நாட்டின் முதல் பெண் ஜனாதிபதி எனும் பெருமையுடன் பதவியேற்று . ஐந்தாண்டுகள் ஜனாதிபதியாக பதவிவகித்த பிரதிபா பாட்டில், நேற்று அப்பதவியிலிருந்து ஓய்வுபெற்றார். பதவி காலத்தில் அடிக்கடி வெளிநாட்டு பயணம் செய்து 206 கோடி ரூபாய் அரசுக்கு செலவு வைத்தது இவரது சாதனையாக கருதபடுகிறது.
பிரதிபா பாட்டில் ஐந்தாண்டுகளில் பன்னிரண்டு முறை , 22 நாடுகளுக்கு சென்று . 79 நாட்கள் வெளிநாடுகளில் தங்கியுள்ளார் . இதற்காக அரசு சார்பில் 206 கோடி ரூ செலவிடப்பட்டுள்ளது , இந்திய ஜனாதிபதிகளிலேயே இவர்தான் அதிகம் செலவு செய்ததாக கூறபடுகிறது சோனியா காந்தியின் தேர்வல்லவா இப்படித்தான் இருக்கும். முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், தனது பதவி காலத்தில் 7 முறைமட்டுமே வெளி நாட்டு பயணம் மேற்கொண்டார்.
பிரதிபா பாட்டில், தனது பதவி காலத்தில், 39 கருணை மனுக்களின் மீது நடவடிக்கை மேற்கொண்டார் .அனால் 2001ல் பார்லிமென்ட் தாக்குதலில் மரண தண்டனை பெற்ற பயங்கரவாதி அப்சல் குருவின் கருணை மனு நிலுவையிலேயே உள்ளது . ஒருகருணை மனுதாரர் இறந்து 4 ஆண்டுகள் கழித்து அவரது தூக்கு தண்டனையை, ஆயுள் தண்டனையாக குறைத்தது ஒரு சாதனை என கூறலாம்
பொதுவாக ஜனாதிபதி தனது பதவி காலம் முடியும் முன்பு அவர் தான் விரும்பும் ஊரில் 4000 சதுர அடி பரபரவில் நிலம்வாங்கி வீடு காட்டிக்கொள்ளலாம். ஆனால் இவரோ புனேவில் கட்டப்பட்டு வரும் பங்களாவுக்கு இந்திய ராணுவத்துக்கு சொந்தமான 26,000 சதுர அடி நிலத்தை அரசின் அனுமதியோடு வாங்கியுள்ளார் எனத்தெரிகிறது. அதாவது விதிமுறையை விட, ஆறு மடங்கு அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது
சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ... |
அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ... |
பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.