ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் பிரணாப் முகர்ஜி, ஆதாயம்தரும் பதவியான, இந்திய புள்ளியல் நிறுவன தலைவர் பதவியிலிருந்து ராஜினாமாசெய்து அளிக்கப்பட்ட கடிதம்போலி என குற்றச்சாட்டுள்ளது.
அந்தகடிதத்தில் இருக்கும் பிரணாப்பின் கையெழுத்து சர்ச்சையை உருவாக்கியுள்ளது . இந்நிலையில், பிரணாப்க்கு எதிராக மேலும் ஒரு புதிய குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
பிரணாப் முகர்ஜி, மேலும் இரண்டு ஆதாயம்தரும் பதவிகளில் உள்ளார். அந்தபதவிகளை அவர் ராஜினாமா செய்யவில்லை என புகார் கூறப்பட்டுள்ளது. ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணிய சாமி உள்பட மூன்று பேர்கொண்ட குழு, தலைமைதேர்தல் அதிகாரியை சந்தித்து ஜனாதிபதி தேர்தலை நடத்தும்_தேர்தல் அலுவலர் மீது அதிருப்திதெரிவித்து மனு தந்தனர் .
அந்த மனுக்களில், பிரணாப் , பிர்பும் என்ஜினீயரிங் தொழில் நுட்ப கல்லூரி துணை தலைவரகாவும், ரவீந்திர நாத் பாரதி பல்கலை கழகத்தில் ஏற்படுத்தப்பட்ட ரவீந்திர பாரதி சொசைட்டி யின் தலைவராகவும் பதவி வகிக்கிறார். இவை இரண்டும் ஆதாயம்தரும் பதவிகள் ஆகும்.
இந்த இரு பதவிகளையும் இன்னும் அவர் ராஜினாமா செய்யவில்லை. இதன்மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ... |
இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ... |
ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.