மாற்றுத்திறனாளிகளுக்கான வாய்ப்புகளை உறுதிசெய்வோம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது:
மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி ஐ.நா. சபை அண்மையில் ஓர்அறிக்கை வெளியிட்டது. அதில், கரோனாகால கட்டத்தில் மாற்றுத் திறனாளிகளின் நல்வாழ்வை உறுதிசெய்ய வேண்டும். அவர்களுக்கு வளமான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்” என்று அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
ஐ.நா. சபையின் கருத்துருவின் படி மாற்றுத் திறனாளிகளின் வாய்ப்புகளை உறுதிசெய்ய வேண்டும். அவர்களுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். இதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளின் மன உறுதி, வலியை தாங்கும் மனோதிடம் அனைவருக்கும் முன்மாதிரியாக உள்ளது. மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்திவருகிறது. இதன்மூலம் அவர்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும்.
இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.
இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ... |
உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ... |
வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ... |