மேற்குவங்க சட்டசபை தேர்தலில் பாஜ., 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேற்குவங்கத்தில் உள்ள 294 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் வருகிற 27ம் தேதி முதல் 8 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் மம்தாபானர்ஜி தலைமையிலான ஆளும் திரிணமுல் காங்கிரஸ், பா.ஜ., இடையே கடும்போட்டி நிலவுகிறது. அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல்பணிகளில் ஈடுபட்டுள்ளன. இதனால் அரசியல்களம் சூடுபிடித்துள்ளது. பா.ஜ., சார்பில் காரக்பூரில் நடைபெற்ற பேரணியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார்.
சுமார் ஒருகிலோ மீட்டர் தூரம்வரை நடைபெற்ற இந்த பேரணியில் ஆயிரக்கணக்கான பா.ஜ., தொண்டர்கள் கலந்துகொண்டனர். இந்த பேரணியின் போது அமித்ஷா பேசுகையில், ‛மேற்குவங்க மக்கள் ஒரு மாற்றத்தை விரும்புகிறார்கள். சட்டசபை தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெற்று, பிரதமர் மோடியின் தலைமையில் செயல்படும் பா.ஜ., அரசு மேற்குவங்கத்தில் அமையும்,’ என்றார்.
உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ... |
காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது. |
ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ... |