கையெழுத்தானது ‘அதிமுக-பாஜக’ தொகுதிப் பங்கீடு!

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் மார்ச் 12- ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், தங்களது கூட்டணி கட்சிகளுக்கான சட்டமன்ற தொகுதிகளை இறுதிசெய்யும் பணிகளில் தீவிரமாக களமிறங்கியுள்ளது அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. ஆகிய பிரதான கட்சிகள்.

அந்தவகையில், பா.ம.க.வுக்கு 23 சட்டமன்ற தொகுதிகளை ஒதுக்கிய அதிமுக. தலைமை, பா.ஜ.க., தே.மு.தி.க., த.மா.கா. உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து நடத்திவந்தது. இந்தநிலையில், அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் உள்ள பாஜக.வுக்கு 20 சட்டமன்றத்தொகுதிகளை அ.தி.மு.க. தலைமை ஒதுக்கியுள்ளது. மேலும், இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியும் பா.ஜ.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, அ.தி.மு.க.- பா.ஜ.க. இடையே தொகுதிபங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில், அதிமுக சார்பில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க. சார்பில் கட்சியின் தேசியப் பொதுச்செயலாளர் சி.டி.ரவி, பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் எல்.முருகன் ஆகியோர் கையெழுத்திட்டனர். தேர்தல் உடன்பாடு தொடர்பாக அ.தி.மு.க., பா.ஜ.க. சார்பில் கூட்டாக அறிவிப்பு வெளியிட பட்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

மருத்துவ செய்திகள்

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம்

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ...

கோரைக் கிழங்கு மருத்துவக் குணம்

உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ...

பெரும்பாடு குணமாக

நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ...