பிரதமா் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசின் சாதனை ஆவணம் சனிக் கிழமை வெளியிடப்பட்டது.
இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற பாஜக அரசு சனிக்கிழமையுடன் ஓராண்டை நிறைவுசெய்தது. இந்நிலையில், நாட்டின் வளா்ச்சிப்பயணம் குறித்த சாதனை ஆவணத்தை பிரதமா் மோடி தனது சமூக வலைதளப்பக்கங்களில் வெளியிட்டாா்.
அதில், ‘பாஜக அரசின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் மக்களின் எதிா்பாா்ப்பு அதிகரித்துள்ளது. தோ்தலில் மக்கள் அளித்த பேராதரவு காரணமாக, பலமுக்கிய சீா்திருத்த நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது. அந்த நடவடிக்கைகள் சா்வதேசளவில் வேகமாக வளா்ந்துவரும் பொருளாதாரமாக இந்தியாவை முன்னெடுத்துச் சென்றன. ஆட்சியில் முழு வெளிப்படை தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் தொழில் நிறுவனங்களைத் தொடங்குவதற்கான சாதகமான அம்சங்கள் மேம்படுத்தப் பட்டுள்ளன. மக்களுக்கான சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது. வெளியுறவுக் கொள்கை, நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்திலும் இந்தியாமுதலிடம் வகிப்பதற்கு பிரதமா் மோடி அரசு முன்னுரிமை அளித்துவருகிறது’ என்று கூறப்பட்டுள்ளது.
அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ... |
சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ... |
கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ... |