ராணுவத்தின் இரண்டு பிரிவுகள் டில்லியை நோக்கி முன்னேறிவந்ததா

அரசுக்கு தெரியாமல் ராணுவத்தின் இரண்டு பிரிவுகள் டில்லியை நோக்கி முன்னேறிவந்தன என இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருக்கிறது .

இதுகுறித்து அந்த பத்திரிகை தெரிவிப்பதாவது : ஹரியானாவின் ஹிசார் பகுதியிலிருந்த mechanised infantry படையும், ஆக்ராவில் இருந்து Para Brigade படையும் தில்லிக்கு அருகே கொண்டுவரப்பட்டன.

இந்தபடைகளை தில்லிக்கு கொண்டுவருவது குறித்து மத்திய அரசிடமோ, பாதுகாப்பு அமைச்சகதிடமோ ராணுவம் எதுவும் தெரிவிக்கவில்லை. இந்த தகவல்களை மத்திய உளவு பிரிவான ஐபி தான் மத்திய அரசின் பார்வைக்கு கொண்டுசென்றுள்ளது

பிரதமருக்கும், பாதுகாப்பு அமைச்சர் ஆண்டனிக்கும் இந்த தகவல்_தெரிவிக்கப்பட உடனடியாக டில்லிக்கு வரும் வாகனங்களை தாமதமாக்கும் வேலையில் மத்திய அரசு இறங்கியது.தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக ஒருதகவலை பரப்பிவிட்டு, நெடுஞ்சாலைகளின் மூலம் தில்லிக்கு வரும் அனைத்து வாகனங்களையும் சோதனையிடுமாறு தில்லி போலீசுக்கு உத்தரவிடப்பட்டது.

இதைதொடர்ந்து தில்லி போலீசார் பாதுகாப்பு சோதனையில் இறங்கி வாகனங்களை சோதனியிட ஆரம்பிக்கவே, டில்லிக்கு வரும் அனைத்து முக்கிய சாலைகளும் போக்குவரத்தால் ஸ்தம்ம்பித்தது .

இதன்மூலம் ராணுவ வாகன அணிவகுப்பு தாமதமானது. அதே நேரத்தில் ராணுவ செயல்பாடுகளுக்கான டைரக்டர் அலுவலகத்திடம் இந்தபடைகள் தில்லி நோக்கி வருவது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

அப்போது, பாராசூட் படை தில்லிக்கு வருவது தெரியும். இது வழக்கமான பயிற்சிதான் என தெரிவித்துள்ளார் .அதேநேரத்தில் கவச வாகன படை ஏன் வந்தது என்பது தொடர்பாக அவரிடம் விளக்கம்கேட்கப்பட, அவர் ராணுவ தளபதியுடன் ஆலோசனை மேற்கொண்டுவிட்டு தந்த பதிலில், பனி நிறைந்த நாட்களில் படைகளைவேகமாக இடம் நகர்த்துவதற்க்கான பயிற்சிக்காகவே அவை தில்லிக்கு கொண்டுவரப்பட்டன என பதில் தந்துள்ளார்.

இதையடுத்து இரு படை பிரிவுகளையும் உடனடியாக அவை_கிளம்பிய இடத்துக்கே திரும்பிச்செல்ல பாதுகாப்பு துறை செயலாளர் உத்தரவிட, தில்லியை நெருங்கிகொண்டிருந்த படைகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டு, திருப்பி அனுப்பபட்டன என்.இந்தியன் எக்ஸ்பிரஸில் வெளியான செய்தி தெரிவிக்கிறது,

இந்திய இராணுவம் மிகவும் கட்டுக்கொப்பனது போர் மற்றும் நெருக்கடி காலங்களில் கூட அது எல்லை மீறியதில்லை அதே நேரத்தி நமது ஆட்சியாளர்களும் தங்கள் அரசியலை அவர்களிடம் காட்டக்கூடாது ,

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தல ...

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் ; கவர்னர் ரவி வேதனை 'சமூக நீதி பேசும் தமிழகத்தில் தினமும் தலித்துகளுக்கு எதிரான ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ; பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பா.ஜ., புறக்கணித்தது தொடர்பான ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுக ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுகள் அறிவிப்பு சமூக சேவைக்காக சென்னையை சேர்ந்த ராமலிங்கம், கோவையை சேர்ந்த ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள் மனசாட்சி படி பங்கேற்பார்கள் – அண்ணாமலை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞ ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞர்களின் பங்களிப்பு தேவை – பிரதமர் மோடி ''நம் இளம் தலைமுறையினரிடம் உள்ள திறன்களால், 2047ல் நாம் ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதம ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று திறக்கிறார் ஜம்மு - காஷ்மீரில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பிரமாண்ட 'இசட்' ...

மருத்துவ செய்திகள்

புளியின் மருத்துவக் குணம்

இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ...

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...

ஆவாரையின் மருத்துவ குணங்கள்

ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ...