பாஜக ஆட்சியில் விவசாயிகளுக்கு எந்த அநீதியும் இழைக்கப்படாது.

பாஜக ஆட்சியில் விவசாயிகளுக்கு எந்த அநீதியும் இழைக்கப்  படாது என்று மத்திய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் 20வது நாளாக போராட்டம் நடத்திவருகின்றனர்.

இந்நிலையில், மத்திய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்கரி, டெல்லியில் செய்தியாளர்களுக்கு அளித்தபேட்டி வருமாறு:மகாராஷ்டிராவில் விதர்பா பிராந்தியத்தில் ஏழைவிவசாயிகள் 10 ஆயிரம் பேர் தற்கொலை செய்திருக்கிறார்கள். நான் அந்த பகுதியைச் சேர்ந்தவன். எனக்கு விவசாயிகளின் நிலைமைதெரியும். டெல்லியில் தற்போது போராடும் விவசாயிகளுடன் வர்த்தக அமைச்சர் பியூஸ் கோயலும், வேளாண் அமைச்சர் தோமரும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

விவசாயிகள் எழுப்பும் பிரச்சனைகள் நியாயமானவை. அவைகுறித்து விவாதிக்க வேண்டும். பேச்சுவார்த்தையே இல்லாமல் போனால், அது தவறான தகவல்களைக் கொண்டுபோய் சேர்க்கும். தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். விவசாயிகளின் நலனுக்காகவே வேளாண் சட்டங்களை கொண்டுவந்துள்ளோம். புதிய வேளாண் சட்டங்களை விவசாயிகள் புரிந்துகொள்ள வேண்டும். பாஜக அரசு விவசாயிகளுக்காக அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது. அவர்களின் பரிந்துரைகளை ஏற்க தயாராக உள்ளது . பாஜக ஆட்சியில் விவசாயிகளுக்கு எந்தஅநீதியும் இழைக்கப்படாது. அன்னா ஹசாரே அந்தபோராட்டத்தில் பங்கேற்க மாட்டார் என்றே கருதுகிறேன். இவ்வாறு நிதின்கட்கரி கூறியுள்ளார்..

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை நோய் குணமாக

முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ...

வாசனைத் திரவியங்கள்

பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ...

அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்

இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ...