சீன கம்மினிஸ்ட் கட்சி என்பது ஒரு மாபியா கும்பல்

சீன பொருட்களை நாம் புறக்கணிக்கவேண்டும் எனும் குரல் வெகுநாட்களாகவே ஒலித்துவரும் வகையிலே சீன பொருட்களை புறக்கணிப்பது சாத்தியமா? அவசியமா? முடியுமா என பார்க்கவேண்டும்.

போகும் முன்னர் நாம் சில பல அடிப்படை விஷயங்களை புரிந்து கொள்ள வேண்டும்.

உலக அளவிலான ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்திலே எந்த நாடும் எந்த ஒரு நாட்டையும் முழுசாக தவிர்க்கமுடியாது. நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக ஏற்றுமதி இறக்குமதி நடந்தே தீரும்.நம்மிடம் இல்லாத இயற்கை வளங்களை நாம் இறக்குமதி செய்து தான் ஆகவேண்டும். அதற்கு வேறு எந்த வழியும் இல்லை.

இந்த இரண்டையும் புரிந்துகொண்டால் இந்த விஷயத்தை உணர்ச்சிவசப் படாமல் வர்த்தக ரீதியாகவே அணுகலாம்.சரி அப்படியானால் நாம் எதை எதிர்க்கவேண்டும்? எப்படி இந்த விஷயத்தை அணுகவேண்டும்.

மற்ற நாடுகள் இங்கே வியாபாரம் செய்யும்போது இங்கிருக்கும் வியாபாரிகளையும் உற்பத்தியாளர்களையும் ஏமாற்றியோ அல்லது மோசடியான முறைகளிலோ முடக்க அனுமதிக்ககூடாது.நம்முடைய நாட்டை பற்றிய தகவல்கள், நாட்டிலே இருப்போர் பற்றிய தகவல்களை வெளியே எடுத்துசெல்ல அனுமதிக்ககூடாது.
இதையெல்லாம் விட முக்கியமானது நம்முடைய அறீவு செல்வங்கள், இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்பட அனுமதிக்கப்படக்கூடாது.

இந்த மூன்றும் எல்லா நாடுகளுக்கும் பொருந்தும். எனவே இந்த விஷயத்திலே சீனா எப்படி செயல்படுகிறது என பார்க்கவேண்டும்.சீனாவைப்பற்றி நாம் அறிந்துகொண்டால் ஒழிய இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது.

முதலிலே சீனாவிலே தனியார் கம்பெனிகள் கிடையாது. எல்லாதனியார் கம்பெனிகளிலேயும் சீன கம்மினிஸ்ட் கட்சியின் அலுவலகம் இருக்கும். சீன கம்மினிஸ்ட் கட்சியின் ஆட்கள் எல்லா கம்பெனிகளையும் தொடர்ந்து மேற்பார்வையிடுவார்கள்.

தொழில் தொடங்க, கம்பெனிகளிலே பதவி உயர்வு கிடைக்க, கம்பெனிகளிலே தலமை நிர்வாகி போன்ற பொறுப்புகளுக்கு கம்மினிஸ்ட் கட்சியின் ஆட்கள் மட்டுமே வரமுடியும். பெரிய கம்பெனிகளின் சீஇஒ க்கள் அனைவருமே கம்மினிஸ்ட் கட்சி உறுப்பினர்கள்தான். அலிபாபாவின் ஜேக் மா, ஹூவாயின் ரென் செங்பி போன்ற அனைவருமே கம்மினிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள், ராணுவத்திலே பணியாற்றியவர்கள்தான்.

ஒரு சில தனியார் கம்பெனிகளை தவிர பெரும்பாலான கம்பெனிகளே கம்மினிஸ்ட் கட்சியாலோ அல்லது அதன் உறுப்பினர்களாலோ பினாமியாக நடத்தப்படுபவை. ஏகப்பட்ட கம்பெனிகளை கம்மினிஸ்ட் கட்சியே அரசு என்ற பெயரிலே நேரடியாகவே நடத்துகிறது.

எனவே எல்லா கம்பெனிகளும் சீன கம்மினிஸ்ட் கட்சியின் எல்லா வேலைகளுக்கும் துணை போகவேண்டும். அடுத்த நாடுகளை உளவு பார்ப்பதிலே இருந்து பொருட்களை வாங்கி குவிப்பது வரை எல்லா கம்பெனிகளும் கட்சி சொல்லும் வேலையை செய்யவே செய்தே ஆகவேண்டும். சமீபத்திலே தேசிய உளவுத்துறை சட்டம் என்ற ஒன்றை இயற்றி எல்லா கம்பெனிகளும் சீனாவின் உளவுவேலைகளிலே உதவவேண்டும் என்பதை சட்டப்படியே கட்டாயமாக்கியிருக்கிறது.

டிக்டாக் ஆப்ஐ நடத்தும் கம்பெனியான பைட்டேன்ஸ் கம்பெனி சீன கம்மினிஸ்ட் கட்சி ஆட்களையே வேலைக்கு எடுப்போம் என அறிவித்தது. ஏன்னா அந்த கம்பெனியின் டிக்டாக் போன்ற ஒரு ஆப்ஐ சீன கம்மினிஸ்ட் கட்சி இழுத்து மூடியது. அதற்கு டிக்டாக் நிறுவனர் ஜாங் யிமிங்க் மன்னிப்பு கேட்டு சோலிசத்தின் அடிப்படை அம்சங்களோடு இந்த செயலி ஒத்துப்போகவில்லை, அதிபர் ஜீ ஜிங்பிக்ங்க் இன் சிந்தனைகளை பரப்பவில்லை என அறிக்கைவிட்டார்.

கவனிங்க சீனாவிலே யாவாரம் செய்தால் சீன கம்மினிஸ்ட் கட்சியின் கொள்கைகளை அமல்படுத்தவேண்டும் இல்லாவிடில் ஆப்பு தான்.

இப்படி கம்பெனிகள் நடத்துவதால் ஊழல், கொடுமைகள், வன்முறைகள் பாலியல் வன்முறை உட்பட என எல்லாமுமே அதிகம் அங்கே.

நீதிமன்றத்தை நடத்துவதும் கட்சி தான் என்பதால் கட்சியை மீறி அங்கே ஏதுமே கிடையாது.

இதிலிருந்து புரிவது என்ன?

சீன கம்மினிஸ்ட் கட்சி என்பது ஒரு மாபியா கும்பல். ஆட்சிக்கும் அதிகாரத்திற்கும் என்ன வேண்டுமானாலும் செய்யும் கும்பல் அது.

இந்த இடத்திலே சீன மக்களையும் சீன கம்மினிஸ்ட் கட்சியையும் பிரித்து பார்க்கவேண்டும். குறிப்பிட்ட மதம் இருக்கும் நாடுகளை போல மதமும் ஆட்சியும் ஒன்று என மக்கள் நினைப்பதில்லை. குறீப்பாக பக்கத்து எதிரி நாட்டிலே எந்த கட்சி வந்தாலும் மதவெறியை மீறி ஏதும் செய்துவிட முடியாது.

ஆனால் அமெரிக்கா போன்ற நாடுகளிலே அப்படி இல்லை. அதே போலத்தான் சீனாவிலே. ஒரு சீன குடிமகனுக்கு மற்ற நாடுகளின் மீது வெறுப்பு இருக்காது. 3000 வருட பாரம்பரியம் கொண்ட அவர்கள் நம்மைப்போலவே தான் இருப்பார்கள்.

ஆனால் சீன கம்மினிஸ்ட் கட்சி அப்படி அல்ல. அது ஒரு நாசகார கும்பல்.

சீன உற்பத்தி, தயாரிப்பு எல்லாம் இந்த அடிப்படையிலே தான் செய்யப்படுபவை. ஆனால் சீனா வளர்ந்திருக்கிறதே, சீன மக்கள் வறுமையிலே இருந்து விடுபட்டு இருக்கிறார்களே என்றால் அது எந்தளவுக்கு உண்மை என நமக்கு தெரியாது. சீனாவிலே 20 கோடிப்பேர் வறுமையிலே உள்ளனரா 30 கோடிப்பேரா என சீன அரசு வெளியிட்டு இருக்கும் இரண்டு தகவல் அறிக்கைகளே முரண் படுகின்றன.

சீனர்கள் இப்போது எல்லா மிருகங்களயும் தின்பதே மாசெதுங் இன் காலத்திலே ஏற்பட்ட கடும்பஞ்சத்திலே தான். அப்போது தான் நாய், எலி, கரப்பான் பூச்சி என எல்லாவற்றையும் தின்ன ஆரம்பித்தார்கள். ஐந்தில் இருந்து பத்துக்கோடிப்பேர் பஞ்சத்திலே இறந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. எவ்வளவு என இன்னமும் தெளிவாக தெரியாது.

சரி சீனா தயாரிப்பு என சொல்லும்போது சீன கம்பெனிகள் தயாரிப்பதையும் சீனாவிலே மற்ற நாடுகளின் கம்பெனிகள் அங்கே உற்பத்தி தொழிற்சாலை வைத்திருப்பதையும் பிரித்து பார்க்கவேண்டும். இங்கே சீன கம்பெனிகள் என்றால் கம்மினிஸ்ட் கட்சியின் பினாமி என புரிந்துகொள்ளவேண்டும்.

நமது கம்பெனிகளே நிறைய அங்கே உற்பத்தி தொழிற்சாலைகள் வைத்திருக்கின்றன. சிவகாசி பட்டாசு உற்பத்தி இப்போது நிறைய சீனாவிலே நடக்கிறது. டிவிஎஸ் இல் இருந்து ஏகப்பட்ட கம்பெனிகள் அங்கே உற்பத்தி தொழிற்சாலைகள் வைத்திருக்கின்றன.

அப்படியானால் இரண்டு விஷயம் இப்போது

1. சீன கம்மினிஸ்ட் கட்சியின் பினாமியாக இருக்கும் நிறுவனங்களின் தயாரிப்புக்கள்.
2. வெளிநாட்டுகம்பெனிகள் அங்கே தொழிற்சாலை வைத்து தயாரிக்கின்றன. – இந்த கம்பெனிகளுக்கு அங்கிருக்கும் கம்பெனிகள் பொருட்களை உற்பத்தி செய்து தரலாம் அல்லது அங்கிருக்கும் இயற்கை வளங்களை கொடுக்கலாம்.

இந்த இரண்டிலும் பொதுவான விஷயம், சீனா தன்னுடைய உள்நாட்டு கண்டுபிடிப்புகளையோ தொழில்நுட்பத்தையோ நம்பி இந்த தயாரிப்புகள் முழுவதையும் செய்வதில்லை. வெளிநாட்டு அதாவது நம்முடைய, ஐரோப்பிய, அமெரிக்க, ஜப்பானிய தொழில்நுட்பங்களை திருடித்தான் பெரும்பாலான தயாரிப்புகளை செய்கிறது.

எடுத்துக்காட்டாக சீன மொபைல் கம்பெனிகள் முழுக்க முழுக்க அமெரிக்க கணினி சிப்களின் தொழில்நுட்பத்தையே நம்பியிருக்கின்றன. அமெரிக்கா அதை கொடுப்பதை நிறுத்திவிட்டால் திவால் தான். வெளிநாடுகளிலே இருந்து இப்படி பட்ட தொழில்நுட்பங்களை திருடுவதற்கே தனி அமைப்பு வருடத்திற்கு பல லட்சம்கோடிகளையும் சீனா செலவழிக்கீறது.

இங்கே ஒரு முக்கியமான விஷயம் சொல்கிறேன். சீனா ஏதுமே கன்டுபிடிக்கவில்லை என சொல்லவரவில்லை. கண்டுபிடிக்கிறது தான் ஆனால் மற்ற நாடுகள் அளவுக்கு இல்லை காரணம் விஞ்ஞானிகள் எப்போதுமே ஒரு மாதிரியான ஆட்கள் தான். அவர்களுக்கு பேச்சு சுதந்திரம் கருத்து சுதந்திரம் முக்கியம். பலரும் தேவையில்லாத விஷயத்திலே உளறுவார்கள். பெரும் விஞ்ஞானியாக இருப்பார்கள் நோபல் பரிசு கூட பெற்றிருப்பார்கள் ஆனால் ஒத்துக்கொள்ளமுடியாத ஒன்றை சொல்லி அரசை அல்லது அரசியல்வாதிகளை கிண்டலடிப்பார்கள். சீனாவிலே இருக்கும் அடக்குமுறைக்கும் இந்த கண்டுபிடிப்புக்கும் ஒத்து வராது.

இந்த இடத்திலே சோவியத் ருஷ்யா விழுந்ததை பார்க்கவேண்டும். பெரும் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர்கள் தான். ஆனால் அடக்குமுறையால் பலரும் வேலை செய்ய வரவே இல்லை. இந்த வித்தியாசத்தை புரிந்துகொள்ளவேண்டும்.

ஆனால் நாம் இறக்குமதி செய்வதிலே பெரும்பாலும் விலைகுறைவான நாமே தயாரிக்க கூடிய விஷயங்கள் தான். ஆனால் சீன கம்பெனிகளால் விலைகுறைவாக கொடுக்கமுடியும்.

அப்படியானால் சீனா பெரிதாகவோ அல்லது நாம் செய்ய முடியாததை செய்யவோ இல்லை என்றால் எப்படி இவ்வளவு உற்பத்தி நடக்கிறது என்றால் அதற்கான காரணங்கள் மிகவும் எளிதானவை.

ஒட்டு மொத்த சீன அரசே பெரும் நிறுவனம் போலத்தான் நடக்கும்.கம்பெனிகள் நிறுவ தயாரிக்க வேண்டிய அனைத்தும் அரசே தரும். வட்டியில்லா கடன், இடம், ஆட்கள் இத்யாதி இத்யாதி.மற்ற நாடுகளிலே ஏதேனும் பிரச்சினை என்றால் அரசே உதவிக்கு வரும். எகா போன மாதம் சீன தயாரிப்பு கோவிட் டெஸ்ட்கிட் சரியில்லை என சொன்னதற்கு நமது நாட்டிற்கான சீன தூதரே அறிக்கைவிட்டார். யோசித்து பாருங்கள் ஏதேனும் ஒரு தனியார் கம்பெனிக்கும் இன்னோர் நாட்டிலே இருக்கும் நிறூவனத்திற்கும் பிரச்சினை என்றால் நம்முடைய அரசு தலையிட்டால் எப்படியிருக்கும்? உலகிலே வேறு எந்த அரசும் இதை செய்வதில்லை.அரசே இந்த இறக்குமதி ஏற்றுமதி இத்யாதி என எல்லாவற்றிலும் தலையிடும் தீர்மானிக்கும்.
சீனாவிலே தயாரிக்க வருபவர்கள் தொழில்நுட்பத்தை கொடுத்துவிட வேண்டும் என விதிகள் உண்டு. இல்லாவிடில் திருடிவிடுவார்கள்.

சீனாவிலே வேலைநிறுத்தம் செய்யமுடியாது, போராட்டம் செய்யமுடியாது, கொடிபிடிக்க முடியாது.சீனாவிலே ஏதேனும் ஊழல் செய்து விட்டு தப்பி ஓடினால் கடத்திக்கொண்டு வந்து போட்டுத்தள்ளிவிடுவார்கள். ஆமாம் ஆள் வைத்து கடத்துவார்கள். விசாரணை ஏதும் கிடையாது.பெரும் பணக்காரர்களோ அல்லது பெரும் கம்பெனிகளின் சீஇஓக்களோ அரசை எதிர்த்து பேசினால் உடனே ஊழல் குற்றச்சாட்டிலே கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்படுவார்கள்.

இப்படி எந்த நாடும் செய்வதில்லை. கம்மினிஸ்ட் ஆட்சியின் கீழிருக்கும் வியட்நாம், கியூபா போன்ற நாடுகள் கூட இப்படி செய்வதில்லை.

இப்படி எல்லாம் இருந்தால் ஏன் தயாரிக்க முடியாது?

சரி ஆனால் பணம் எங்கிருந்து வருகிறது? இப்படி வட்டியில்லா கடன் கொடுக்க எங்கிருந்து பணம் வருகிறது?

இங்கே தான் சீன கம்மினிஸ்ட் கட்சியின் கிரிமினல் மூளை வேலை செய்கிறது.

உள்நாட்டு சேமிப்பை எடுத்து பயன் படுத்துவார்கள்.சீன பணத்தின்மதிப்பை மிகவும் குறைவாக வைப்பார்கள் அப்போதுதானே இறக்குமதி செய்யும் நாடுகளிலே விலைகுறைவாக விற்கமுடியும்.இறக்குமதி செய்யும் நாடுகளிலே அங்கிருக்கும் உள்நாட்டு உற்பத்தியை அழித்தவுடன் பொருட்களின் விலையை ஏற்றி அதிகளவு லாபம் பார்ப்பார்கள்.

இப்படி சீன பணத்தின் மதிப்பை மிகவும் குறைவாக வைத்திருப்பதை பண முறைகேடு என சொல்லுவார்கள். அமெரிக்கா இதற்கான சீனா மீது தடைகள் விதித்துள்ளது.

இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு இரண்டு விதத்திலே அடி. உள்நாட்டு வேலையும் பறிபோகிறது அதே சமயம் வெளிநாட்டு பொருளை அதிக விலை கொடுத்து வாங்கவேண்டிய நிலை.

இந்த டிக்டாக் போன்ற சாப்ட்வேர்கள், ரெட்மீ போன்ற மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் இங்கே செய்யமுடியாதா என்றால் அந்த மாதிரி ஒரு தொழில் தொடங்க இங்கே வங்கியிலே கடன் வாங்க முடியுமா? அரசு தான் உதவி செய்யுமா?

செய்யாது இல்லையா? நமது வங்கிகளிலே கடன் வாங்குவதே பெரிய பிரச்சினை.

சரிங்க ஆனா ஏன் அமெரிக்க, ஐரோப்பிய நிறுவனங்கள் அங்கே முதலீடு செய்யவேண்டும்? அங்கே கம்பெனிகளை கொண்டு போகவேண்டும் ஏன் அதை நம்மால் செய்ய முடியவில்லை?

சீனா ஆட்கள், கருத்துரிமை கட்டுப்பாட்டை விதித்துவிட்டு எவ்வளவு வேண்டுமானாலும் லாபம் சம்பாதிக்க அனுமதிக்கிறது.

நமது நாட்டிலே இப்படி கருத்துரிமைக்கு கட்டுப்பாடு எல்லாம் விதிக்கமுடியாது. அதே எவ்வளவு லாபம் வேண்ணாலும் வைச்சுக்கோன்னும் சொல்லமுடியாது.

அதான் பிரச்சினை.

சரி அமெரிக்க கம்பெனிகளை எப்படி லாபம் சம்பாதிக்க சீனா விடுதுன்னு கேட்டா கூட்டி கழிச்சு பார்த்தா அமெரிக்காவுக்கு நட்டம் தான். பணத்தோட மதிப்பையே இஷ்டத்துக்கு வளைக்க முடியும்போது லாபம் என்ன நட்டம் என்ன? எல்லாமே சீன கம்மினிஸ்ட் கட்சி கட்டுப்பாட்டிலே தானே இருக்கப்போவுது?

நம்மால் சீனா போலவே உற்பத்தி செய்யமுடியுமான்னா முடியும். இங்கிருக்கும் சீன கைக்கூலிகளை ஒழித்தால் செய்யமுடியும்.

சீனா மற்ற நாடுகளிலே எப்படி போராட்டத்தை தூண்டிவிடுகிறது என்பதை தனியே தான் எழுதவேண்டும். ஸ்டெர்லைட் ஒரு நல்ல உதாரணம். நாம் இப்போது வருடத்திற்கு இருபதாயிரம் கோடி அளவுக்கு சீனாவிலே இருந்து செம்பு இறக்குமதி செய்கிறோம்.

2004 இல் 2014 வரை இங்கே வந்திருக்கவேண்டிய உற்பத்தி தொழிற்சாலைகளை சீனாவுக்கு கான்கிரஸ் களவாணிகள் அனுப்பியது பற்றியும் தனியே எழுதவேண்டும்.

சீனா கம்மினிஸ்ட் கட்சி மற்றநாடுகளிலே இருந்து அறிவுச்செல்வத்தை திருடுவது, அதிகவட்டிக்கு கடன்கொடுத்து நாட்டையே எடுத்துக்கொள்வது என பலவிஷயங்கள் ஒவ்வொன்றும் தனித்தனியே எழுதப்ப வேண்டியவை.

 

சீனப் பொருட்களை நம்மால் இங்கேயே தயாரிக்க முடியாது என்றில்லை. தேவை கட்டமைப்பு சீர்திருத்தங்கள். நம்மால் இங்கே தயாரிக்க முடிந்ததை நாம் வாங்குவோம். இங்கே தயாரிக்க முடியாதவற்றை தயாரிக்க முயல்வோம்.

நன்றி : ராஜசங்கர் விஸ்வநாதன்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...

வாய் துர்நாற்றம் நீங்க

ஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . ...

வெண் தாமரைப் பூ

இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ...