பசுவை கொன்றால் 10 ஆண்டுகள்வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் புதிதாக அவசர சட்டம் இயற்ற பட்டுள்ளது.
பசுவதைக்கு எதிரான உத்தரப்பிரதேசத்தின் சட்டத்தில், தவறுசெய்பவர்கள் தப்பிப்பதற்கான வழிகள் இருப்பதாகக் கூறி பசுவதையை தடுப்பதற்காக புதிய அவசரசட்டம் ஒன்றை இயற்றியுள்ளது உத்தரப்பிரதேச அரசு. புதிய சட்டத்தின் படி, பசுவைக் கொன்றால் அதிக பட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கும் வகையில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், பசுவுக்கு எதிரான பல்வேறு குற்றங்களுக்காக தற்போதுள்ள ரூ .10,000 அபராதம், ரூ .3 லட்சம் முதல் ரூ .5 லட்சம்வரை விதிக்கப்படும் வகையில் சட்டம் மாற்றப்பட்டுள்ளது. 5 பி என்ற புதிய பிரிவை சேர்த்து, அதன் மூலம், பசுவுக்கு காயம் ஏற்படுத்துவோர்களுக்கு ஒன்று முதல் ஏழு ஆண்டுகள்வரை சிறைத் தண்டனையும், விதிகளை மீறி பசுக்களை வேறு இடத்திற்கு கொண்டு செல்பவர்களுக்கு ரூ .1 லட்சம் முதல் ரூ .3 லட்சம்வரை அபராதமும் விதிக்கிறது. மேலும், பசுவுக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்காததும் தண்டனைக் குரிய குற்றமாக மாற்றப்பட்டுள்ளது.
நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ... |
வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ... |
கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ... |