குஜராத் ஆஷாபுரா தேவி

குஜராத்தில் உள்ள ஜாம் நகர் என்ற ஊரின் அருகில் உள்ளது ஒரு அம்மன் ஆலயம் அந்த அன்னையின் பெயர் ஆஷாபுரா தேவி என்பது.ஆஷா என்றால் விருப்பம் . விருப்பங்களை நிறைவேற்றுபவள் என்பதினால் அந்தப் பெயர் அவளுக்கு ஏற்பட்டது.

குஜராத்தில் கட்ச் மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் சுமார் 58 அடி நீளமும், 32 அகலமும், 52 அடி உயரமும் உள்ள இந்த ஆலயத்தைப் பற்றி பல

கிராமியக் கதைகள் நிலவுகின்றன. ஆலயத்தில் 400 கிலோவுக்கும் அதிகமான எடை கொண்டபெரிய வெண்கல மணி உள்ளது. அந்த ஆலயம் எழுந்த வரலாற்றைப் பற்றி கூறப்படும் புராணக் கதை கீழே உள்ளது.

ஆஷாபுரா தேவியின் கதை

பதினான்காம் நூற்றாண்டில் குஜராத் பகுதியில் இந்த ஆலயம் உள்ள அன்றைய இடமான கும்லி என்ற பெயரைக் கொண்ட ஊரை கட்ச்மானிலத்தைச் சேர்ந்த ராவ் என்ற பரம்பரையினர் ஆண்டு வந்தனர். அந்த இடத்தைக் கைப்பற்ற ஜாம் உண்ட்ஜி என்ற ஒரு மன்னன் பலமுறை முயற்சி செய்தான் . சிந்துப் பிரதேசத்தில் இருந்து வந்த அந்த மன்னனின் பெயரை குலாம் ஷா என்றும் கூறுகின்றனா .

ஆனால் அவனால் அந்த இடத்தைக் கைப்பற்ற முடியவில்லை. ஒரு முறை அவனுடைய படை அந்த நகருக்குள் நுழைந்து சண்டையிடத் துவங்கியதும் சேனையின் பலருக்கும் கண் பார்வை மறைந்து போய் விட்டது. அதனால் பயந்துப் போய்

தப்பித்தோம் பிழைத்தோம் எனத் திரும்பி ஓடிவிட்டனராம் . ஆனால் சில காலம் பொறுத்து திரும்பவும் அவனுடைய மகனான பாமனயாஜி என்பவன் பெரும் படையுடன் அங்கு வந்தான். அந்த பெரிய படையைக் கண்ட உள்ளுர் மன்னன் பயந்து கொண்டு நகரை விட்டு ஓடிவிட்டான் . அதனால் பாமனயாஜி அந்த நகரை எளிதாக கைப்பற்றினான் .

ஓரு நாள் அவனுடைய கனவில் அதுவரை அவன் பார்த்திராத ஒரு தேவி தோன்றி 'உன் தந்தை இந்த இடத்தைக் கைப்பற்ற முயன்று தோல்வி அடைந்தார் . அவருடைய ஆசை நிறைவேற்றப்பட வேண்டும் என்று எண்ணிய நீ என்னை வேண்டிக் கொண்டு மீண்டும் படை எடுத்து வந்தாய். இந்த இடத்தைக் கைப்பற்றினாய் . உன் ஆசையை நானும் நிறைவேற்றி விட்டேன் . ஆகவே உன் ஆசையை நிறைவேற்றிய எனக்கு இந்த இடத்தில் ஒரு ஆலயம் அமைத்து நீ வழிபட வேண்டும் ' என்று கூறி விட்டு மறைந்தது. அதை முழு மனதுடன் ஏற்றுக் கொண்டவன் அந்த தேவிக்கு அவள் இட்ட கட்டளைப்படி கும்லி என்ற அந்த ஊரில் விருப்பத்தை நிறைவேற்றியவள் என்ற பெயரை சூட்டும் விதமாக ஆஷாபுர தேவி என அந்த தேவிக்கு பெயரிட்டு ஆலயம் ஒன்றை அமைத்தான்.

அந்த ஆலயம் பற்றி கூறப்படும் இன்னொரு கிராமியக் கதை இது. சுமார் இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாக கூறப்படும் வாய் மொழிக்கதை. இராஜஸ்தான் மானிலத்தை சேர்ந்த ஒரு மார்வாடி வியாபாரி அந்த இடத்திற்கு வியாபார விஷயமாக வந்திருந்தார் . அவர் தேவி பக்தர். மிகவும் சிரத்தையாக நவராத்திரி காலத்தில் விரதம் அனுஷ்டித்து பிரார்தனைகள் செய்து வந்தவர் .

அவருக்கு வாழ்வில் இருந்த பெரிய குறை எந்த ஒரு வாரிசும் தனக்கு இல்லையே என்பதுதான் ; . அதனால் தான் தனக்கு ஒரு வாரிசு வேண்டும் என பல்வேறு இடங்களுக்கும் சென்று ஆலய தரிசனமும் பிரார்தனைகளும் செய்து வந்தவர் ஒரு முறை ஆஷாபுரா தேவி ஆலயம் உள்ள இடத்திற்கு வியாபார நிமித்தம் வந்திருந்தார்.

தன் வேலைகளை முடித்தப் பின் அசதியால் மரத்தடி ஒன்றின் கீழ் அங்கு உறங்கிக் கொண்டு இருந்தவா ; கனவில் ஒரு தேவி தோன்றி, தான் அந்த இடத்தில் எவா கண்களிலும் படாமல் வசிப்பதாகவும் , தனக்கு அந்த இடத்தில் ஒரு ஆலயம் கட்டினால் அவருக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும் என்றும் , தான் அந்த இடத்தில் வசிப்பவள் என்பதற்கு அடையாளமாக அவர் கண் விழித்தவுடன் அவருக்கு ஒரு மேலாடையும், தேங்காயும் கண்களில் படும் என்றும் , ஆலயம் அமைத்தப் பின் ஆறு மாதம் எந்த காரணம் கொண்டும் அந்த ஆலயத்தின் கதவுகளைத் திறக்கக் கூடாது என்றும் கூறி விட்டு மறைந்து விட்டாள் .

அசதியால் உறங்கியவர் கண் விழித்தார். என்ன ஆச்சரியம் முழித்தெழுந்த அவர் கண் முன் ஒரு தேங்காயும், மேலாடையும் தெரிந்தன. கனவில் வந்தது உண்மையாக இருக்கலாம் என நம்பியவர் நமக்கோ நிறைய பொருளும், வசதியும் உள்ளது, ஆகவே ஆலயம் அமைப்பதில் என்ன சிரமம் , அதன் மூலம் தனக்கு வாரிசு வந்தால் நன்மைதானே என எண்ணியவராய் அங்கு ஒரு ஆலயத்தை அமைத்தார் .

ஆலயம் கட்டி முடித்ததும் கனவில் கிடைத்த ஆணையின்படி அந்த ஆலயத்துக் கதவுகளைத் பல மாதங்கள் அவர் திறக்கவே இல்லை. ஆனால் தினமும் இரவில் அந்த ஆலயத்தில் உள்ளே இருந்து சலங்கை ஒலி கேட்டவண்ணம் இருக்க, ஒரு நாள் உள்ளே என்னதான் நடக்கின்றது எனப் பார்ப்போமே என்ற ஆவலில் கதவைத் திறந்துப் பார்க்க அங்கு கனவில் தோன்றிய அதே தேவி நடனம் ஆடிக் கொண்டு இருந்ததைக் கண்டு வியந்தார் .

ஆனால் அதே நேரம் அவள் எந்த நிலையில் நடனம் ஆடிக் கொண்டு இருந்தாளோ அதே நிலையில் சிலையாகி நின்றுவிட்டாள். அதுவே இன்று அந்த தேவி உள்ள ரூபம் ஆகுமாம் ; .

ஆஷாபுரா தேவி ஆலயச் சிறப்பு

ஒரு மலைப்பாங்கான இடத்தில் அமைந்து இருக்கும் அந்த ஆலயம் பெரிய அளவில் மக்களைக் கவர்ந்து உள்ளது. இந்த புராணக் கதைக்கான ஆதாரங்கள் எங்கும் கிடைக்கவில்லை என்றாலும் செய்திகள் அனைத்தும் பரம்பரைப் பரம்பரையாக சொல்லப்பட்டு வரும் கர்ண பரம்பரைக் கதைகளை போன்றதே. ஆனால் அதையும் மீறி இருக்கும் ஒரு உண்மை என்ன எனில் அந்த தேவியின் சிலை ஒன்பதாம் நூற்றாண்டுக்கு முற்பட்டது என ஆராய்ச்சி வல்லுனர்கள் கண்டறிந்துள்ளனர் என்பதே.

ஆகவே அனைவர் கூறும் கதையின்படி அந்த ஆலயம் 1500 ஆண்டுகளுக்கு முட்பட்டதாகவே இருக்க வேண்டும் . ஒரு பெறும் பாறையில் காணப்படும் அந்த தேவியின் சிலையை எடுத்தே ஆலயத்தை அமைத்திருக்க வேண்டும் என்றும் நம்பப்படுகின்றது. ஒரு முறை பதினேழாம் நூற்றாண்டில் குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் ஆலயம் அழிந்து விட்டதாகவும் மீண்டும் அதை சில நாட்களிலேயே கட்டி முடித்து விட்டனர் எனவும் கூறப்படுகின்றது.

நவராத்திரி காலங்களில் ஆலயத்தில் மக்கள் வெள்ளம் தாங்க முடியாமல் உள்ளது. நவராத்திரியில் பல்வேறு இடங்களில் இருந்தும் வரும் மக்கள் காலணியும் இன்றி கால் நடையாகவே வந்து வணங்குவதை வழக்கமாகக் கொண்டு உள்ளனர். வட மானிலங்களில் தேவி ஆலயங்கள் உள்ள இடங்கள் அனைத்திலுமே நவராத்திரியில் நடைப் பயணமாக வந்து பிராததிப்பதை ஒரு சடங்காகவே வைத்துக் கொண்டு உள்ளனர். அதிலும் குஜராத்தில் பெண்களிடையே அந்த பழக்கம் இன்னும் அதிகமாகவே உள்ளது.

நன்றி சாந்திப்பிரியா 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

முடி கருமையாக

நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ...

இந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ...

அகத்திப் பூவின் மருத்துவக் குணம்

அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது.