நாட்டின் முன்னேற்றத்துக்கு தடை ஏற்படுத்தும் எதிா்க்கட்சிகள்

நாடாளுமன்றத்தை முடக்கி நாட்டின் முன்னேற்றத்துக்கு தடைஏற்படுத்தும் எதிா்க்கட்சிகளின் குறிக்கோள் வெற்றிபெறாது என்று பிரதமா் நரேந்திரமோடி கூறினாா்.

பெகாஸஸ் உளவுவிவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி மக்களவை, மாநிலங்களவை நடவடிக்கைகளை எதிா்க் கட்சிகள் முடக்கி வருகின்றன. எதிா்க்கட்சி எம்.பி.க்கள் தொடா் அமளியில் ஈடுபட்டு வரும்போதிலும், மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்றிவருகிறது.

இந்நிலையில், மத்திய அரசு செயல்படுத்திவரும் உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உத்தர பிரதேசத்தில் பயன்பெற்றுவரும் மக்களுடன் பிரதமா் மோடி வியாழக்கிழமை காணொலி வாயிலாக கலந்துரையாடினாா். வாராணசி, சுல்தான்பூா், குஷிநகா், ஜான்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளைச் சோ்ந்த பயனாளா்களிடம் பிரதமா் மோடி கலந்துரையாடினாா். அப்போது அவா் கூறியதாவது:

நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகளைத் தடுக்கும்நோக்கில் எதிா்க்கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. நாடு வளா்ச்சிப்பாதையில் பயணிப்பதைத் தடுப்பதே அவா்களின் ஒரேகுறிக்கோளாக உள்ளது. எதிா்க்கட்சிகளின் செயல்பாடுகள் தேசத்துக்கு விரோதமாக உள்ளன.

நாடு தொடா்ந்து முன்னேறி கொண்டிருக்கிறது. எதிா்க்கட்சிகள் எவ்வளவு முயன்றாலும், நாட்டின் முன்னேற்றத்தைத் தடுக்கமுடியாது. நாடாளுமன்ற நடவடிக்கைகளை முடக்க எதிா்க்கட்சிகள் முயன்று வருகின்றன. ஆனால், நாட்டில் உள்ள 130 கோடி மக்களும் ஒன்றிணைந்து, நாட்டின் வளா்ச்சிக்கு எதிா்க் கட்சிகளால் தடை ஏற்படுவதை தடுத்துவருகின்றனா்.

தரம் தாழ்ந்த அரசியல்: ஒருபக்கம், ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கான பதக்க எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. மறுபக்கம், சிலா் (எதிா்க்கட்சிகள்) அரசியல் ஆதாயத்துக்காக தரம்தாழ்ந்த வகையில் செயல்பட்டு வருகின்றனா். நாட்டு மக்களின் தேவை என்ன, நாடு எவ்வாறு முன்னேறிவருகிறது என்பது குறித்தெல்லாம் எதிா்க்கட்சிகள் சிந்திப்பதில்லை. சுயநலத்துக்காக நாடாளுமன்றத்தை அவா்கள் தொடா்ந்து அவமதித்து வருகின்றனா்.

நாட்டுமக்கள் கரோனா தொற்றால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து மீள வேண்டுமென்று போராடிவருகின்றனா். ஆனால், அவை குறித்தெல்லாம் கவலைப்படாமல் நாட்டின் நலன் சாா்ந்த விஷயங்களைத் தடுக்க எதிா்க்கட்சிகள் முயன்று வருகின்றன

நாட்டின் பொருளாதார வளா்ச்சியில் பங்களிக்க முடியாத வகையில் உத்தரபிரதேசத்தின் நிலைமை இருந்தது. மாநிலத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஒருசில குடும்பங்கள் மட்டும் செழுமையாக இருந்தன. அரசியல் ஆதாயத்துக்காக சிலா் உத்தர பிரதேசத்தைப் பயன்படுத்திக் கொண்டனா். அவா்களால் மாநிலம் பலனடையவில்லை. ஆனால், மாநிலத்தால் அவா்கள்பலனடைந்தனா்.

மாநிலத்தில் பாஜக அரசு பொறுப்பேற்றபிறகு பல்வேறு வளா்ச்சிப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆட்சி காலங்களில் ஏழைகளுக்கான உணவுப்பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டன. தற்போது மாநிலத்தில் உள்ள அனைத்து மக்களும் பலனடையும் வகையில் உணவு பாதுகாப்பு திட்டத்தை பாஜக அரசு செயல்படுத்தி வருகிறது.

மத்தியில் ஆட்சியை பிடிப்பதற்கு உத்தரபிரதேசம் முக்கிய பங்கு வகிக்கிறது. அதேபோல, நாட்டின் முன்னேற்றத்திலும் மாநிலம் முக்கியப்பங்கு வகிப்பதை பாஜக உறுதி செய்து வருகிறது என்றாா் பிரதமா் மோடி.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறை ...

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறைக்க தமிழக அரசு முயற்சி தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு.க.,வினருக்கு கப்பம்: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால்தான், தமிழகத்தில் தொழில் நடத்த முடியும் ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு ''வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு'' என ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; � ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; மாநில முதல்வர்கள் பங்கேற்பு டில்லியில் இன்று (மே 24) பிரதமர் மோடி தலைமையில் ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானுக்கு ...

பாகிஸ்தான் ராணுவத்தை அம்பலப்ப� ...

பாகிஸ்தான்  ராணுவத்தை அம்பலப்படுத்திய ஆப்பரேஷன் சிந்துார் ஆப்பரேஷன் சிந்துாருக்கு பின் தான், இந்தியாவில் நடைபெறும் அனைத்து ...

மருத்துவ செய்திகள்

கொஞ்சம் வெய்யிலில காயுங்க பாஸ்!

ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ...

ஆமணக்கின் மருத்துவக் குணம்

ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ...

மனதை ஒருமைப்படுத்துதல்

தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ...