சண்டைக் கலைஞராக அறிமுகமாகி நடிகராக மாறியவர் பொன்னம்பலம் 90-களில் வில்லன் நடிகராக பல படங்களில் நடித்து புகழ்பெற்ற பொன்னம்பலம், அப்போது கபாலி என்ற பெயரில் தமிழக மக்கள் மனதில் இடம்பிடித்தார்.
பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் மீண்டும் மக்களிடையே நன்கு பரிச்சயமானார். அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராக தமிழகம் முழுக்க தேர்தல் பிரசாரம் செய்த இவர், 2017-ஆம் ஆண்டு அக்கட்சியிலிருந்து விலகி முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார்.
சமீபத்தில் சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நடிகர் பொன்னம்பலத்தை தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் அவரது மருத்துவ செலவுக்காக ரூ.2 லட்சம் வழங்கினார். எந்த உதவி தேவைப்பட்டாலும் தயக்கமின்றி தன்னை அழைக்குமாறு தமிழக பாஜக தலைவர் கேட்டுக் கொண்டார்.
இச்சந்திப்பின் போது தமிழக பாஜக தலைவருடன், மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகன், மாநில செயலாளர் சுமதி வெங்கடேஷ், கலை, கலாச்சார பிரிவு மாநில தலைவர் நடிகை காயத்ரி ரகுராம் ஆகியோர் உடனிருந்தனர்.
எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ... |
நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ... |