பெர்முடா முக்கோணம்

பெர்முடா, ப்ளோரிடா, போர்டேரிகோபெர்முடா முக்கோணம் வட அட்லாண்டிக் கடலின் மேல்பகுதியில் உள்ளது இது பெர்முடா, ப்ளோரிடா, போர்டேரிகோ பகுதிகளுக்கு இடைப்பட்ட ஒரு முக்கோண வடிவ கடல் பகுதியாகும் . இந்தப் பகுதியில் பல விமானங்கள் மற்றும் கப்பல்ககள் எந்த வித மனித தவறுகள் , இயந்திர கோளாறு, இயற்கை சீற்றம் இவை எதுவும் இல்லாமல் மர்மமான நிலைகளில் காணமல் போவதும், விபத்துகுள்ளவதும் புரிந்து கொள்ள இயலாத புதிராக இருக்கிறது.

இந்த மர்மம் முதன் முதலில் வெளிச்சத்துக்கு வந்தது 1945ம் ஆண்டுதான்,1945ம் ஆண்டு பயிற்சிக்காக புறப்பட்டு சென்ற அமெரிக்க கடற்படையை சேர்ந்த flight19 எனும் விமானம் அட்லாண்டிக் மீது பறக்கையில் மறைந்து போனது. போர்க்கப்பலில் இருந்து விமானப் பாதை, கிழக்கே 120 மைல்*, வடக்கே 73 மைல்கள்* பின் மீண்டும் இறுதியாக 120 மைல்* பயணத்தில் கடற்படை தளத்திற்கு திரும்புவது என்று திட்டமிடப்பட்டிருந்தது,

வானிலை காரணமாக விமானம் விபத்துக்குள்ளகி இருக்கலாம் என்று அனைவரும் கருதினர். ஆனால் வானிலை ஆரய்ச்சியின் படி அன்று வானிலை மிக அமைதியாக இருந்ததாகவும், அந்த விமானத்தை ஒட்டிய விமானி மிக அனுபவசாலி என்றும் கூறப்பட்டது.

இதனை தொடர்ந்து காணாமல் போன விமானத்தை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது விமானத்தை தேடி 13 பேர் கொண்ட மீட்பு குழு ஒன்று இன்னொரு விமானத்தில் புறப்பட்டு சென்றது ஆனால் பயிற்ச்சி விமானத்தை போல மீட்பு விமானமும் மாயமாக கானாமல் போனது.இன்று வரை இரண்டு விமானங்ககளுகும் அதில் பயனித்தவர்களுகும் என்ன ஆனது என்பது யாருக்கும் தெரியாது.

அமெரிக்கா மற்றும் ரஷ்ய விஞ்ஞானிகள் கூட்டாக பெர்முடா முக்கோண மர்மம் பற்றி ஆராய, நவீன கருவிகளுடன் சென்றனர். இந்த ஆரய்ச்சி குழுவில் இருந்த 16 பேர் ஏதோ ஒரு விசையால் செலுத்தப்பட்டவர்கள் போல் திடீரென்று மூழ்கி போயினர். எப்படி மூழ்கினர் என்று மற்றவர்களால் கண்டுபிடிக்கவே முடியவில்லை.

பல ஆய்வுகளின் படி இதுவரை சுமார் 40 கப்பல்களும் , 20 விமானங்களும், சிறு சிறு மரக்கலகளும் இதுவரை பெர்முடா முக்கோணம் பகுதிகளில் கானாமல் போனதாக தெரியவருகிறது,

இந்த மாய மர்மங்களுக்கு பலர் பல வித விளக்கம் அளித்துள்ளனர். இதில் சிலரின் கருத்து பின்வருமாறு;

1.அமெரிக்க ஜோதிட நிபுணர் ஒருவர் அந்த பரப்புக்கு கீழ் உள்ள ஒரு சக்தி மையத்துனால இது நடைபெறுவதாக சொல்லிருக்கார்.திரும்பவும் அந்த பொருட்களை மீட்க முடியும் என்றும் சொல்கிறார்.

2. பெர்முடா முக்கோண பகுதியின் நேர் மறுபுறம் இருக்கும் ஜப்பான் நாட்டு தென் கிழக்கு கடற்பகுதி ‘பிசாசுக் கடல்’ என நீண்ட காலமாக அழைக்கபட்டு வருகிறது. அது மட்டுமல்ல- பிசாசுக் கடல் பகுதிகளிலும் பல கப்பல்கள் மாயமாக மறைந்திருக்கின்றன. இந்த இரண்டு பகுதிகளிலும் காந்த முள் மாறுபாடு மிகக் குறைவாகவே உள்ளது. எனவே இந்த 2 கடல் பகுதிகளின் மாயத்திலும் ஏதோ ஒரு தொடர்ப்பும் பொது காரணமும் இருக்கவேண்டும்.

3. பூமியின் புவியீர்ப்பு விசை இந்த பகுதியில் அதிகமாக இருக்கலாம் என் கருதப்படுகிறது,

4, பல 100 -ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் இருந்த தீவு பகுதி ஒன்று கடலில் மூழ்கி இருக்க வேண்டும். அளவுக்கதிகமான நீர்சுழற்சி காரணமாக இப்படி நடைபெறுகிறது என் கருதப்படுகிறது.

5. மனிதனை விட தொழில்நுட்பத்திலும், அறிவிலும் மேலோங்கி இருக்கும் வேற்று கிரக மனிதர்களின் ஆராய்ச்சி-பகுதியாக இது இருக்கலாம் என சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்

பெர்முடா முக்கோணம் பற்றிய வீடியோ செய்திகள்

One response to “பெர்முடா முக்கோணம்”

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நவ.30 ஆம் தேதிவரை ...

மிரட்டும் எலி காய்ச்சல்

மிரட்டும் எலி காய்ச்சல் கேரளாவில் லெப்டோஸ்பிரோசிஸ் (எலி காய்ச்சல்) தீவிரமாக பரவிவருகிறது. இந்த ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா ந ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து விடுபடும் 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங் ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பலஆண்டுகளாக ஏற்றப்பட்டு ...

மருத்துவ செய்திகள்

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...

வாய் துர்நாற்றம் குணமாக

எலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று 5 ...

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...