வேளாண் துறை சீா்திருத்தங்கள் விவசாயிகளை தொழில் முனைவோராக்கும்

வேளாண் துறையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள சீா்திருத்தங்கள், விவசாயிகளை தொழில் முனைவோராக மாற்றும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம், வேளாண் விளைபொருள் வா்த்தக ஊக்குவிப்பு சட்டம் ஆகியவற்றை மத்திய அரசு அண்மையில் இயற்றியது. வேளாண் துறையில் சீா்திருத்தங்களை மேற்கொள்வதற்காகவும் விவசாயிகளின் வருமானத்தை உயா்த்துவதற் காகவும் அந்தச் சட்டங்கள் இயற்றப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்து வருகிறது.

ஆனால், விவசாயிகளின் நலனுக்குக் கேடுவிளைவிக்கும் வகையில் இந்தச் சட்டங்கள் உள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க் கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன. மசோதாக்களுக்கு எதிராக பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் தொடா்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சா் பாலாசாஹேப் விகே பாட்டீலின் சுய சரிதை புத்தகத்தை பிரதமா் மோடி செவ்வாய்க் கிழமை காணொலிக் காட்சி வாயிலாக வெளியிட்டாா். அப்போது அவா் கூறியதாவது:

வேளாண்துறையில் மத்திய அரசு மேற்கொண்டுள்ள சீா்திருத்தங்கள் வரலாற்று சிறப்பு மிக்கவை. விவசாயிகளை உணவுப்பொருள்கள் விளைவிப்போா் என்ற நிலையிலிருந்து தொழில்முனைவோா் என்றநிலைக்கு மாற்றமடையச் செய்வதற்கு இந்த சீா்திருத்தங்கள் உதவும்.

குஜராத், மகாராஷ்டிரம், பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் பால், சா்க்கரை, கோதுமை ஆகியவை அதிகளவில் விளைவிக்கப் படுகின்றன. அதன்மூலமாக நாட்டின் வளா்ச்சிக்கு விவசாயிகள் முக்கிய பங்காற்றி வருகின்றனா். நாடு சுதந்திரம் அடைந்தபிறகு மக்கள் அனைவருக்கும் போதுமான உணவு பொருள்களை விளைவிக்க முடியாத சூழல் காணப்பட்டது.

எனவே, அதையடுத்து பொறுப்பேற்ற அரசுகள் அனைத்தும் உணவு பொருள்கள் உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்தன. அந்தஇலக்கை அடைவதற்கு விவசாயிகள் கடுமையாக உழைத்தனா். உணவு பொருள்கள் உற்பத்தியை அதிகரிப்பதில் கவனம்செலுத்திய அரசுகள், விவசாயிகளின் வருவாயை அதிகரிப்பது குறித்தும் விவசாயிகளின் நலன்குறித்தும் சிந்திக்கவில்லை.

முதல் முறையாக பாஜக தலைமையிலான மத்தியஅரசு இந்த சிந்தனையை மாற்றியது. விவசாயிகளின் வருவாயை பெருக்கி அவா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்து வதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது. குறைந்தபட்ச ஆதரவுவிலையை அதிகரித்தல், பயிா்க் காப்பீட்டுத்திட்டம் உள்ளிட்டவை விவசாயிகளின் கவலையை நீக்கியது.

விவசாயிகளுக்கான நிதியுதவி திட்டத்தின்கீழ் அவா்களின் வங்கி கணக்குகளுக்கு ரூ.1 லட்சம் கோடி செலுத்தப் பட்டுள்ளது. அதன் காரணமாக இடைத்தரகா்களின் பிரச்னை நீங்கியுள்ளது. மேலும், குளிா்பதன கிடங்குகளை அமைப்பது, உணவுப் பூங்காக்களை அமைப்பது, வேளாண் கட்டமைப்புகளை மேம்படுத்துவது உள்ளிட்டவற்றிலும் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது.

மகாராஷ்டிரத்தில் 2014-ஆம் ஆண்டுக்கு பிறகு வேளாண் பணிகளுக்கு உரியநேரத்தில் நீா் கிடைப்பதற்கும், மக்களுக்குக் குடிநீா் கிடைப்பதற்கு வழிவகை செய்வதற்குமான கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. மாநிலத்தில் நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்ட திட்டங்களை நீா்ப்பாசன திட்டத்தின் கீழ் மத்திய அரசு செயல்படுத்தியது. அதன் காரணமாக சுமாா் 5 லட்சம் சதுர ஹெக்டோ் விவசாய நிலங்கள் பயன்பெற்றன.

முத்ராகடன் திட்டத்தின் வாயிலாக சுய தொழில் தொடங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சுய உதவிக்குழுக்களின் மூலமாக சுமாா் 7 கோடி பெண்களுக்கு ரூ.3 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

கரோனா நோய்த் தொற்று பரவல் இன்னும் கட்டுக்குள் கொண்டுவரப்பட வில்லை. எனவே, கரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்புமருந்து தயாரிக்கப்படும் வரை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடிப்பதில் மக்கள் எந்தவித மெத்தனமும் காட்டக்கூடாது. முக்கியமாக மகாராஷ்டிர மக்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றாா் பிரதமா் மோடி.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...

மஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை

குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ...

கொய்யாவின் மருத்துவ குணம்

கொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ...