நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொருளாதாரம் பெருத்தஅடி வாங்கியுள்ளது எனலாம். அதேசமயம் கொரோனாவின் காரணமாக லாக்டவுனும் ஐந்தாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்தமுறை சற்று தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், பொருளாதாரம் குறித்து பிரதமர் மோடி சிஐஐ கூட்டத்தில் என்ன பேசப்போகிறார்? தொழில் துறையினருக்கு ஏதேனும் அறிவிப்புகள் உண்டா என்ற பலத்த எதிர்பார்ப்புகள் இருந்து வந்தது.
இதற்கிடையில் இந்திய தொழில் துறை கூட்டமைப்பின் (CII) 125 ஆவது ஆண்டு கூட்டம் இன்று நடைபெற்றது.
அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, அதுவும் அன்லாக் 1க்கு பிறகு பொருளாதாரம் குறித்த முதல் உரை இதுவேயாகும். கொரோனா வைரஸ் காரணமாக 2 மாதங்களுக்கு மேலாக லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் பொருளாதாரம் மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. எனினும் தற்போது மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்புவதற்கான பாதையில் உள்ளது.
அதன் ஒருபகுதியாக ஐந்தாம் கட்ட ஊரடங்கில் மேலும் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, பல்வேறு நிபந்தனைகளுடன் தொழில்நிறுவனங்களில் பணிகளை தொடங்கியுள்ளன. இந்த நிலையில் கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டும். அதேநேரத்தில் பொருளாதாரத்தையும் வலுப்படுத்த வேண்டும். கொரோனாவை எதிர்கொள்ள நாம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும் என்றும் பிரதமர் மோடி தனது உரையில் கூறியுள்ளார்.
இப்படி ஒருநிலையில் வளர்ச்சியை மீண்டும்பெறுதல் என்ற நடவடிக்கையை சிஐஐ தொடங்கியுள்ளது. இதற்காக இந்தியத் தொழில் துறையினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். நாம் கொரோனாவால் இழந்த பொருளாதாரத்தை விரைவில்மீட்டு எடுப்போம். விவசாயம், தொழில்செய்வோர், தொழில் முனைவோர் மற்றும் தொழில்நுட்பத்தால் பொருளாதாரம் விரைவில் மீளும்.
மேலும் கொரோனா பிரச்சனைக்கும் மத்தியிலும் பொருளாதாரம் வளர்ச்சி பாதையில்தான் சென்று கொண்டிருக்கிறது. பொருளாதாரத்தை மீண்டும் வலுப்படுத்துவது அரசின் முன்னுரிமைகளில் ஒன்றாக உள்ளது எனவும் பிரதமர்மோடி தனது உரையில் கூறியுள்ளார். மேலும் பொருளாதாரத்தினை மீட்பதற்காக அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளையும் முடிவுகளையும் எடுத்துவருகிறது. அதோடு நாட்டிற்கு நீண்டகாலம் உதவக்கூடிய முடிவுகளையும் எடுத்துள்ளோம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மேலும் உலகம் நம்பகமான கூட்டாளரைதேடி வருகிறது. இந்தியாவில் தேவையான ஆற்றல், வலிமை மற்றும் திறன் உள்ளது. இன்று உலகம் முழுவதும் இந்தியா உருவாக்கிய நம்பிக்கையிலிருந்து பயனடைய வேண்டும். இப்போது உலகளாவிய விநியோக சங்கிலியை வலுப்படுத்தும்முன், உள்ளூரில் முதலில் வலுப்படுத்த நாம் அதில் முதலீடுசெய்ய வேண்டும் என்றும் பிரதமர் தனது உரையில் கூறியுள்ளார்.
ஆக இந்ததீவிர நடவடிக்கையில் கொரோனாவுக்கு பிந்தைய நடவடிக்கையில், சிஐஐயும் முக்கிய பங்கு வகிக்க வேண்டும். மேலும் இந்தியா வளர்ச்சி பாதையில் செல்ல ஐந்து முக்கிய விஷயங்கள் தேவை. அதுமுதலில், நோக்கம், உள்ளடக்கம், முதலீடு, உள்கட்டமைப்பு மற்றும் புதுமை ஆகிய இவை அனைத்தும் முக்கியமானவை.
சுரங்கத் துறை, எரிசக்தி துறை அல்லது ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பம் என எந்த துறையானலும், அதில் ஒவ்வொரு துறையிலும் இளைஞர்களுக்கு பலபுதிய வாய்ப்புகள் இருக்கும் என்றும் பிரதமர் தனது உரையில் கூறியுள்ளார். எங்களை பொறுத்தவரை சீர்திருத்தங்களை கொண்டுவர என்பது தைரியமான முடிவுகளை எடுப்போம்.
மேலும் சிறுகுறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான வாய்ப்புகள நாங்கள் அதிகரிக்க முயற்சிக்கிறோம். அரசின் நிலைமையை புரிந்துகொள்ள, உலகளாவிய நிலையினையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்தியா பொருளாதாரத்துக்கு எம்எஸ்இக்களின் பங்கு என்ன என்பதை நாம் அறிவோம். ஆக அவர்களை அரசு ஊக்குவித்துவருகிறது.
வளர்ச்சி என்பது அவ்வளவு கடினமானதல்ல, நீங்கள் அனைவரும் தொழில்துறை அலகுகள். ஒரு தெளிவான பாதையினை கொண்டு இருக்கிறீர்கள். மேலும் தற்போது காலத்தின் தேவை என்பது மேட் இன் இந்தியா தயாரிப்புகள்தான். அவை உலகத்திற்காக தயாரிக்கப்பட்டவை. மேலும் இறக்குமதியை குறைப்பதில் நாம் கவனம்செலுத்த வேண்டும். மேலும் இந்தியாவின் தனியார்துறை என்பது இந்தியாவின் வளர்ச்சியினை உறுதிசெய்வதில் ஒரு வகை கூட்டாளராகும் என்றும் பிரதமர் மோடி தனது உரையில் கூறியுள்ளார்.
இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ... |
இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ... |
நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ... |