கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மோடி முதல் இடம்

உலகம் முழுவதும் சுமார் 210 க்கும் அதிகமான நாடுகளில் கொரோனாவின் தாக்கம் மெல்லமெல்ல அதிகரித்து வருகிறது. அதில் குறிப்பாக அமெரிக்கா இத்தாலி ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் அதனுடைய கோரத்தாண்டவம் பார்க்கமுடிகிறது.

தொடர்ந்து மனிதகுலத்திற்கு பெரும் சவாலாக இருக்கக் கூடிய வைரசால் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்ற ஒருதருணத்தில் இந்தியாவிலும் தாக்கம் மெல்லமெல்ல அதிகரித்து வருகிறது. இருந்தபோதிலும் ஆரம்ப காலகட்டத்திலேயே ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தார் பிரதமர் நரேந்திர மோடி. அதன்பிறகு ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த ஒரு     நிலையில் முழுவதும் கட்டுக்குள் கொண்டுவரப்படாததால் இரண்டாவது முறையாக 19 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து மொத்தம் 40 நாட்கள் என வரும் மே 3ம் தேதிவரை ஊரடங்கு தொடரும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்தநிலையில் கொரோனா பரவுதலை தடுக்க சிறப்பாக கையாளும் உலக தலைவர்கள் யார் யார் என்பது குறித்து மார்னிங் கன்சல்ட் என்ற சர்வதேச நிறுவனம் ஓர் ஆய்வை மேற்கொண்டது. அந்த ஆய்வின் படி தரவரிசைப் பட்டியலை தயார் செய்தது. அதில் 68 புள்ளிகளை பெற்று பிரதமர் நரேந்திர மோடி முதல் இடத்திலும் அவருக்கு அடுத்தபடியாக மெக்சிகோ அதிபர் லோபஸ் ஓபரேட்டர் இரண்டாவது இடத்தையும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் 35 புள்ளிகள் பெற்று 3வது இடத்தையும் பிடித்தனர்.

இதில் உற்றுநோக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் உலகையே ஆட்டிப் படைக்கும் வல்லரசான அமெரிக்க அதிபரும், பிரதமர் மோடியின் நண்பருமான டிரம்ப் மைனஸ் 3 புள்ளிகளுடன் 8வது இடத்தை பிடித்தார். பிரான்ஸ் அதிபர் மெக்ரானுக்கு மைனஸ் 21 புள்ளிகள் பெற்று 9 ஆவது இடத்திலும், ஜப்பான் பிரதமர் ஷிங்கே அபேவுக்கு மைனஸ் 33 புள்ளிகளுடன் 10 ஆவது இடமும் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் பிரதமர் நரேந்திர மோடியின் புகழ் மேலும் அதிகரித்து, உலக அளவில் பெரும் தலைவராக உருவெடுத்து உள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணி ...

தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணியில்தான் இருக்கிறோம் தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணியில்தான் இருக்கிறோம் என மத்திய அமைச்சர் ...

ஜனநாயகத்தின் தாயாகம் இந்தியா

ஜனநாயகத்தின் தாயாகம்  இந்தியா இந்தியா, ஜனநாயகத்தின் தாயாக உள்ளதாகவும், பலசவால்களுக்கு மத்தியில் அதிவேகமாக ...

எல்விஎம் 3 – எம் 3 ராக்கெட் வெற் ...

எல்விஎம் 3 – எம் 3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது எல்விஎம் 3 - எம் 3 ராக்கெட் மூலம் ...

விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 ...

விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 லிருந்து 140 ஆக உயர்வு தில்லி-தரம்சாலா-தில்லி இடையிலான முதலாவது இண்டிகோ விமானத்தை மத்திய தகவல் ...

பெண்சக்தி தான், வளர்ந்த பாரதத்த ...

பெண்சக்தி தான், வளர்ந்த பாரதத்திற்கான பிராணவாயு எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  மனதின் குரலில் உங்களை மீண்டும் ...

கோவிட் விழிப்புடன் இருக்க வேண் ...

கோவிட் விழிப்புடன்  இருக்க வேண்டும் கோவிட்-19, இன்ஃப்ளூயன்சா தடுப்புக்கான பொதுசுகாதார தயார் நிலை ...

மருத்துவ செய்திகள்

மூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்

1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ...

கோழிக்கறியின் மருத்துவக் குணம்

சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ...

வாழையின் மருத்துவக் குணம்

வாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி எடுத்து ஒரு ...