மேற்கு வங்கம்த்தில் பாஜக 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெற்று, ஆட்சியைப் பிடிக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக சட்டப்பேரவைதேர்தல் நடைபெறுகிறது. இதில் முதல் 3 மூன்று கட்டங்களுக்கான வாக்குப் பதிவு நிறைவடைந்த நிலையில், மீதமுள்ள 5 கட்டங்களுக்கான பிரசாரத்தில் அரசியல்கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், இன்று மேற்குவங்கம் சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தோம்ஜூர் பகுதியில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் பேச்சும், செயலும் அவரது பதட்டத்தை வெளிக் காட்டுகிறது என விமர்சித்துபேசினார். சிங்கூர், தோம்ஜூர், ஹவுராமத்தியா மற்றும் பெஹலா பூர்பா ஆகிய பகுதிகளில், பாஜக நடத்திய பிரமாண்ட பேரணிகளில் அமித் ஷா கலந்து கொண்டார். அவருக்கு பாஜகவினர் வரவேற்பு வழங்கினர்.
டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ... |
அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல் நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ... |