பாகிஸ்தானின் மதவாத பயங்கரம் என்பது ஒரு மனித உரிமை மீறல்

பாகிஸ்தானின்   மதவாத பயங்கரம் என்பது ஒரு மனித உரிமை மீறல் பாகிஸ்தானில் இருக்கும் இந்துக்களின் மீது கடந்த 65 வருடமாக நடைபெற்றுவரும் மத மாற்றக் கொடூரம் நெஞ்சைப்பிழிவதாக இருந்து வருகிறது. சிலகோடியில் இருந்த இந்துக்களின் எண்ணிக்கை இன்று பலலட்சம் என்ற அளவில் வந்து விட்டது. இந்த கொடூரததின் தாக்கத்தை மக்கள் முன் கொண்டு வந்த பத்திரிகைகளுக்கு மனித

சமுதாயம் நன்றிசொல்ல கடமைப்பட்டுள்ளது. உண்மையை உலகறியச்செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தி ய பத்திரிகைகளை இந்து முன்னணி பாராட்டுகிறது.

இஸ்லாத்தில் வன்முறைக்கு இடம் இல்லை என்பார்கள். ஆனால் பயங்கரவாதச்செயலில் ஈடுபட்டு மனித உயிர்களைக்கொன்று குவிப்பவன் கையில் குரானைத்தான் தூக்கிப்பிடிக்கிறான். அதனை முஸ்லீம் அரசியல் வாதிகளோ, முஸ்லீம் மதகுருக்களோ கண்டிப்பதில்லை, அவனுக்கேதிராக ஃபத்வா வழங்குவதில்லை. ஆனால் முஸ்லீம்_அல்லாதவர்கள் தவறுதலாக செய்து விட்டால் மதவெறியை தூண்டி கலவரத்தை உருவாக்கி_வந்துள்ளார்கள். ஏன் இந்த இரட்டைவேடம்.

கட்டாய மத மாற்றத்திற்கு இஸ்லாத்தில் இடமில்லை என குரானிலிருந்து மேற்கோள்காட்டும் முஸ்லீம் அரசியல் கட்சி தலைவர்கள் 30 வருடங்களுக்கு முன்னர் தமிழகத்தில் தென்காசி, இராமநாதபுரம் போன்ற பகுதிகளில் ஆசை வார்த்தைகாட்டி, அச்சுறுத்தி ஒருலட்சம் பேரை மதமாற்றம் செய்ய முயன்ற போது கண்டிக்கவில்லை. அதற்குத்தலைமை தாங்கியவர்களின் வாரிசுகள் தான் இன்றைய முஸ்லீம் அரசியல் வாதிகள். அந்த சூதாட்டத்தை இந்து முன்னணி தேசிய, ஆன்மீக பெரியோர்களின் ஒத்துழைப்பால் தடுத்துநிறுத்தியது. முஸ்லீம்களின் ஆசைக்கு_பலியானவர்கள் இன்றும் துன்பத்தையே அனுபவிகிறார்கள். இதனை உலகிற்கு உணர்த்திட பலநூல்களும் வெளி வந்துள்ளன. இவர்கள் இன்று வடிப்பது முதலைக்கண்ணீர் என்பதை மக்கள் உணர்வார்கள்.

முஸ்லீம் மதத்தில் கட்டாய மத மாற்றத்தை ஏற்க்கவில்லை என்பவர்கள் முன்பு கட்டாய மதமாற்ற தடைச் சட்டம் கொண்டுவந்தபோது ஏன் எதிர்த்தார்கள். இஸ்லாத்தில் இருப்பதை வரவேற்கத்தானே செய்யவேண்டும். முஸ்லீம் அரசியல்வாதிகளின் சந்தர்ப்பவாதபேச்சை இந்து முன்னணி கடுமையாக கண்டிக்கிறது.

மத மாற்றத்தை தடுக்கதவறியது மட்டுமல்ல, அதற்குத்துணை போவதும் மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு தான்.

பாகிஸ்தானில் நடை பெறும் மதவாத பயங்கரம் என்பது மனித_உரிமை மீறல். இதனை பாரத அரசு கடுமையாக எதிர்க்கவேண்டும். இந்துக்கள் மீது நடத்தப்படுகின்ற வன் முறையையும், இந்து பெண்கள் கடத்தபடுவதையும், இந்துக்கள் கட்டாய மத மாற்றத்திற்கு ஆளாவதையும் தடுக்க உலக நாடுகளின் ஆதரவைப்பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

நன்றி ; இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் இராம கோபாலன்

One response to “பாகிஸ்தானின் மதவாத பயங்கரம் என்பது ஒரு மனித உரிமை மீறல்”

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வேப்பம் பூவின் மருத்துவக் குணம்

வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ...

முட்டைகளின் மருத்துவக் குணம்

கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ...

காரட்டின் மருத்துவ குணம்

காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ...