வேளாண்மை சட்டம் ஏன் வேண்டும்

எல்லோரையும் போல, விவசாயிகளுக்கும் காசு சம்பாதிக்க வேண்டும் என்னும் ஆசை உள்ளது. அந்த ஆசை எனக்கும் இருக்கிறது. ஆசையே துன்பத்துக்கு காரணம் என்று புத்தர்சொன்னது அப்பொழுதுதான் உறைத்தது.

அது 1988 ஆம் வருடம், நிலக்கடலை, பருத்தி என்று வெள்ளாமை செய்து, சுட்ட கையையே சுட்டுக்கொண்ட பிறகு, இந்த முறை கரும்பு விவசாயம் செய்து கொஞ்சம் லாபம் பார்க்கலாம் என்று ஆசை வந்தது.

ஆனால், அதில் உள்ள சிக்கல் என்னவென்றால், கரும்பை, இங்கிருந்து(ஆனைமலை) 65 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அமராவதி சர்க்கரை ஆலைக்குத்தான் கொடுக்க வேண்டும்.

அப்படியே கொடுப்பதென்று முடிவு செய்தாலும், அவர்களுடன் ஒப்பந்தம் போட்டாக வேண்டும். அன்று இருந்த சூழலில் அது “”ஆனைமேல் போறவனிடம் சுண்ணாம்பு கேட்பது”” போன்றது.

கெஞ்சி, கூத்தாடி ஒப்பந்தம் போட்டாலும், cutting order சரியான நேரத்தில் கிடைக்காது, கரும்பு, பூத்து கன்றாவி ஆனபிறகுதான் cutting order கிடைக்கும். அது ” இனி நீ வயசுக்கு வந்தா என்ன? வராட்டி என்ன?” நிலவரம்தான்.

சரி, அப்படியே லேட் ஆகி கரும்பை வெட்டிக்கிட்டு போனாலும், transport க்கு கொஞ்சம் பணம் பிடித்தம் போகும், போனா தொலையுது, கரும்பு பணம் அடுத்த வருடம் மறுதாம்பு கரும்பு வெட்டும்பொழுதாவது கிடைக்குமா என்று பார்த்தால்…..அது உங்க ஜாதகத்தில் சுக்கிரன் எங்கே இருக்கிறாரோ அதுக்குத் தக்கபடி மாறலாம்.

இந்த துன்பமெல்லாம் வேண்டாம் என்று நினைத்தால் சொந்தமாக வெல்லம் காய்ச்சலாம்! ஆனால் அது லாபகரமாக இருக்க குறைந்தது 5 ஏக்கராவது கரும்பு போட வேண்டும். நம்மிடம் இருப்பதோ 1.5 ஏக்கர்.

கரும்பை, மண்டை வெல்லம் காய்ச்சும் வியாபாரிகளுக்கு கொடுக்கலாம், ஆனால் அது “” உலைக்கு பயந்து அடுப்பில் குதிக்கும்”” கதை ஆகிவிடும்.

இப்படி காலம் போய்க்கொண்டிருந்த பொழுது….

அந்தவருடம், ஆனைமலை பகுதிக்கு கரும்பு கொள்முதல் செய்ய கேரளமாநில மேனம்பாறை கூட்டுறவு சர்க்கரை ஆலை வந்தது.

அவர்களுக்கு, கேரளத்தில் இருந்து அரவைக்கு கரும்பு கிடைப்பதில் பற்றாக்குறை நிலவியதால் இங்கு வந்து கொள்முதல் செய்யவேண்டிய தேவை ஏற்பட்டது.

அதன் காரணமாக சரியான பருவத்தில் cutting order கொடுப்பதாகவும், உடனடி பண பட்டுவாடா செய்வதாகவும் உறுதி கொடுத்தனர்.

அதுமட்டுமல்ல, அந்த ஆலை நமக்கு அருகில் 30 கிலோமீட்டர் தூரத்தில் இருந்ததால் நமக்கு போக்குவரத்து செலவு இல்லை.

ஆகவே இந்த வாய்ப்பு, என்னைப் பொறுத்த அளவில், “” காஞ்ச மாட்டுக்கு, கம்பங்காடு கிடைச்சமாதிரி”” இருந்தது.

எனவே, உற்சாகமாக, நல்ல செலவு செய்து 1.5 ஏக்கர் கரும்பு நட்டு, அருமையாக விளைவித்து, cutting order க்காக ஆசை ஆசையாய் காத்திருந்த பொழுது…..

1989 ஆம் வருடம் திமுக ஆட்சிக்கு வந்தது. வந்ததும், தமிழக கரும்பு கேரளா செல்லக்கூடாது என்று உத்தரவு போட்டார்கள். கேரள கரும்பாலை, ஆனைமலையில் இருந்த தனது அலுவலகத்தை இழுத்து மூடிவிட்டு போய்விட்டது. இதனால் விவசாயிகள் கரும்பை அமராவதி ஆலைக்கு கொடுக்கும் துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டனர். கரும்பாலை நிர்வாகமோ
” நல்ல நாளிலேயே தில்லை நாயகம்'” இப்பொழுது சொல்லவா வேண்டும்.

கரும்போ நன்றாக முதிர்ந்து விட்டது. நரிகளும், முள்ளம் பன்றிகளும் கரும்பை ருசிக்கத் தொடங்கி விட்டன.

விட்டால் முதலுக்கே மோசம் வந்துவிடும்….

எனக்கோ, வெறுத்தே போய்விட்டது.

அந்த வெறுப்பில் முன்னமே சொன்னது போல், அமராவதி கரும்பாலை என்னும் கொதிக்கும் உலையிலிருந்து, மண்டைவெல்லாம் காய்ச்சும் வியாபாரி என்னும் அடுப்பில் தெரிந்தே குதித்தேன்.

சுமார் 40 டன் விளைச்சல் கிடைத்தது. ஈரோடு பக்கம் அரச்சலூரை சேர்ந்த வியாபாரிக்கு விற்றேன். பாதி பணம் தந்துவிட்டு கரும்பை வெட்டிச்சென்ற வியாபாரி மீதி பணத்திற்கு ஜவ்விழு இழுத்தார்.

ஆனைமலைக்கும், அரச்சலூருக்கும் பஸ் ஏறி இறங்கி ஒரு வழி ஆகிவிட்டேன்.

இறுதியாக, பணம் வாங்காமல் ஊர் திரும்ப மாட்டேன் என்று சூளுரைத்துவிட்டுக் கிளம்பி, அரச்சலூரில் இறங்கி, மண்டைவெல்ல ஆலைக்குப் போனால்……ஆலையையும் காணோம், கரும்பு வாங்கிய ஆளையும் காணோம்.

தூக்கம் கெட்டு, தண்ணீர் பாய்த்து, முதுகும் கையும் வலிக்க உரம் சுமந்து, கரும்பு காட்டுக்குள் நரி விரட்டி, பாம்புகளுக்கும், முள்ளம்பன்றிகளுக்கும் தப்பிப் பிழைத்து , கரும்பு சோகையில் கிழி பட்டு….பட்ட பாடு… கண்முன்னே காணாமல் போய் விட்டது.

இப்பொழுது சொல்லுங்கள்…

விவசாயி, தான் விளைவித்த விளைச்சலை, நாட்டில் எங்குவேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும் விற்க வகை செய்யும் மோதியின் சட்டம் தவறா?

அன்று இந்த சட்டம் இருந்திருந்தால் நாங்கள் கேரள ஆலைக்குக் கரும்பை விற்றுப் பிழைத்திருப்போம்…..

விவசாயியிடம் கொள்முதல் செய்பவர் பணத்தை விரைவாகக் கொடுக்க வலியுறுத்தும் மோதியின் சட்டம் தவறா?

அன்று இந்த சட்டம் இருந்திருந்தால் நாங்கள் வியாபாரியிடமிருந்து பணத்தைப் பெற்றுப் பிழைத்திருப்போம்…..

இந்தச் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் யாராவது போராடுவார்களா?

அப்படி யாரேனும் போராட போனால்……..அவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது…..

“” போங்க! போய்….புள்ள….குட்டிகளையாவது…..நல்லா படிக்க வைங்க! அவர்களாவது வேறு நல்ல வேலை பார்த்து நன்றாக இருக்கட்டும்…..””

படித்ததில் பிடித்தது..

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்

தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ...

ஆடாதொடையின் மருத்துவ குணம்

ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ...

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க

வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ...