கோத்ரா சம்பவத்துக்கு பிறகு நடந்த வகுப்பு கலவரங்களை குஜராத் முதல்வர் நரேந்திரமோடி தூண்டி விட்டார் என்பதற்கோ,அவர் அந்த கலவரத்துக்கு உடந்தையாக இருந்தார் என்பதற்கோ வலுவான போதிய ஆதாரம் இல்லை என ஆர்.கே. ராகவன் தலைமையில் உச்சநீதிமன்றம் நியமித்த எஸ்.ஐ.டி.(சிறப்பு புலனாய்வு குழு) அறிக்கை தந்துக்கது .
2002 பிப்ரவரி 27-ம் தேதி குஜராத்தில் வகுப்பு கலவரம் ஏற்பட்டது. அப்போது ஆமதாபாத் நகரில் இருக்கும் “குல்பர்க் சொசைட்டி’ என்ற அடுக்குமாடி குடியிருப்பு நோக்கி வன்முறைகும்பல் வந்ததாகவும் ஈஷான் ஜாஃப்ரி என்ற காங்கிரஸ் தலைவர் அந்த கும்பலைநோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும் அதைதொடர்ந்து அந்தகும்பல் அந்த கட்டடத்துக்குள் நுழைந்து வன் செயல்களில் ஈடுபட்டதாகவும் படுகொலைகள் நடந்ததாகவும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
கலவரங்கள் நடைபெற்றபோது ஒரு தொலைக்காட்சிக்கும் செய்தித்தாளுக்கும் முதல்வர் நரேந்திரமோடி தந்த பேட்டியால் தான் வன் செயல்கள் அதிகரித்ததாகவும் உயிரிழப்பை தடுக்க முடியாதபடிக்கு காவல்துறையை முதல்வர் மோடி தடுத்ததாகவும் ஈஷான் ஜாஃப்ரியின் மனைவி ஜகியா குற்றம் சுமத்தி வருகிறார்.
ஆனால் கலவரம் நடந்த போது செய்தி பத்திரிகை எதற்கும் தான் பேட்டி தரவில்லை என நரேந்திரமோடி விசாரணை குழுவிடம் வாக்கு மூலம் தரும் போது திட்ட வட்டமாக மறுத்துவிட்டார். “”தங்களுடைய அடுக்குமாடி குடியிருப்பு நோக்கி வந்த கும்பலை பார்த்து ஈஷான்ஜாஃப்ரி துப்பாக்கியால் சுட்டார்; இதனால் அவர்கள் அஞ்சி_கலைந்து ஓடாமல், மேலும் ஆவேச முற்று அந்த குடியிருப்பில் புகுந்து வன் முறையில் ஈடுபட்டுள்ளனர்.
ஈஷானின் செயலை “வினை’ என கொண்டால் கும்பலின்செயலை “எதிர்வினை’ என்றே கொள்ளவேண்டும்; குஜராத்தில் இப்போது வினையும் எதிர் வினையும் தொடர்கின்றன; நாங்கள் விரும்புவ தெல்லாம் “வினையும் கூடாது, எதிர் வினையும் கூடாது’ என்பதே. எல்லோரும் அமைதிகாக்க வேண்டும், இப்போதையதேவை அது தான்” என்று தான் அந்த பேட்டியில் கூறினேன் என மோடி வாக்கு மூலத்தில் தெரிவித்திருக்கிறார் .
“”2002 மார்ச் 1-ம் தேதி ஜீ டி.வி.க்கு தந்த பேட்டியில் அனைவரும் அமைதி காக்கவேண்டும் என்று தான் வேண்டுகோள் விடுத்தேன்” என்றும் மோடி வாக்கு மூலம் தந்திருக்கிறார் என் சிறப்பு புலனாய்வு குழு குறிப்பிட்டுள்ளது.
உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ... |
இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ... |
Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.