உள்ளூர் மக்களின் கடமையுணர்வு ஆயுதப் படைகளின் வீரம் ஆகியவற்றால் நாட்டில் நக்சல் தீவிரவாதம் குறைந்துள்ளது. ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே தற்போது நக்சல்பாதிப்பு உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
டெல்லி கரியப்பா மைதானத்தில் தேசிய மாணவர் படையின் (என்சிசி)அணிவகுப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்று பேசியதாவது:
கடந்த ஆண்டு, வெள்ளம் அல்லது வேறு எந்தப்பேரிடராக இருந்தாலும் நாட்டு மக்களுக்கு என்சிசி மாணவர்கள் உதவினர். கரோனா பாதிப்பு காலத்தில் நாடுமுழுவதிலும் லட்சக்கணக்கான என்சிசி மாணவர்கள் அரசு நிர்வாகத்துடனும் சமூகத்துடனும் இணைந்து பணியாற்றினர். இதுமிகவும் பாராட்டத்தக்கது. என்சிசி.யின் பங்கு மேலும் விரிவடைவதைக்காண அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. எல்லை மற்றும் கடலோரப் பகுதியில் பாதுகாப்பு வலையமைப்பை வலுப்படுத்துவதில் என்சிசியின் பங்களிப்பு உயர்த்தப்பட்டுவருகிறது.
உள்ளூர் மக்களின் கடமையுணர்வு ஆயுதப் படைகளின் வீரம் ஆகியவற்றால் நாட்டில் நக்சல் தீவிரவாதம் குறைந்துள்ளது. ஒருசில மாவட்டங்களில் மட்டுமே தற்போது நக்சல் பாதிப்பு உள்ளது.
கடலோர மற்றும் எல்லைப் பகுதியில் உள்ள சுமார் 175 மாவட்டங்களில் என்சிசி.க்கு புதியபொறுப்புகள் வழங்கப்படும் என கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதற்காக சுமார் 1 லட்சம் என்சிசி மாணவர்களுக்கு ராணுவம், கடற்படை மற்றும் விமானப் படையால் பயிற்சிஅளிக்கப்பட்டு வருகிறது. பயிற்சி பெறுபவர்களில் மூன்றில் ஒருபகுதியினர் பெண்கள் ஆவர். இவர்கள் கடலோர மற்றும் எல்லைப் பகுதிகளில் பணியாற்றுவார்கள்.
ராணுவ சாதனங்களுக்கு ஒருசந்தையாக இல்லாமல், அதை பெரியளவில் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா அறியப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை.வைரஸாக இருந்தாலும் அல்லது எல்லையில் சவால்களாக இருந்தாலும் அதை கையாளுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கும் திறனை இந்தியா கடந்த ஆண்டு வெளிப்படுத்தியது. இவ்வாறு பிரதமர் நரேந்திரமோடி பேசினார்.
ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ... |
இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ... |
நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ... |