திருடுபவர்களாகவும், குழந்தை பிடிப்பவர்களாகவும் கட்டு கதை புனையபட்டு தாக்க படுகிறது.
அவர்களை பாதுகாக்க வரும் காவல் துறை அசட்டையாக இருக்க, மக்களை சமாதான படுத்த வேண்டிய தேசிய வாத காங்கிரசை சேர்ந்த உள்ளாட்சி பிரதி நிதியும் அமைதி காக்க, அப்பகுதியில் செல்வாக்கு மிக்க கம்யூனிஸ்ட்கள் மறைந்து கொள்ள, அவர்கள் முன்னிலையிலேயே அடித்து துடிதுடிக்க கொள்ளப்படுகிறார்கள். பொய்யான வதந்திகளை நம்பி மக்கள் அறியாமல் கொன்று விட்டார்கள் என்று வழக்கை முடிக்க எத்தனிக்கிறது காவல் துறை. மூன்று திருடர்கள் கிராம மக்களால் அடித்து கொல்லப் பட்டார்கள் என்று தலைப்பு செய்திகளாக்கி விசாரணையற்ற விசித்திரமான தீர்ப்பை எழுதுகின்றன அன்றைய பத்திரிக்கைகள்.
ஆனால் இவைகள் அந்த பகுதி பொதுமக்களால் திட்டமிட்ட சதியாகவே பார்க்க படுகிறது. பால்கர் சட்டமன்ற தொகுதி 1999 இல் இருந்து இடது சரிகளின் ஆதிக்கத்தில் உள்ளது. இங்கு இவர்களால் இந்து மதத்துக்கு எதிராக முன்னெடுக்கப்படும் போலி பிரச்சாரங்களும், அதற்க்கு ஒன்றும் அறியாத அந்த பகுதி ஆதிவாசிகள் பலிக்கிடா ஆவதும், பின் மதமாற்ற மிஷனரிகளிடம் மடை மாற்றப் படுவதும் வாடிக்கை. ராமனுக்கு பதிலாக ராவணனை முன்னிறுத்துவதும், துர்க்கைக்கு பதிலாக அசுரர்களை முன்னிறுத்துவதும் கம்யூனிஸ்ட்களின் மற்றொரு சதி.
இப்படி அபத்தங்கள் நிறைந்த பகுதியில் தான் இவை நடந்துள்ளது, இதில் 5ந்து முக்கிய குற்றவாளிகள் கம்யூனிஸ்ட்கள் . அதாவது பொது மக்களின் போர்வையில் கம்யூனிசம் விளையாடியுள்ளது, இது ஒன்றும் அவர்களுக்கு புதிதல்ல. கேரளாவிலும், மேற்கு வங்கத்திலும் கொத்து கொத்தாக வலதுசாரிகளை கொன்றவர்கள் ஆச்சே. இந்த சாதுக்களை கொன்றால் யார் கேட்க போகிறார்கள் என்று நினைத்து விட்டார்கள்.
அதுவும் உண்மைதான் 1966 இல் இந்திரா காந்தியின் அரசு பசு வதைக்கு எதிராக பாராளுமன்றம் முன் போராடிய 100 கணக்கான சாதுக்களை சுட்டு கொன்றதையோ, ஒடிசாவில் சுவாமி லெக்ஷ்மானந்தா மிஷினரிகளின் தூண்டுதலில் மாவோயிஸ்ட்களால் சுட்டு கொல்லப்பட்டதையோ இந்த சமூகம் மறந்துதானே போயிற்று?.
நன்றி தமிழ் தாமரை VM வெங்கடேஷ்
இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ... |
எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ... |
சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ... |