யோகாசனத்தை விளையாட்டுபோட்டியாக அரசு முறையாக அங்கீகரித்தது இருப்பதாக மத்திய ஆயுஷ் அமைச்சகம் மற்றும் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளன.
ஆயுஷ் இணைஅமைச்சர் (தனிப்பொறுப்பு) ஸ்ரீபத் நாயக் மற்றும் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ ஆகியோர் புது தில்லியில் இன்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்புஒன்றில் இந்த அறிவிப்பை வெளியிட்டனர்.
நிருபர்களிடம் பேசிய நாயக், யோகாசனத்தை விளையாட்டு போட்டியாக அரசு அங்கீகரித்து இருப்பதன்மூலம் அது இன்னும் மேம்பட்டு அதன் போட்டித் தன்மையை அதிகரித்து, உலகம்முழுக்க சென்றடையும் என்று கூறினார்.
கேலோ இந்தியா, தேசிய மற்றும் பல்கலைக்கழக விளையாட்டு போட்டிகளில் ஒன்றாக யோகாசனமும் அறிமுகப் படுத்தப்படும் என்று ரிஜிஜூ கூறினார்.
நமது பாரம்பரியத்தில் பலநூற்றாண்டுகளாக யோகாசன போட்டிகள் நடந்து வந்திருப்பதாக திரு ஸ்ரீபத் நாயக் கூறினார். யோகாசனத்தை விளையாட்டு போட்டியாக அங்கீகரிக்க விரிவான ஆலோசனைகளுக்கு பிறகு அரசு முடிவெடுத்துள்ளதாக அமைச்சர் கூறினார்.
தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ... |
கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ... |
முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ... |