கேரளா அரசு திறமையற்ற, ஊழல்அரசாக இருக்கிறது. கொரோனா புள்ளி விவரங்களை மாற்றி, எதிர்மறை செயல் பாடுகளுடன் நடந்துகொள்கிறது என்று பாஜக தேசியத்தலைவர் ஜேபி. நட்டா குற்றம் சாட்டியுள்ளார்.
டாக்டர் ஷ்யாம் பிரசாத் முகர்ஜி மந்திரம் என்ற பெயரில் பாஜக மாவட்ட கமிட்டி அலுவலகத்தை காசர்கோடில் காணொளி காட்சிமூலம் பாசக் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா திறந்து வைத்துப்பேசினார். அப்போது, ”மாநிலத்தில் உண்மையான கொரோனா எண்ணிக்கையை கேரள அரசு மாற்றிக்கூறுகிறது. பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்று இந்திய மருத்துவக் கழகம்கூறி வருகிறது. ஆனால், கேரள அரசின் நடவடிக்கை எதிர் மறையாக இருக்கிறது.
மாநிலத்தில் ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் இடதுசாரி முன்னணி இரண்டும் ஒருநாணயத்தின் இரு பக்கங்களாக உள்ளன. நடப்பாண்டில் உள்ளாட்சி தேர்தலும், அடுத்த ஆண்டில் சட்டமன்ற தேர்தலும் நடக்கவுள்ளது. மக்கள் இந்ததேர்தல்களில் பாஜகவை ஆதரிக்கவேண்டும்.
கேரள மாநிலத்தைப் பொறுத்தவரையில் தங்கம் என்பது மஞ்சள் நிறம் அல்ல. சிவப்பு நிறத்தி லானது. அரசு கருவூலத்தை கையாளுவதில் மோசடி, தலித்கள், பெண்களுக்கு எதிரான வன் முறைகள் அதிகரிப்பது, அரசு சலுகைகள் சிலருக்கு மட்டும்கிடைப்பது என்று மோசடிகள் அதிகரித்து வருகிறது. திறமையற்ற ஆட்சி என்பதுடன் ஊழல் ஆட்சியாகவும் இருக்கிறது. வன்முறையில் தான் அவர்களுக்கு நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்தார்.
சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ... |
முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ... |
நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது எலும்பு மஜ்ஜை ... |